குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .

இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்த மேற்குலக பிரதிநிகள்-அன்பானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீள

13.11.2018- க் கட்டியெழுப்புவேன் – சந்திரிகாஇலங்கை வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம விடுத்த அழைப்பை எட்டு மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மேற்குலக இராயதந்திரிகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதாக இராயதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்கான கூட்டம் ஒன்றுக்கு கொழும்பில் உள்ள 43 நாடுகளின் தூதுவர்களுக்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம இன்று அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தக் கூட்டத்தை பிரித்தானியா, நெதர்லாந்து, நோர்வே, பிரான்சு, அவுசுரேலியா, தென்னாபிரிக்கா, இத்தாலி, மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் புறக்கணித்துள்ளனர்.

அதேவேளை, அமெரிக்கா, யேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் தமது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன. இந்தியா தனது இளநிலை இராயதந்திரி ஒருவரை இந்தக் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளது.

அதேவேளை, சீனா, கியூபா, ஆப்கானிசுதான், துருக்கி, பாகிசுதான் உள்ளிட்ட 20 வரையான நாடுகளின் தூதுவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாகஇலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, கடந்த வாரங்களில் இடம்பெற்ற அனைத்து நகர்வுகளும் அரசியலமைப்புச் சட்டத்தின்படியே முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எந்த நாடும் கொடைகள், சலுகைகள், கடன்களை நிறுத்துவது தொடர்பாக, கூறவில்லை என்றும், கூட்டத்தின் பின்னர் அவர் கூறினார்.

அன்பானவர்களுடன்  இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா

2015 சனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட மக்களின் அபிலாசைகளுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிலர், துரோகம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, அன்பானவர்களுடன்  இணைந்து கட்சியை மீளக்கட்டியெழுப்பப் போவதாக தெரிவித்துள்ளார்.

“ஏனைய பல கட்சிகள் குழுக்களுடன் இணைந்து நல்லாட்சியை கொண்டு வருவதற்கான  யுத்தத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றது.

சிறிலங்கா பொதுயன முன்னணியில் இணைந்து கொள்வதன் மூலம் சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க முனைகின்றனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து யார் விலகினாலும் நான் விலகமாட்டேன்.

கட்சிக்கு அன்பானவர்களுடன்   இணைந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.” என்று அவர்  தெரிவித்துள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.