குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகைச் சுற்றிவரும் சூரியன்! அறிவியல் உலகின் முதல் சர்ச்சை

12.03.2019-சூரியன் தான் பூமியை சுற்றி கொண்டிருக்கிறது என்று நம்பி கொண்டிருந்த காலத்தில், பூமியும் மற்ற கோள்களும் தான் சூரியனைச் சுற்றி வருவதாக கோபர்நிகஸ் கூறியபோது பெரும் சர்ச்சை வெடித்தது.

பூமி தான் பிரபஞ்சத்தின் மத்தியில் இருக்கிறது, சூரியன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பூமியைச் சுற்றி வருகின்றன என்று அரிஸ்டாட்டில் கூறியதையே சமகால வானியலாளர்கள் நம்பிவந்தனர்.

இந்நிலையில், 1543ல் மரணப் படுக்கையில் இருந்த போலந்து வானியலாளர் நிகோலஸ் கோபர் நிகஸ், பிரபஞ்சத்தில் சூரியன் தான் மையத்தில் இருக்கிறது என்ற கொள்கையை வெளியிட்டார்.

அறிவியல் உலகில் பின்னாளில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இந்த உண்மை அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக மேற்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவந்த வாடிகனில் உள்ள கத்தோலிக்க மதத் தலைமையகம் இந்தக் கொள்கையை ஏற்கவில்லை.

இந்நிலையில், கோபர்நிகஸ் தன் கருத்தை பதிவு செய்து 70 ஆண்டுகளுக்குப் பின்னால், சூரியனே பிரபஞ்சத்தின் மையம் என்று இத்தாலியைச் சேர்ந்த புரூனோ கூறினார்.

இதையடுத்து அவருக்கு எதிராக வாடிகன் சபை விசாரணை நடத்தி, தான் சொன்னதெல்லாம் தவறு என்று சிலுவையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டால், விடுவிக்கப்படுவாய் என்று புரூனோவிடம் கூறியது.

ஆனால் தன் கருத்தில் இருந்து புரூனோ பின்வாங்க மறுத்ததால் அவர் 1600ல் எரித்துக் கொல்லப்பட்டார்.

பின்னர் "சூரியனே மையம்" என்ற கருத்தை கலிலியோ முன்வைத்தபோது, அவரும் வாடிகன் சபையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுசிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் இவ்வளவு தடைகளையும் மீறி, சூரியனே மையம் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இந்த அறிவியலாளர்கள் உலகுக்கு தெரியவைத்து வரலாற்றில் என்றும் அழியாத இடத்தை பிடித்துள்ளனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.