குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

சிலப்பதிகாரம் காட்டிய ஆடற்கலை அரங்கில் அத்தகுதிதனை நிலைநிறுத்தி முடிசூடினாள் சுவிசுதமிழிச்சி!வழங்கிய

ஐ. பி.சி த் தமிழ் படைத்தது புதியவரலாறு. 09.12.2018- கனடா ஐரோப்பா  தழுவிய நாட்டியத் திறன்தேர்வும் தங்கக்குரல்த்தேர்வும் அரையாண்டுகாலமாக பலசுற்றுகளாக அத்துறைகள்சார் நடுவர்களால் மதிப்பிடப்பட்டு 08.12.2018 அன்று நள்ளிரவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு ஒரு கிலோ தங்கமுடியும்   தங்கம் குவியலாக ஈழத்தமிழர்களுக்கு பரிசுகளாக வாரிவழங்கப்பட்ட சிறப்பான நாள்இன்று. குசு(ஸ்)ப்புவிற்கு தங்கச்சங்கிலிகள் வீசியகாலம் வெட்கப்படவேண்டியகாலம் அன்று!அரசர்கள் காலத்தில் சிறிய பொற்கிளிகள் தான் வழங்கப்பட்டது.சிலப்பதிகாரகாலத்தை மிஞ்சிய தமிழர்காலம் உலக அளவையில் ஒரு கிலோ தங்கம் பெற்றாள். சுவிற்சர்லாந்து ஆடற்கலை உடு ! 

ஆடற்கலை மூலம் இத்துறையில் விண்ணைத்தொட்ட கலைஞர்களை வியக்கவைத் இலங்கைத்தமிழிச்சி சுவிசு சூரிச் விண்மீண் திருக்குறளாய் சிலப்பதி காரமாய்தன்னிகரில்லாத்தமிழ்க்கலையாய்ச்சுழன்றாள் மிளிர்ந்தாள் ஒளிர்ந்தாள் ஒருகிலோ தங்கமுடிதனை தன்தலையில் தகைசார் நடுவர்களின் தீர்ப்பின் மூலம் பெற்றாள். பெருமை பெருமை இந்தநாட்டின் ஆடற்கலைஞர் அத்தனை பேரும் மகிழும் தரணம் இது!!

இவள் சாமகானம் தந்த தமிழிசை தந்த இலங்கை வேந்தன் இராவணன் வாழ்ந்த மண்ணின் மதிவதனி சுதாகரன் அவர்களால் ஆக்கப்பட்டாள். ஆயிரத்தி தொளாயிரத்தி தொண் ணுாற்று  மூன்றில் காலடிவைத்து தளமமைத்து தரம்மிக்க ஆசான் அஞ்சாநெஞ்சோடு  உறுதியுடன் ஆண்டுகள் கடந்து அடிபணியாமல் ஆற்றல்மிக்கோருடன் இணைந்து பணியாற்றி பாகுபாடற்ற மனதின் திண்ணியத்தால் ஈழத்தமிழன் சாதனை படைத்தான். தங்கத்தை தளத்தில் கொண்ட பாராளுமன்றத்தைக் கொண்ட சுவிசு திருநாட்டிலிருந்து வேற்று நாட்டார் தங்கமுடியைப் பெற்றுச்செல்ல விடலாமா! அதைவிடப் பெறுமதி யாய் மதித்து முப்பது ஆண்டுகளாய் வளர்த்தத தமிழ்கலை உண்மைகள் பொய்யாகுமேர்! பனியில் நனைந்த மேனிகள் தாங்குமோ!! சரளமாய் தமிழ் பேசும் தங்க நாக்குகள் தமிழ்கேட்ட செவிகள் தமிழ்க்கலை பார்த்து சளைக்காமல் விழித்திருக்கும் தமிழ் விழிகள் தங்கள் புருவத்தை உயர்த்தியே வைத்திருந்தன !!! உயர்வுமிகு புகழ்மிக்க கலையரசியானாள் சுவிசுமகள்.அத்தனை உயர்வினைப்பெற்றாள்.

நடனக்கலை இந்தியாவில் உச்சம் பெற்றிருந்தாலும் அதற்காகன உயர்விருது விழா சுவிற்சர்லாந்தில் தான் நடந்துள்ளது. அது சார்ந்த தகுதி மிகுகலைஞர்கள் ஒன்றுகூடி வியப்பு மிக்க பெருமைக்குரிய விழாவாக உலகத்தமிழரின் தமிழ் ஊடகமான ஐ.பி.சி தமிழ் உலகவரலாறு படைத்தமை உண்மையில் உயர்வானது. முல்லை மைந்தன் கந்தையா பாசுகரன் அவர்களின் வணிகமூளையில்  கலையுணர்வும் கலந்திருக்கு வாரலாறு சாதிக்க வன்னிமண்  திறன்கொடுத்திருக்கு அனைத்து தமிழனையும் ஒருங்கிணைத்திருக்கு துறைசார் சாதனைகளை ஈழத்தமிழன் படைக்கத்தொடங்கிவிட்டான் ஏழைத்தமிழன்  தமிழன் மண்ணை இழந்த தமிழன் விண்ணை முட்டுகின்றான். ஏக் கே துாக்கியவனை விட்டு துாசி துடைகக்கப் போனவனைக் காறியே துப்புங்கள் என்றவரிகள் காதுகளைத்துளைத்தன அன்று. இன்றோ துாசிகள் துடைக்கப் புறப்பட்டவர்கள்தான் தமிழ்துாண்களை நிறுத்துகின்றனர். கோழ்களின் நிலைகள் மாறலாம் அவைகளின் விசைகள் மாறு வதில்லை. அப்படியே ஈழத்தமிழன் நிலை தொடர்கிறது. வாழ்க நாட்டிய உடு. புகழ்கொடுத்த சுவிற்சர்லாந்தே தமிழ்மக்களே ஒருகணம் இதயம் கனத்தது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.