குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, கார்த்திகை(நளி) 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

மகிந்த மைத்திரி இணைவு; இரணிலின் பதிலால் ஆத்திரமடைந்த ஐ.தே.க-யின் நாடாளுமன்ற உறுப்பினர்!

28.10.2018-சிறிலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனாவை சனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசியல் குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன,ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இரணில் விக்கிரம சிங்கவின் முன்னறிவித்தல் ஏதுமின்றி பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமை மற்றும் முன்னாள் அரச தலைவர் ராயபக்சவை புதிய பிரதமராக நியமித்தமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே சிறிலங்கா நாடாளுமன்றில் மைத்திரியை பதிவியிலிருந்து அகற்றும் நோக்கில் இந்த தீர்மானத்தை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்திருக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியில் தலைவரான இரணில் விக்கிரமசிங்கவுடன் இன்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலதுரையாடலின் போதும் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்கள் மாத்திரமின்றி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கு இரணில் விக்கிரமசிங்க உடனடியாக எந்த பதிலையும் தெரிவிக்காது பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியதால் ஆத்திரமடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நடவடிக்கைகளே மைத்திரி மகிந்தவை பிரதமராக்குவதற்கும் பிரதான காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

நம்பிக்கை துரோகம் செய்த மைத்திரியை சனாதிபதி பதவியிலிருந்து நீக்கியே தீர வேண்டுமென சூளுரைத்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணையை நாடாளுமன்றம் கூடியதும் சமர்ப்பிப்பதாகவும் திட்டவட்டமாக அறிவித்தனர்.

அலரி மாளிகையில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்த தீர்மானத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ளாத ரணில் விக்கிரம சிங்க இதற்கான யோசனை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளதாக மாத்திரம் கூறி நழுவிச்சென்று விட்டார்.

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டுமானால் முதலில் நாடாளுமன்றம் கூடப்பட வேண்டுமென ரணில் வலியுறுத்தினார்.

இதேவேளை சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வுகளை நவம்பர் 16-ம் திகதிவரை மைத்திரிபால சிறிசேனவால் இடைநிறுத்தி வைக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.