குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, வைகாசி(விடை) 24 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கிட்லரும் ஈபாவும் தற்கொலை செய்துகொண்ட நாள்.30.04.1945

30.04.2019- 74 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாளில் (30.04.1945) இந்த  இணையர் தற்கொலை செய்து கொண்டனர் என சொல்லப்படுகிறது.அந்த தம்பதிகளின் பெயர் கிட்லர் மற்றும் ஈவாபிரவுன். #யுலியசு(ஸ்)சீசர் #மகா_அலெக்சாண்டர்#மாவீரன்_நெப்போலியன் இவர்கள் வரிசையில்#சர்வாதிகாரி_கிட்லர்.

போலந்தில் கிடலர் நடத்திய தாக்குதல்

இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்தது.

நெப்போலியனைப்போல் பல நாடுகளை கைப்பற்றி ஒரு பேரரசை நிறுவியவன் கிட்லர்.

தான் கைப்பற்றிய நாடுகள் என்றில்லாமல் உலகத்திலேயே யூதர்கள் இருக்க கூடாது என்றான் அதற்கு வதைமுகாம்களை அமைத்தான். தன் ஆரிய இனம் தான் நாட்டை ஆளவேண்டும் என்றார்.

சனநாயகம் வழி வந்து சர்வாதிகாரத்தை நிறுவினான்.

முதல் உலகப்போரில் நசுங்கி கிடந்த யெர்மனியின் மானத்தை திருப்பி அதற்கே தந்தவன் கிட்லர்.

உலகை ஆளவேண்டும் என இவன் நினைத்ததன் விளைவே இரண்டாம் உலகப்போர்.

தன் ஆண்டை நாடுகளையெல்லாம் கைப்பற்றி விட்டான். எதிரிநாட்டுப்படைகளையும் தகர்த்துவிட்டான். இரசியாவை கைப்பற்ற வேண்டும் என ஆசைப்பட்டான்.

இரசியாவின் வானிலை அறியாமல் இரசியாமீது படையெடுத்தான். நெப்போலியன் செய்த அதே தவறை இவனும் செய்தான். இரசியர்களை கிட்லர் படை தோற்கடித்தது. ஆனால் இரச்யாவின் பனி

கிட்லரின் பணியை

செய்யவிடாமல் தடுத்து யெர்மானியப்படைகளை தோற்கடித்தது.

இதனை அறிந்த கிடலர் தனது BUNKER'S HILL ல் ஒளிந்துக்கொண்டார்.

 

இவர் சொகுசாக பதுங்கிக்கொண்டு குளிரில் சாககிடக்கும் படைவீரர்களுக்கு கட்டளை கொடுத்துக்கொண்டிருந்தார்.

ரஷ்யப்படை யெர்மானியர்களை தன் நாட்டில் இருந்து விரட்டி யெர்மனிக்குள்ளும் நுழைந்தது.

அங்குள்ள வதைமுகாம்களை தகர்த்தெரிந்தது.

 

கிடலர் ஒளிந்திருக்கும் இடத்தை தேடினார்கள் இரசியப்படை.

அவர்கள் கண்டுபிடிக்க நேரம் ஆனது.

அதற்குள் கிட்லருக்கு

அனைத்துச்செய்திகளும் தெரிந்துவிட்டது.

இனிமேலும் தன்னால் தன் நாட்டை காப்பாற்ற முடியாது என தெரிந்துக்கொண்டார் ஹிட்லர்.

கிட்லர் வெகுநாளாக காதலித்த தன் காதலியும் அந்த பதுங்குக்குழிக்குள் தான் இருந்தார்.அவரிடம் உனக்கு என்ன ஆசை என்று சொல் அதைத்தீர்த்து வைக்கிறேன் என்றார்.

அதற்கு கிட்லரின் காதலி ஈவா உங்களை திருமணம் செய்ய வேண்டும் என்றும் உங்களுடனே நான் சாகவேண்டும் என்றாள்

சரி என்றார் கிட்லர்

அந்த பதுங்குக்குழி திருமண மண்டபமாக மாறியது.

தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் கிடலர்.

திரமணத்திற்கு பிறகு 40 மணிநேரமே

ஈவாவும் கிட்லரும் உயிருடன் இருந்தனர்.

30.04.1945 பல மணிநேரம் யோசித்த பிறகு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தனர் கிட்லரும் ஈவாவும்.

தன் பிரதமர் பதவியை பொய் பிரச்சாரத்தின் மன்னன் என இன்று வரை போற்றப்படும் கோயபெல்சீக்கு கொடுத்தார் கிட்லர்.

கிட்லர் சொன்னார் நான் இறந்த பிறகு என் உடலைக்கூட இரசியர்கள் எடுத்துச்சென்றுவிடக்கூடாது என்றார்.

தற்கொலைக்கு தயாரானார்.

கிட்லரும் அவரது மனைவியும் ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்தினர்‌.

சில நேரம் கழித்து துப்பாக்கி சத்தம் கேட்டது. அங்குள்ளவர்கள் கதவை திறந்து உள்ளே சென்ற போது

கிட்லர் கையில் துப்பாக்கியும்

ஈவாவுக்கு அருகில் சைனைட் டப்பாவும் இருந்தது.

 

இரசியப்படை வருவதற்குள் கிட்லரின் உடலை எரித்தனர். இசியப்படை ஏமாற்றத்துடன் கிட்லரின்

சாம்பலைக்கூட எடுத்துச்செல்ல முடியாமல்போனது.......

 

இதுதான் நடந்தது என பல வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.

சிலர் அவர் தப்பிச்சென்றுவிட்டார் எனவும் கூறுகிறார்கள்.

ஆனால் பெரும்பாலோரின் கருத்து இதுவே...தற்கொலை செய்து கொண்டார் என்பதே.

மாபெரும் பேரரசை நிறுவிய கிட்லரின் வாழ்க்கையும் வீரமும்  அன்றுடன் முற்றுப்பெற்றது.