குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 14 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு.தேர்தல் அறிவிப்பிற்கும் தடை!களற்று பிரதமரை.

13.11.2018-இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும், இலங்கை அதிபரின் அரசிதழ் அறிவிப்பை இலங்கையின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.இலங்கை அதிபரினால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும்  வகையில் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக சற்று முன்னர் உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது,

இதன்படி, இலங்கை அதிபரின் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான அரசிதழ் அறிவிப்பு எதிர்வரும் 19ஆம் நாள் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பையும் உச்சநீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

இந்த உத்தரவு தொடர்பான, எதிர்ப்பு மனுக்களை வரும் 19ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர், தாக்கல் செய்ய முடியும்.இந்த மனுக்கள் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள், டிசம்பர் 4ஆம் நாள் தொடக்கம் 6ஆம் நாள் வரை இடம்பெறும்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.