குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

28 மில்லியன் டொலர் செலவில் சாவகச்சேரியில் அமையப் போகும் இரு பாரிய மின் திட்டங்கள்…..!!

பூநகரில் என்றிருந்த  காற்றலை மின்திட்டம்  சாவகச்சேரி க்கு மாறியதா?30.09.2018-சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. தேசிய அபிவிருத்தி வங்கிக்கும், சீலெக்சு நிறுவனத்துக்கும் இடையில் இது தொடர்பான கடன் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு அலகு மின்சாரத்தை 10.90 ரூபாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும். தற்போது  இலங்கையில் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சிறிலங்கா மின்சார சபை 20 ரூபாவைச் செலவிடுகிறது.

 

இந்த இரண்டு காற்றாலைகளிலும் மொத்தமாக 8 காற்றாடிகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொன்றில் இருந்தும், தலா 2.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த திட்டத்துக்கான மொத்த செலவு 28 மில்லியன் டொலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேசிய அபிவிருத்தி வங்கி 3000 மில்லியன் ரூபாவை கடனாக வழங்கவுள்ளது.எஞ்சிய நிதியை சீலெக்சு பொறியியல் நிறுவனம் மற்றும் லங்கா வென்சேர்ஸ் நிறுவனம் என்பன முதலீடு செய்யும்.

ஐரோப்பிய தர நியமங்களுக்கு அமைய உருவாக்கப்படும் இந்தக் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம், 2019 நடுப்பகுதியில் இருந்து தேசிய மின் விநியோகத்துக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.