குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

காரர்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூபா ஒரு கோடி மட்டுமே தேவை: நிர்வாகிகள் தகவல்

25.01.2049-07.02.2018-உலகப் புகழ்பெற்ற கார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி தனது இறுதி இலக்கை நெருங்கிவிட்டது.  இதற்காக கார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு செலுத்தவேண்டிய மொத்த ஆதார நிதியில் இன்னும் ஒரு கோடி மட்டுமே தேவை என்ற உற்சாகமான உச்சக்கட்டத்தை நிதி திரட்டும் பணி நெருங்கிவிட்டதாக நிர்வாகிகள் கூறினர்.

மேலும் வாசிக்க...
 

குமரிக் கண்டம் இருந்திருக்கிறது! சான்று தருகிறார் தென்னாப்ரிக்க நிலவியல் வல்லுனர்!!

24.01.2049-06.02.2018-குமரி முனைக்குத் தெற்கே ஒரு பெருங்கண்டம் இருந்தது என்பதற்கு மீண்டும் ஒரு சான்று கிடைத்துள்ளது. மொரீசியசு நாட்டில் சமீபத்தில் நடந்த ஆய்வில், கடலுக்கடியில் மிகப் பெரிய கண்டம் இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்ரிக்காவின் யோகன்னசுபர்க் நகரில் உள்ளது விட்வாட்டர்சுரேண்டு என்ற பல்கலைக்கழகம். இந்த பல்கலையின் நிலவியல் வல்லுனரான லெவிசு ஆஷ்வால் என்பவர் தலைமையில் ஒரு குழு மொரீசியசு நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஆய்வு நடத்தியது.

மேலும் வாசிக்க...
 

ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு சான்று. 3.85.000 இலட்சம் ஆண்டு பழைய ஆதாரம் கண்டுபிடிப்பு!

22.01.2049-04.02.2018- சென்னையில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தொலையில் இருக்கும் அதிரம்பாக்கம் பகுதியில் 3,85,000 ஆண்டுகள் பழைமையான கற்கள் கண்டுபிடிப்பு. இதன் மூலமாக ஆதி மனிதன் ஆப்ரிக்காவில் இருந்து ஆசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி ஆகியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் அதிரம்பாக்கம் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால கற்களை வைத்து ஆராய்ந்த போது. இந்தியாவில் வாழும் மக்கள் இங்கேயே தோன்றி, வளர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. இதுநாள் வரை மானுடவியலாளர்கள் தெற்காசிய பகுதியில் வாழும் மக்கள், ஆப்ரிக்காவில் தோன்றி அங்கிருந்து, இங்கே புலம்பெயர்ந்தவர்கள் என்றே கூறியும், நம்பியும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க...
 

தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமுனிவர்...!!!

30.01.2018-தமிழுக்காக பாடுபட்டவர்களை தமிழினம் என்றும் மறக்காமல் போற்றும்.அந்த வகையில் இத்தாலி நாட்டை சேர்ந்த கிருத்துவ மதபோதகரான கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi) அவர்களை தமிழினம் என்றுமே நினைவில் வைத்துக் கொண்டாடும்.

மேலும் வாசிக்க...
 

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன.

17.01.2049-29.01.2018-ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்துமத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 7 - மொத்தம் 106 இல்