குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகில் அதிகம்படித்தவர்களே பணம்பற்றி மட்டுமே எண்ணுகின்றார்கள். உலகசிதைவுக்கு இதுவேகாரணம்.

01.01.2019-பாமரமக்கள் படிக்காதவர்கள் எனப்படுபவர்கள் உணவுபற்றியும் உலகம்பற்றியும் எண்ண. படித்தவர்கள் மற்றவர்களைவிட  தாம் எந்த எந்த விதத்தில் உயர்திருக்கலாம்  அதற்காக என்னவெல்லாம்  செய்யலாம் என்று எண்ணும் போது பல தீயவை  ஆரம்பிக்கின்றன. ஏழைகள்  உணவுக்காக  இயற்கையை நம்புகின்றார்கள் இதனால் அவர்கள் இயற்கையில் உலகில் சமூகுத்தில் அக்கறையுள்ளவர்களாக வாழ்கின்றார்கள்.

 

உலககல்வியில் முகாமைத்துவம். மருத்துவம் அனைத்துதுறைகளும் நல்லனமாதிரித்தோன்றினாலும் பணத்திற்கு அடிமைப்படும் அடிப்படைகளை  கல்வி உலகம் ஊட்டிவிட்டது. இயற்கையான நீரை விலைகொடுத்து வாங்க வைத்துவிட்டான்  மனிதன். இயற்கையான  நீர்நிலைகள் குன்றிவிட்டன.இருந்தாலும்  பயன்படக்கூடியனவாக  அவை இல்லை அதனை  ஆக்கியவன் மனிதன். மனிதன் என்ற பெயர் இனியும்  பொருந்துமா  மாற்றவேண்டும் என்ற  நிலை  தோன்றிவிட்டது.

பொருளாதார நிலைகள் பணக்காரவர்க்கத்திர்களுக்கான  ஆடம்பரவாதிகளுக்கான  முதலாளிகளுக்கான  உலகாக மாற்றப்பட்டுள்ளது. உணவு  உற்பத்தி செய்பவனை விடவும் ஆடம்பரப்பொருட்கள் மனிதனுக்கு அவசிம் என்று இல்லாதவைகளை  உற்பத்தி செய்யும்  நாடுகளே முன்னணி நாடுகளாக  உயர்ந்துள்ளன.

ஏனைய நாடுகளும் அதனைப்பின்பற்ற முனைகின்றன  உலகு இனிமீள வாய்ப்புண்டா? வசதியான  மனிதன் வேறு உலகில் வாழ எண்ணத்தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

இந்தநிலையில் புதியாண்டில் உயர்ந்த எண்ணங்கள் பெற்று மனிதர்கள் வாழக்கூடிய உலகைப்பற்றிசிந்திப்போர்களே நல்ல அறிவாளிகள் அவர்களை உருவாக்குவதே உலககல்வி  ஒழுங்காக மாறவேண்டும். இன்று  இன்றை  உலமக்கள் கொண்டாடும் 2019 ஆண்டுப்பிறப்பில் அதுபற்றி எண்ணுவோம்.

சிறுவர்களுக்கு கற்பிப்போருக்கு போதனைகள் செய்யும் பெரியோர்களுக்குஇந்த எண்ணங்களை உலகில் வளர்க்க என்வெல்லாமஹ் செய்யலாம் என்ற உயர்ந்த நல்ல மனித எண்ண ஊற்றுகள் தோற்றவேண்டும் இல்லையேல் வளமான மனிதர்களென்று எண்ணி வாழமுடியாத உலகை விரைவில்  உருவாக்குவோம் என்பதை  உணர்வோம்.

பூநகரி பொன்னம்பலம்.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து -01.01.2019

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.