குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .

யாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை!! இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை!

23.09.2018-வன்ம அதிகார மனங்களால் வடக்கில் ஆண் கிழக்கில்  தற்கொலையா வரிகளல்ல வாழ்க்ககை! என் வன்மையை மென்மையில் அழுத்தினால் அது அழியும் கவியல்ல அன்பு அன்புசெயலில் மனதில் வெளிக்காட்டல் வேறு உட்கிடக்ககை வேறு வக்கிரங்களால் நடக்கும்  இடர்கள் இல்லாது போகட்டும்.

மாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி கடமையாற்றி 32 வயதான இளைஞரான கயன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். குறித்த பிரதேசசெயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் இவர் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு குறித்த பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கயன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை. இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ் மேலதிக செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த புதன்கிழமை கயன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் அவரது முறைப்பாட்டை பொருட்படுத்தாது சுகுனவதி கயனை மிகக் கடுமையாக ஏசியதுடன் கயனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இடத்திலேயே கயன் தான் கொண்டு வந்திருந்த நஞ்சை அருந்தி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கயனின் மரணத்துக்கு முற்றுமுழுதாக யாழ் மேலதிக அரசஅதிபர் சுகுனவதியும் மாந்தை கிழக்கு பிரதேசசெயலாளருமே காரணம் என கயனின் பெற்றோர் கருதுகின்றனர். இதே வேளை கயனைப் போல மேலும் பல பட்டதாரிகள் வன்னியில் தொடர்ச்சியாக இடமாற்றம் இன்றி விரக்தியுடன் கடமையாற்றி வருவதாகவும தெரியவருகின்றது. கயனின் மரணத்தையடுத்து குறித்த பட்டதாரிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளதுடன் தக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அறியவருகின்றது.

பொறுப்பானவர்களின் அதிகாரத் திமிரால் அநியாயமாக இளம் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளது கடும் வேதனையளிப்பதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.