குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .

மகாவலி எல் வலயத்தால் மீண்டும் தமிழர் பிரச்சனை தலைதூக்கும்!

11.10.2018-தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தி போராடினார்களோ அதற்காக மீண்டும் அவர்கள் உரிமைகள் பறிக்கப்படும் போது பிரச்சனை தலைதூக்கும் என்பது முல்லைத்தீவு மாவட்டத்தின் இன்றைய நிலைப்பாடாக காணப்படுகின்றது.

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களில் அவர்கள் வாழ்வதற்கு உரிமை இல்லை பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்களை தமிழர்களின் நிலத்தில் குடியேற்றும் போது இனப்பிரச்சனைக்கான அடிக்கல் அங்கே நாட்டி வைக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை இதுதான் மகாவலி எல் வலயம் ஊடாக காணக்கூடியது.

பூர்வீகமாக வாழ்ந்த மக்களின் காணிகள் மகாவலி எல் வலயத்திற்குள் அபகரிக்கப்படுவதற்கு தமிழர் தரப்பு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடந்த 03.10.18 அன்று சனாதிபதியுடனான சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள எல் வலய காணி சுவீகரிப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவது என்றும் வடமாகாண ஆளுனரும் மக்கள் பிரதிநிதிகளும் பேச்சு நடத்தி தீர்மானம் ஒன்றுக்கு வருவது என்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்துடன் (ஒக்டோபர்) வடக்கு மாகாணசபை காலாவதியாகவுள்ள நிலையில் மகாவலி விவகாரம் ஆளுனர் வசம் செல்கின்றது.

இது இவ்வாறு இருக்க ஏன் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் தனது ஐந்து ஏக்கர் காணியும் மகாவலி எல் வலயம் அகரித்துள்ளது என்று சொல்கின்றார் கருநாட்டுக்கேணியினை சேர்ந்த கறுப்பையா.

1984 ஆம் ஆண்டுஅரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக தான் கருநாட்டு கேணிபகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்.

தனது விவசாய நிலம் ஐந்து ஏக்கர், மேட்டு நிலம் மூன்று ஏக்கர் என்று நிலையான சொத்துக்கள் கட்டிய வீடுகள் அனைத்தினையும் விட்டு வெளியேறி முள்ளிவளை என்ற பகுதியில் வசித்துள்ளதாக சொல்லி நிக்கின்றார்.

இவருடன் அயல் பிரதேசங்களான கொக்குளாயினை சேர்ந்த 508 குடும்பங்களும்,கருநாட்டுக்கேணியினை சேர்ந்த 370 குடும்பங்களும் கொக்குத்தொடுவாயினை சேர்ந்த 861 குடும்பங்களுமாக ஆயிரத்தி ஐநூறிற்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் பூர்வீக வாழ் இடங்களை விட்டு இடம்பெயர்ந்தார்கள்.

1979 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளபோது 1988 ஆம் ஆண்டு மகாவலி எல் வலயம் வர்த்தக மானியில் அறிவிக்கப்பட்டுள்ளது

2007 ஆம் ஆண்டு மகாவலி எல் வயத்தின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன முல்லைத்தீவு நகரில் உள்ள சின்னாறு வரை வரிந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் 74 கிலோமீற்றர் கொண்ட கடற்பகுதியில் 34கிலோ மீற்றர் மகாவலி எல் வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இதனை விட தமிழ்மக்களுக்கு சொந்தமான 2156 ஏக்கர் காணிகள் மகாவலி எல்வலயத்தின் ஊடாக பறிக்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டுகின்றார்.

1984 ஆம் ஆண்டு தங்கள் வாழ் இடங்களை விட்டு வெளியேறிய மக்கள் போரின்போது பலர் உயிரிழந்தும் நாட்டினை விட்டும் வெளியேறியுள்ள நிலையில் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டார்கள்

சுமார் 25 ஆண்டுகளின் பின்னர் மக்கள் தங்கள் சொந்த இடங்களை பார்க்க கிடைத்த சந்தர்பத்தை சாமி அம்மா என்பவர் சொல்கின்றார் தங்கள் ஒருபரம்பரை எங்கள் சொந்த நிலத்தில் வாழமுடியாமல் போய்விட்டது தற்போது உள்ள தலைமுறைதான் இனி எங்கள் நிலத்தில் வளத்தினை பெற்று வாழவேண்டும்

கடல் தொழில், கால்நடை வளர்ப்பு,விவசாயதொழில் போன்றன முதன்மையாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவித்த சாமி அம்மா இனி எங்களுக்கு நல்லகாலம் பிறந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் வந்து 2012ஆம்ஆண்டு குடியேறினோம் என்றார்.

குடியேற்றத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தும் நோக்கிலே அரசாங்கத்தின் திட்டமிட்மிட்ட மகாவலி எல் வலயம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மகாவலி எல் வலயம் 6788 குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் 2012 தொடக்கம் 2018 ற்குள் முடிவிற்கு கொண்டுவரும் திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது இதன் ஊடாக ஒவ்வொருவருக்கம் 2.5 ஏக்கர் நிலப்பரப்பினை வழங்கி குடியேற்றுவதே நோக்காக கொள்ளப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.