குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, பங்குனி(மீனம்) 20 ம் திகதி புதன் கிழமை .

யாழில் அரை மணித்தியால காதல்… ஐந்து நாள் தாம்பத்தியம்… ஏமாற்றப்பட்ட யுவதி!

பதவியை இழக்கப்போகும் மகிந்த? தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிரடி! 27.10.2018 இலங்கை தற்போது கொழும்பு அரசியல் மிக தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிரடி மாற்றங்கள், அதிரடி முடிவுகள் என பரபரப்பான கட்டத்தினை அடைந்துள்ளது.இந்நிலையில் சற்றுமுன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது அடுத்த அதிரடியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சிறப்பு பேச்சுவார்த்தையினை அடுத்து ஐந்து சிறுபான்மை கட்சிகளின் தமது ஆதரவினை இரணிலுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

இலங்கையில் அரசாங்கத்தை அமைப்பது என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இன்றி எந்தவொரு கட்சியினாலும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் இரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை ஏனைய சிறுபான்மை கட்சிகளும் இரணிலுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறலங்கா முசுலிம் காங்கிரசு, யாதிக கெல உறுமய மற்றும் அகில இலங்கை முசுலிம் காங்கிரசு ஆகிய கட்சிகள் தமது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தொங்கு பாராளுமன்றம் அமைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள சமகால பிரதமர் மகிந்த ராயபச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அரை மணித்தியால காதல்… ஐந்து நாள் தாம்பத்தியம்… ஏமாற்றப்பட்ட யுவதி!

26.10.2018-அறிமுகமற்ற வாலிபனால் காதலித்து ஏமாற்றப்பட்ட யுவதியொருவரின் முறைப்பாட்டால் இளவாலை கா.து தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள். யுவதியின் வாக்குமூலத்திலிருந்து காதலனை அடையாளம் காண முடியாத நெருக்கடி பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த யுவதியொருவருடன் ஐந்து நாள் உல்லாசமாக இருந்து விட்டு, தலைமறைவான வாலிபனையே அடையாளம் காண முடியாமல் கா.து திண்டாடுகிறார்கள்.

சாந்தை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான யுவதியொருவர் அண்மையில் வீட்டிற்கு அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றிற்கு சென்று வந்திருக்கிறார். வர்த்தக நிலையத்திற்கு சென்று வருவதற்குள் வீதியில் வாலிபர் ஒருவருடன் அறிமுகமாகி, தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார்.

அடுத்த சில நாட்கள் இருவரும் தொலைபேசியில் பேசி, காதல் வசப்பட்ட நிலையில், வீட்டைவிட்டு புறப்பட்டு காதலனுடன் சென்றுவிட்டார். மகளை காணாத பெற்றோர், இளவாலை கா.து நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

வீட்டைவிட்டு புறப்பட்டு வந்த யுவதியை இன்னொரு இடத்திற்கு அழைத்து சென்று, தாம்பத்தியம் நடத்தியுள்ளார் அந்த வாலிபர். ஓரிரு நாளின் பின்னர், தமது வீட்டிற்கே திரும்பி சென்று, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து வாழ்க்கை நடத்தலாமென யுவதி நச்சரித்திருக்கிறார். இதையடுத்து, யுவதி வீட்டை விட்டு புறப்பட்ட ஐந்தாம் நாள், திரும்பி வீட்டுக்கு வருவதாக தம்பதிகள் புறப்பட்டு வந்துள்ளனர்.

அப்போது, யுவதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை தான் அணிந்து வரப் போவதாக, புதுமாப்பிள்ளை கேட்டிருக்கிறார். யுவதியும் அதை கொடுத்தார்.

யுவதியின் வீட்டிற்கு அருகில்- மோட்டார்சைக்கிளில் ஏற்றிய இடத்தில்- இறக்கி விட்டுவிட்டு, அந்த இடத்திலேயே நிற்கும்படியும், சில பொருட்களை அருகிலுள்ள கடையில் வாங்கி வருவதாகவும் கூறி வாலிபர் சென்றிருக்கிறார். நீண்டநேரம் காத்திருந்தும், காதலன் திரும்பி வராததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அந்த யுவதி அறிந்துள்ளார்.

பின்னர் தனியே வீட்டுக்கு சென்றார்.

யுவதியை ஏமாற்றியது, தங்கச்சங்கிலியை திருடியது தொடர்பில் தற்போது இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எனினும், ஐந்து நாள் தாம்பத்தியம் நடத்திய காதலனின் முழுமையான பெயர், விபரம், தங்கியிருந்த இடம் எதுவும் யுவதிக்கு தெரியவில்லை. யுவதியை ஏமாற்றியவனின் தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விசித்திர முறைப்பாட்டால் இளவாலை பொலிசார் தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.