குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, பங்குனி(மீனம்) 20 ம் திகதி புதன் கிழமை .

குமரிநாடு.நெற் இணையம் 2009 இல் ஆரமபித்தபோது எம்மைப்பற்றி....

குமரிநாடு.நெற் இணையம் 2009 இல் ஆரமபித்தபோது எம்மைப்பற்றி.... என்ற பகுதியில் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் அறியப்படுத்துகின்றேன்.

எம்மைப்பற்றி.....

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..
பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
மனம் நோகாது கருத்துச்சுதந்திரம் பேணுவோம்.

கருத்தை வெளிப்படுத்த உரிமையுண்டு..
கருத்தை நிராகாரிக்கவும் உரிமையுண்டு..
ஒரு கருத்தை கருவாகக்கொண்டு
சான்றோரிடம் இணைந்து ஆராய உரிமையுண்டு.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்.. அப்பொருள் 
மெய்பொருள் காண்பது அறிவு என்ற 
திருவள்ளுவரின் ‘‘குறளை”துணையாக கொள்வோம்.

ஒரு கருத்தை வெளிப்படுத்தல் அக்கருத்தை ஏற்றல் மறுத்தல் நிலையில் கோபம் கொள்ளல் பகைமை பாராட்டல் தேவையற்றது என்பதைப் புாரிந்துகொள்வோம்.

உடன்பாடுடைய கருத்துக்களால்
மகிழ்வதைவிடவும் முரண்பாடுடைய கருத்துக்களை உள்வாங்கும் போதும் 
வருத்தமைடையாது இருக்கப்பழகவேண்டும் இது நற்பண்புகளில் உயர்வானது.

03.1.2012-தமிழாண்டு2042 எதிர்வரும் தமிழ்ப்புத்தாண்டு14.01.2012-தமிழாண்டு2043
முதல் தமிழியக்கருத்துக்கள் தாங்கப்படும். போலித்தமிழ் உணர்வோ காரணத் தமிழ் உணர்வோ தமிழைக்காப்பாற்றாது. உண்மைத்தமிழுணர்வைப்பெறும் தமிழன் அதிகரிக்கப்படவேண்டும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.