குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, பங்குனி(மீனம்) 20 ம் திகதி புதன் கிழமை .

பூநகரி பிரதேச செயலக பிரிவுட்குட்பட்ட அழகிய கிராமங்களிலொன்று அரசபுரம்.

26.10.2018-புரதான வரலாற்றுச் சின்னங்களை இது தன்னகத்தே கொண்டுள்ளது. அரசபுரம் என்ற பெயர் அல்லி அரசாண்ட காரணத்தினாலேயே ஏற்பட்டது என்று முன்னோர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் பழைய கட்டட இடிபாடுகளின் எச்சங்களாக இப்போதும் பல தொன்மைச் சான்றுகள் காணப்படுகின்றன.

அரசபுரத்தை அண்டிய அயற் கிராமங்களாக பழுவில், செக்காலை, கருமாரி, பத்தினிப்பாய் போன்ற கிராமங்களைக் குறிப்பிடலாம்.

இந்த அனைத்துக் கிராமங்களிலும் சிறியதாயோ பெரியதாயோ பல குளங்கள் காணப்படுகின்றன. இவற்றை சரியான முறையில் புனரமைத்தால் சிறப்பான விவசாயச் செய்கையை இங்கே மேற்கொண்டு சிறந்த பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் துரதிஷ்டவசமாக இங்கு குடியேறினவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. அதனால் இராணுவம் தமக்காக சுவீகரித்த காணியை மக்கள் குடியேறாததால் அதனை விட்டுப்போவதாயுமில்லை. அதனை மென்மேலும் விரிவுபடுத்துவதாயே தோன்றுகின்றது.

மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் சொல்லத்தக்க விதத்தில் எந்த அபிவிருத்திப் பணிகளும் இக்கிராமத்தில் முன்னெடுக்கப்படவில்லை. பிரதேசசபைக்குட்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்வது பிரதேச சபைக்குரிய பொறுப்பல்லவா!

ஆனால் அரசபுரம் என்ற கிராமம் இருப்பது பூநகரி பிரதேச சபைக்குத் தெரியவில்லைப்போல.

அரசபுரத்திலிருந்து மன்னார்_யாழ்ப்பாணம் பிரதான வீதிக்கு 5km தூரமே காணப்படுகின்றது. அந்த வீதியைச் செப்பனிட்டுத் தந்தாலே பெரும் உதவியாக இருக்கும். முக்கொம்பனிலிருந்து ஒன்பதாம் கட்டை வரையான வீதியைச் செப்பனிட்டால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைவர். ஆனால் பிரதேச சபையினரோ இதைக் காணாமலே இருந்துவருகின்றனர்.

அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எந்த வசதிகளும் இல்லாத அரசபுர வாழ் மக்கள் எல்லாவற்றிற்கும் பூநகரி வாடியடியை நோக்கியோ அல்லது சாவகச்சேரி நோக்கியோ பயணிக்க வேண்டியதாயுள்ளது.

17 மாணவர்கள் தினமும் முக்கொம்பன் மகாவித்தியாலயத்திற்கு சென்று வருகின்றனர். அத்துடன் அரசபுரம் வீதியுள்ள முக்கொம்பன் மாணவர்களும் சென்று வருகின்றனர். #சுரேஸ்_பிறேமச்சந்திரன் MP அவர்களின் உதவியினால் ஒரு அரச பேரூந்து இக்கிராமத்தினூடாகச் சென்று வருவதனால் மாணவர்களின் கல்வியில் தடங்கல் ஏதுமில்லை. இந்நேரத்தில் அவரை நன்றியுடன் நினைவுகூர்தலில் பெருமைப்பட்டுக் கொள்கின்றோம்.

இருபக்கமும் பற்றைக்காடுகள் சூழ்ந்திருப்பதால் அடிக்கடி பற்றைகளை வெட்டி அகற்றினாலே பேருந்து பயணிக்க முடியும். எனவே சிரமதானங்கள் மூலமாகவே சிறியளவில் இது துப்புரவு செய்யப்படுகின்றது. இதற்காக உதவியை நாம் நாடிநின்ற போது,

பற்றைக்காடுகளை வெட்டி வீதிக்கு கிரவல் இட்டுத் தருவதாக கிளிநொச்சியிலிருக்கும் MP ஒருவர் வாக்குக் கொடுத்திருந்தார். ஆனால் அது இற்றைவரை நிறைவேற்றப்படவில்லை.

இங்கு கல்வியிலும் மாணவர்கள் மேலதிக வகுப்புகளிற்குச் செல்லவோ கலை நிகழ்வுகளிற்கான பயிற்சிகளில் ஈடுபடவோ சந்தர்ப்பம் ஏதும் அமைவதில்லை. ஏனெனில் ஏகமாக எந்தப் பேரூந்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இருந்தும் இந்த பேரூந்து சிலவேளைகளில் பழுதடைகின்ற போது இம்மாணவர்கள் கால்நடையாகவே வீடு வந்து சேரவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.

அண்ணளவாக 60 ஏக்கர் அளகொண்ட பெரிய குளம் அரசபுரத்தில் உள்ளது. அதைத் தூர்வாரி மழைகாலங்களில் நீரைச் சேமிக்கத் தக்கவாறு குளக்கட்டினை உயர்த்தினால் பெருமளவான நீரினைச் சேமித்து வைக்கமுடியும். இங்கிருந்தே உவர்நீராகவுள்ள பூநகரியின் பிற இடங்களுக்கு நீரினைக்கூட விநியோகிக்க முடியும்.

எந்தவொரு அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படாத எங்களின் கிராமத்தை மக்களின் பிரதிநிதிகளே பார்வையிடுங்கள்.

நாலைந்து ஓட்டையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் காலத்தில் மட்டும் வந்து போபவர்களே! இந்த மாரி மழையில் நனைந்தே வாருங்கள். மண்வீதியில் கிடங்கு எதுவென்று தெரியாதளவுக்கு மழை பொழிந்த ஓர் நாளில் நடந்து பாருங்கள்.

 

எங்களின் பிரயாணம் எவ்வளவு கடினமானது என்பது உங்களுக்குத் தெரியும். பிரதேச அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எங்கள் கிராமத்தின் வீதியையாவது புனரமைப்புச் செய்யுங்கள்.

 

பூநகரி பிரதேசசபைத் தலைவராக இருக்கும் #ஐயம்பிள்ளை ஐயா அவர்களே

இது உங்களின் கவனத்திற்கு.

 

#நலன்விரும்பி

25_10_2018

Copy

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.