குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, பங்குனி(மீனம்) 20 ம் திகதி புதன் கிழமை .

புலம்பெயர் மக்களை அடிமைகளாக நடத்திய சுவிசு வாழ் இந்திய கோடீசுவரர்கள்: சிறை செல்வார்களா?

24.10,.2018-சுவிட்சர்லாந்தில் வாழும் பிரபல இந்திய கோடீசுவரக் குடும்பம் ஒன்று வேலையாட்களை வருடக் கணக்காக அடிமைகளாக நடத்திய விடயம் சமீபத்தில் வெளிவந்துள்ளது.சுவிசு குடியுரிமை பெற்ற இந்தியர்களான அந்த கோடீசுவரர்கள் இந்தியாவிலிருந்து வேலைக்கு ஆட்களை அழைத்துச் சென்று சுவிட்சர்லாந்து வந்ததும் அவர்களது கடவுச்சீட்டுகளை பிடுங்கி வைத்துக் கொள்வது வழக்கம்.

மிகக் குறைந்த சம்பளம், அதுவும் இந்திய ரூபாயில், அதுவும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியாவில் வழங்கப்படும்.

வீட்டை விட்டு பல ஆண்டுகளாக வெளியே செல்ல அனுமதிக்கப்படாத இந்த வேலையாட்கள், வாரத்திற்கு ஏழு நாட்கள், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ஓய்வின்றி வேலை செய்ய வேண்டும்.

உடல் நலமில்லாமல் போனால், மருத்துவ செலவுக்கான பணமும் அவர்களது சொற்ப ஊதியத்திலிருந்தே எடுத்துக் கொள்ளப்படும்.

அடிமைகள் போல நடத்தப்பட்ட வேலையாட்களில் ஒருவர் பொலிசாரிடம் புகாரளித்ததையடுத்து கா.து , யெனீவாவுக்கு வெளியே உள்ள Colognyயில் அமைந்துள்ள அந்த பிரபல கோடீசுவரரின் வீட்டை சோதனையிட்டனர்.

விசாரணையில் சுற்றுலா விசாவில் அழைத்து வரப்பட்ட அந்த வேலையாட்கள் ஒருவருக்கும் சுவிட்சர்லாந்தில் வேலை செய்ய உரிமம் பெறப்படவில்லை.

அவர்களை அழைத்து வந்த கோடீசுவரக் குடும்பத்திடம் விசாரித்தபோது, அவர்கள் வேலைக்காக அழைத்து வரப்படவில்லை, அவர்களும் குடும்பத்தினர்தான், வீட்டில் உதவியாக இருப்பதற்காக அவர்கள் அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவித்தனர். அந்த வேலையாட்களுக்கு வழங்கப்படாமல் மிச்சம் பிடிக்கப்பட்ட பணமே 5 மில்லியன் சுவிசு பிராங்குகள் வருகிறது.

அந்த கோடீசுவரக் குடும்பததைச் சேர்ந்த நான்கு பேர் மனிதக் கடத்தல் உட்பட பல குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக சுவிசு பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது. தொடர்ந்து அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.