குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

விக்கியின் நகர்வுகளால் அச்சத்தில் கூட்டமைப்பு: தூதுவராலயங்களுடாக மிரட்டல்! இதனால் தான் சம்மந்தர் ..

டக்கிளசு கூட்டாக  இந்தியா சென்றனரோ!!13.09.2018-வடமாகாண முதலமைச்சரது புதிய அரசியல் நகர்வுகள் குறித்து நல்லாட்சி அரசு மற்றும் கூட்டமைப்பினை தாண்டி கொழும்பிலுள்ள ஆட்சித்தந்திர வட்டாரங்களிலும் பரவலாக அச்சம் நிலவிவருகின்றது. இதன் தொடர்ச்சியாக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் அவரிற்கு அச்சுறுத்தும் பாணியில் ஆலோசனை மிரட்டல்களை விடுத்துள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள தூதரகங்களிற்கு சந்திப்பிற்கென அண்மையில் முதலமைச்சர் சி.வி.விக்கினேசுவரன் அழைக்கப்பட்டு இத்தகைய மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

கூட்டமைப்பிற்கெதிரான மக்கள் எழுச்சி அதனை தொடர்ந்து புதிய தலைமையொன்றினை அடையாளப்படுத்த மக்கள் முற்பட்டுள்ளமை என்பவற்றின் மத்தியில் மக்கள் பேரியக்கமொன்றை கட்டியமைக்க முதலமைச்சர் முற்பட்டுள்ளார்.

இதனை தனது நாலாவது தெரிவென முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் மக்களிடையே அவரது நிலைப்பாடு தொடர்பில் வடபுலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பெரும் வரவேற்பு தோன்றியுள்ளது.

முதலமைச்சரின் குறிப்பாக இனஅழிப்பிற்கு எதிரான குரல் மற்றும் திட்டமிட்ட நிலசுவீகரிப்பு ,பௌத்த மயமாக்கல் என்பவற்றிற்கெதிரான அம்பலப்படுத்தல்கள் நல்லாட்சி அரசிற்கும் மறுபுறம் கூட்டமைப்பிற்கும் தலையிடியை கொடுத்தே வருகின்றது.

மறுபுறம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மக்களிடையே தன்னெழுச்சியையும் ஒன்றிணைவையும் அது ஊக்குவித்தும் வருகின்றது.

இந்நிலையில் முதலமைச்சரிற்கு ஆதரவாக ஏற்பட்டுவரும் அலை தொடர்பில் கூட்டமைப்பு கடும்; அச்சங்கொண்டுள்ளது.இதன் தொடர்ச்சியாகவே சுமந்திரன் தரப்பின் தூண்டுதலில் முதலமைச்சர் மிரட்டப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக நல்லாட்சி அரசிற்கு முண்டுகொடுக்கும் இந்திய மற்றும் மேற்குல நாடுகளினையும் சந்திப்புக்களில் முதலமைச்சர் கேள்விக்குள்ளாக்கி வருவதுடன் ஊடகங்கள் முன்னதாக அம்பலப்படுத்தியும் வருகின்றார்.

இந்நிலையிலேயே அவரை கொழும்பிற்கு சந்திப்பிற்கவென அழைத்து ஆலோசனையெனும் பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் குறித்த அச்சுறுத்தல்களின் பின்னராக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மீண்டும் ஆணித்தரமாக எடுத்துக்கூறியிருந்ததாகவும் கொழும்பு ஆட்வி அதிகாரதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் முதலைமைச்சரை அச்சுறுத்தி அடிபணிய வைக்க மேற்கொண்ட இத்தரப்புக்களது முயற்சி தோல்வியடைந்திருப்பதாகவே கருத வேண்டியிருப்பதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.