குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, கார்த்திகை(நளி) 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

வீடுகளுக்குகள் புகுந்த இராணுவத்தினரை துணிகரமாகபிடித்து கா.து ஒப்படைத்த பூநகரி மக்கள்.

13.09.2018-  – கரியாலைநாகபடுவன், கணேசுகுடியிருப்பு பகுதியில் இராணுவத்தை சேர்ந்த இருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கா.துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு புரிந்துள்ள நிலையில் குறித்த வீட்டை சேர்ந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர்.இதன்போது அயல்வீட்டினர் இணைந்து இன்று அதிகாலை குறித்த இரண்டு இராணுவ சிப்பாய்களையும் மடக்கி பிடித்துள்ளனர்.

 

இதனையடுத்து சந்தேகநபர்கள் முழங்காவில் கா.துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை கா.துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

எனினும் ஆதாரத்துடன் கூறுமாறு அவர்கள் தொடர்ச்சியாக கூறி வந்த நிலையில் இன்றைய தினம் ஆதாரத்துடன் இரு இராணுவ சிப்பாய்கள் கா.துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பூநகரி கரியாலை நாகபடுவான் மக்களின் துணிச்சலான  சனநாயகச்செயற்பாட்டினை குமரிநாடு இணையத்தளம் பாராட்டுகின்றது இந்த ஆதாரம்  உலக அரங்கில் பதிவாவேண்டும் பி. பி.சி-  சி.என். என் ஆங்கிலச் செய்திகளில் இது இடம்பெறவேண்டும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.