குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

திலீபன் நினைவுத்தூணுக்கு எதிரில் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு: அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்!முன்

26-27.09.2018-கூட்டிய திட்டமிடல் அதனால் அதுவெற்றி இராக்கனவில்  விடிய  அலுவல்பார்க வெளிக் கிட்டால் என்னதான் நடக்கும் ? யாழ் நுால்நிலையம் எரிந்தநாள் 31.05.1981- வெலிக்கடைச்சிறை கொலைநாள்-  வைகாசி(மே) 10-20 நாட்கள் கார்த்திகை  27 - திலீபனின் ஆவணி 26 இத்தகைய தமிழர்களின் கனத்த நாட்களை  மனதில் கொண்டு வாழவில்லை. வடஇந்தியரின் சதுர்த்தி அனுமான்யெயந்தி  ஐயப்பன்  இப்டியான நாட்கள் மட்டுமே தெரியும் இதற்கு தமிழ்ப்பாடசாலைகளும் தமிழாசிரியர்களும்  ஒரு காரணம் என்றும் கருதலாம். ஆனால் சிங்களமக்களுக்கு இந்திய மிறாச் இலங்கைக்குள் அத்துமீறிய நாள் தெரியும். என்பதனைச் சுட்டிக்காட்ட எண்ணுகின்றது குமரிநாடு.கொம் இணையம்.

“தியாக தீபம் திலீபனின் நினைவுநாளில், யாழ் மாநகரசபை எல்லைக்குள் களியாட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதிக்க மாட்டோம்” என நேற்று யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கூடி அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே, திலீபனின் நினைவுநாளை மாநகரசபையே பொறுப்பேற்று நடத்துமென மாநகர முதல்வர் விடுத்த அறிவிப்பிற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலைமையில், நேற்றைய அமர்வில் திலீபனின் நினைவுநாளில் மாநகரசபை எல்லைக்குள் நிகழ்வுகள் நடத்த அனுமதிப்பில்லையென்ற முடிவை எடுத்தனர்.

அத்துடன், வரும் 26ம் திகதி யாழ் மாநகரசபை மைதானத்தில் மத்திய சுற்றுலா அதிகாரசபை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றை நிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு வடக்கு முதலமைச்சர் அமைச்சும் அனுசரணை வழங்குகிறது. தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்விற்கு, மைதானத்தை வழங்குவதில்லையென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தல்களை எப்படி அனுட்டிப்பதென? தெரியாமல், “தமிழ் அரசியல்வாதிகள் ஆர்வக்கோளாறில் அவதிப்படுவதன் விளைவே” இது. நினைவேந்தல்களை எதனுடன் முடிச்சுப் போடுவது? என்பதை தெரியாமல், அரசியல்வாதிகள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

திலீபனின் நினைவுநாள், மாவீரர் வாரம், கரும்புலிகள் வாரம், மாலதி நினைவுநாள், குமரப்பா புலேந்திரன் நினைவுநாள், கிட்டு நினைவுநாள், ஜெயசிக்குறுவில் மரணித்தவர்களின் நினைவுநாள், தமிழ்செல்வன் நினைவுநாள், பால்ராஜ் நினைவுநாள், முள்ளிவாய்க்கால் நினைவுநாள் என ஒவ்வொரு மாதமும் தமிழர்கள் உளப்பூர்வமாக அஞ்சலிக்க நிகழ்வுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நாட்களில் நிர்வாகம் முடங்க வேண்டுமென எதிர்பார்ப்பது ஆரோக்கியமானதல்ல.

தேவையற்ற சில களியாட்டங்களை, நிகழ்வை குழப்பவது போன்ற களியாட்டங்களை தவிர்க்கலாம். ஆனால், உணர்வுபூர்வ அஞ்சலியென்பது, ஊரெல்லாம் “அட்ராசிட்டி“ பண்ணி செய்வதல்ல. அஞ்சலி.., செய்துவிட்டு வீட்டில் போயிருக்க வேண்டும் என்றும் அர்த்தமல்ல.

தமிழ் சமூகம் மேலும்மேலும் வீழ்ச்சியடைந்து, தனக்குள் தானே முடங்கியிருக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் யாரும் மரணிக்கவில்லை. வழித்தோன்றல்கள் வாழ வேண்டுமென்று தான் வீழ்ந்தார்கள். நமது அரசியல்வாதிகளும், கட்சிகளும் நினைவேந்தலில் தமக்குள் போடும் குடுமிப்பிடி சண்டைகள் தான் அசிங்கமானவையே தவிர, அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய நிகழ்வுகள் அல்ல.

இத்தனைக்கும், திலீபனின் நினைவுத்தூணுக்கு முன்பாக கடந்த மூன்று நாட்களாக அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் இசைவேள்வி நடைபெற்று வருகிறது. செப்ரெம்பர் 21ம் திகதி ஆரம்பித்த நிகழ்வு செப்ரெம்பர் 24 முடிவடைகிறது. இதில் இந்திய இசைக்கலைஞர்கள் தான் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வையும் எதிர்க்க வேண்டும் என நாம் குறிப்பிடவில்லை. ஆனால், திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக, இந்திய கலைஞர்களை அழைத்து நடத்தப்படும் இசைவேள்விக்காக “பொங்காத” நமது அரசியல்வாதிகள், உள்ளூர் மக்களிற்கு ஏதாவது விதத்தில் பயன்படும் சுற்றுலாத்துறை நிகழ்வை நிறுத்த வேண்டுமென கூட்டம் போட்டு முடிவெடுத்துள்ளனர்.

இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சி விசயத்தில் தலையிட்டால் இந்திய தூதரகம் கோபிக்கலாமென கருதியோ, என்னவோ, நம்மவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

இந்த நிகழ்வு குறித்து யாழ் பல்கலைகழக இசை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தனின் வீடியோ கருத்து இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் இந்தியர்கள் கலந்து கொள்கிறார்கள். அதில் இலங்கை கலைஞர்களும் கலந்து கொள்வது சிறப்பம்சம் என அரிய முத்துக்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் இசை நிகழ்ச்சியில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். அதாவது திலீபனின் நினைவேந்தலில் கலந்து கொள்பவர்களை விட அதிகமானவர்கள் இங்கு குழுமுகிறார்கள்.

திலீபனின் நினைவேந்தலை குழப்ப வேண்டுமென்பதற்காகவே திட்டமிடப்பட்ட நிகழ்வை போல இது தென்பட்டும், இதுவரை ஏன் நமது ஆர்வக்கோளாறு அரசியல்வாதிகள் யாரும் வாய் திறக்கவில்லை? யாழ்ப்பாண மக்களிடமும் தமிழ்ப்பிரமுகர்களிடத்திலும் அரசியல் வாதிகளிடத்திலும். யாழ் நுால்நிலையம் எரிந்தநாள் 31.05.1981- வெலிக்கடைச்சிறை கொலைநாள் -வைகாசி(மே) 10-20 நாட்கள் -கார்த்திகை  27 திலீபனின் ஆவணி 26 .இத்தகைய தமிழர்களின் கனத்தநாட்களை  மனதில் கொண்டு வாழவில்லை வடஇந்தியரின் சதுர்த்தி அனுமான்யெயந்தி  ஐயப்பன்  இப்டியான நாட்கள் மட்டுமே தெரியும் இதற்கு தமிழ்ப்பாடசாலைகளும் தமிழாசிரியர்களும்  ஒரு காரணம் என்றும் கருதலாம். ஆனால் சிங்களமக்களுக்கு இந்திய மிறாச் இலங்கைக்குள் அத்துமீறிய நாள் தெரியும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.