குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

வெறுப்பை வெளியிட்ட சீனா -பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த இலங்கை அதிபர் 18.09.2018

18.09.2018-பலாலியை அபிவிருத்தி செய்யும் பணி இந்தியாவுக்கு வழங்கப்படாது – இலங்கை அரசு கைவிரிப்புசீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழுவொன்று இன்று இலங்கையில் அதிபர் மைத்திரிபால இலங்கையைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

 

இதன்போது, இலங்கையில் சீனாவின் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பும் கலந்துரையாடியது,

அத்துடன் எதிர்காலத்தில் இலங்கையில் சீனாவின் முதலீடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, இலங்கைக்கு நன்மையளிக்கும் திட்டங்களில் எழுகின்ற எந்த பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சீனக் குழுவிடம் இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் வீடுகளை அமைக்கும் திட்டம் மற்றும் வடக்கில் வீதிகளை அமைக்கும் திட்டங்களில் இருந்து சீனா நீக்கப்பட்டு, அவற்றை இந்தியாவுக்கு வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தே இந்தச்  சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலியை அபிவிருத்தி செய்யும் பணி இந்தியாவுக்கு வழங்கப்படாது – சிறிலங்கா அரசு கைவிரிப்பு

18.09.2018 -தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விண்ணுந்து நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை இலங்கை விண்ணுந்துப்படையே முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார், இலங்கையின் சிவில் விண்ணுந்து சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று, கூட்டு எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பலாலி விண்ணுந்து நிலைய அபிவிருத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்ற விமல் வீரவன்சவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நிமல் சிறிபால டி சில்வா,

“அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, பலாலி விண்ணுந்து நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது.

இலங்கை விண்ணுந்துப்படையின் உதவியுடனேயே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பாக, பிரதமரும் நானும் தீர்மானம் எடுத்து விட்டோம்.

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே,  பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி  இலங்கை விண்ணுந்துப்படைக்கு வழங்கப்படுகிறது.” என்று கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.