குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

“அவள் என் குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுத்தது தூக்க மாத்திரையே இல்ல!” கதறிய விசய்.

06.09.2018- விடுதி வரவேற்பு பிரிவில் வேலை செய்வதற்காய் அழகான பெண்களை பணிக்கு  அமர்த்துவது வழமை அபிராமி அப்பணியினைச்செய்து வந்துள்ளார் அப்பணியில் ஈடுபடும் பெண்கள் அழகுபடுதலில் ஈடுபடல்  அதிகம் அதனால் அபிராமி இந்தநிலைக்குள்ளானார். மலையாளி சுந்தர் களவாக இவரைக்காதலித் தார் பிள்ளைகளை  வைத்துக் கொண்டே கணினியில் அபிராமிசேட்டைகளை  உலகம் கண்டு வருகிறது.  இத்தகைய பெண்கள் ஆண்கள்  இருக்கிறார்கள் கவனம். இங்குவேலை செய்த வியய் இவரைக்காதலித்தார். திருமணம் செய்தார் மிகநல்லவர் நல்லவராக இருந்ததால் இரண்டு பிள்ளைகளை  இழந்துள்ளார்.

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை நஞ்சு கொடுத்து கொலை செய்து காவல்துறையினரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

சுந்தரம், அபிராமி இருவரையும் கா.து  கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அபிராமி தொடர்புடைய பல விவகாரங்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் அபிராமி கூறுகையில், ‘நான் குழந்தைகளுக்கு கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை கொடுத்தேன். என்னிடம் 5 மாத்திரைகள் இருந்தது. அதிகமான மாத்திரைகளை கொடுத்தால் இறந்துவிடுவார்கள் என நம்பி பாலில் கலந்து கொடுத்தேன். ஆனால், என் கணவருக்கும், மகனுக்கும் எதுவும் ஆகவில்லை” என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனைவியால் மரணமடைந்த தனது இரு குழந்தைகளையும் அடக்கம் செய்த போது இரு குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டு அபிராமியின் கணவர் விசய் கதறி அழுதது அங்கிருந்த அவரின் உறவினர்கள் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. குழந்தைகளை அடிக்க கூட மாட்டேளே. ஆனால் கொலை செய்து விட்டாளே! எட்டு வருட காதல் வாழ்கை பறிபோனது பற்றி கூட எனக்கு கவலையில்லை. என் குழந்தைகளை இல்லாமல் செய்து விட்டாளே. அவர்களுக்கு நஞ்சு கொடுக்க அவளுக்கு எப்படி மனம் வந்தது? படுக்கை அறை சென்று பார்த்திருந்தால் ஒரு குழந்தையாவது காப்பாற்றி இருப்பேனே! என அவர் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.