குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்தியத் தூதரைச் சந்திக்க தொடர்ந்து தூது விடும் மகிந்த – நழுவும் புதுடெல்லி

30.10.2018 -இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த இராயபக்ச, இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு தொடர்ந்து, தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும், எனினும், தற்போதைய சூழ்நிலையில், அவரிடம் இருந்து விலகியிருக்க புதுடெல்லி முடிவு செய்திருப்பதாகவும், எக்கொனமிக் ரைம்சு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய, இந்திய அரசாங்க அதிகாரிகள் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில்,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிநீக்கத்தை  சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்.

இந்த நிலையில், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராயபக்ச, தனது நியமனத்தின் சட்டபூர்வ தன்மையை நிரூபிக்கும் வரையில், அவருடன் இந்தியா சந்திப்புகளை நடத்தவோ, தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தவோ- எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவோ விரும்பவில்லை” என்று கூறியுள்ளனர்.

மகிந்த ராயபக்சவுக்கு சீன அதிபர் அவசரமாக பாராட்டுத் தெரிவித்திருப்பதும், இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மக்களாதரவு, இரணிலுக்கு குறைந்து வரும் நிலையில், நாங்கள் யாருடனும் வியாபாரம் செய்யும் நிலையில் இருக்க வேண்டும். ஏனென்றால், விரையில் அங்கு தேர்தல்கள் நடைபெறும் என்றும் புதுடெல்லி அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.