குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 22 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வடக்கில் அமெரிக்காவா? சீனாவா? அமெரிக்க – சீனா நாடுகளுக்கிடையே தமிழீழத்தில் நிலவும் அதிகாரப் போட்டி!

03.09.2018-  டி.கே.ரங்கராசன் தமிழக எம்.பி.யா? கேரள எம்.பி.யா?அமெரிக்க ஆய்வு நிறுவனத்திடமிருந்து உப ஒப்பந்தமொன்றை பெற்றுக்கொண்ட நிறுவனமொன்று வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடவுள்ள நிலையில், அதனை சீன நிறுவனமென அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில் இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில் திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள JS5 மற்றும் JS6 ஆகிய பகுதிகளில் ஐயாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பயணம் செய்து, இந்தக் கப்பல் கடலடியில் உள்ள நில அதிர்வு அலைகளை ஆராயவுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் குறித்து ஆராய்வதற்காக Schlumberger என்ற எண்ணெய் வயல் சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனமான Eastern Echo DMCC உடன் மே மாதம் இலங்கையுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது.

இலங்கையின் பெட்ரோலிய அமைச்சர் அர்சுனா ரணதுங்க மே மாதம் 30 ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கிழக்கின் கடலில் எண்ணெய் வள ஆய்வு மட்டுமல்ல, இராணுவ ரீதியான கடற்படை உறவையும் அமெரிக்கா பலப்படுத்தியிருக்கிறதென்பதையும் இலங்கையின் பெட்ரோலிய அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

schlumberger என்ற எண்ணெய் வயல் சேவை நிறுவனம், தரவுகளைத் திரட்டி, அவற்றைப் பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவுள்ளது. அதற்காக இரு பரிமான மற்றும் முப்பரிமான தரவுகளை அது திரட்டவுள்ளது.

இந்த ஆய்வுக்கு Eastern Echo DMCC நிறுவனம் ஐம்பது மில்லியன் டொலரை முதலிடு செய்யும் எனவும், பல்வேறு முதலீட்டாளர்களுக்கு தரவுகளை விற்பனை செய்து அந்தப் பணத்தை மீளப் பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நடவடிக்கைகள் இலங்கை அரசுடன் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமான Eastern Echo DMCC என்ற நிறுவனம், மத்திய கிழக்கில் துபாயில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனமாகும்.

இதேவேளை, அமெரிக்கக் கடற்படையின் சிறப்பு படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக் கடற்படைக்கு, கடந்த மாதம் திருகோணமலைத் துறைகத்தில் உள்ள இலங்கைக் கடற்படையின் பிரதான முகாமில் பயிற்சியளித்திருந்தது. அதனையடுத்து அமெரிக்காவின் USS Anchorage கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்துள்ளது. சுமாா் தொள்ளாயிரம் அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளும் கப்பலில் வந்திருந்தனர்.

யப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்து, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைத் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.

ஈழத் தமிழர்களின் கடற்பரப்புகள் மற்றும் நிலங்களை, இந்தியச் சாா்பு நிலை நாடுகளான அமெரிக்கா. ஜப்பான், ஆகிய நாடுகளிடம் மைத்திரி- ரணில் அரசாங்கம் கையளித்து வருவதாக பார்வையாளர்கள் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை உடைக்கும் நோக்கிலும் தமிழ்த்தேசிய அரசியலை பலவீனப்படுத்தும் வகையிலும் துாரநோக்குச் சிந்தனையுடன் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு செயற்படுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

டி.கே.ரங்கராசன் தமிழக எம்.பி.யா? கேரள எம்.பி.யா?

மார்க்சிசுட் கம்யூனிசுட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராசன். இவர் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை கேரள அரசுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

டி.கே.ரங்கராசன் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினரேயன்றி, கேரளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் அல்ல.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அவர் சம்பளத்திலிருந்து நிதி தருவதையோ, தமது கட்சியிலிருந்து நிதி தருவதையோ நாம் எதிர்க்க வில்லை.

ஆனால் தமிழ்நாட்டு மேம்பாட்டு நிதி என்பது தமிழ்நாட்டு மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியாகும். இதை கேரள அரசுக்கு அள்ளிக் கொடுப்பது என்பது தார்மீக அடிப்படையில் தவறான ஒன்றாகும்.

டி.கே.ரங்கராசன் தாம் குறுக்கு வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தாலும் தொகுதி ஒன்றும் இல்லாத படியாலும் கேரள அரசுக்கு கொடுத்தாரா என்று தெரியவில்லை.

டி.கே.ரங்கராசன் தம்மை தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினர்களிடமோ அல்லது மக்களிடமோ அனுமதி எதுவும் பெற்றாரா என்றும் தெரிய வில்லை.

ஒரு வேளை, கேரளத்தில் காங்கிரசு தலைமையிலான உம்மன் சாண்டி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தால் இவ்வளவு பெரிய தொகையை தூக்கித் தந்திருப்பாரா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.

கேரளாவைப் போலவே, காவிரி மண்டலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து, கடும் பாதிப்பு உருவாகியுள்ளது. இதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட டி.கே.ரங்கராசனுக்கு ஏனோ மனம் வரவில்லை.

சென்னை நகரம் சுனாமியாலும், அதன் பிறகான காலங்களில் வெள்ளத்தாலும் கடும் பாதிப்புக்கு உள்ளான போது எந்தவொரு மலையாளியும் ஓடோடி உதவிக்கு வர வில்லை என்பது கடந்த கால வரலாறு..

கேரளத்தை ஆளும் மார்க்சிசுட் கம்யூனிசுட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எவராவது தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழகத்திற்கு டி.கே.ரங்கராசனைப் போல அள்ளிக் கொடுக்க வேண்டாம்: கிள்ளியாவது கொடுத்தார்களா?

பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழக அரசு வழங்கியதோ வெறும் 5 கோடி ரூபாய் தான். ஆனால் சி.பி.எம். கட்சியின் ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருந்து கொண்டு ஒரு கோடி ரூபாயை தூக்கி கொடுக்க இவருக்கு எப்படி துணிச்சல் வந்தது? இது கேரளப் பாசமா? கம்யூனிசுட் கட்சி பாசமா? இந்தியப் பாசமா? ஒன்றும் விளங்க வில்லை

முல்லைப் பெரியாறு அணை நீரால் கேரள மக்களுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு விட்டதாக உச்ச நீதி மன்றத்தில் கேரள அரசு பொய்த்தாக்கல் செய்து 142 அடி நீரை 139 அடி நீராகக் குறைக்க உத்தரவு பெற்று விட்டது. இதற்குக் காரணம் கேரள முதல்வர் பினராய் விசயன். தமிழர்கள் நீண்ட காலம் போராட்டம் நடத்தி பெற்ற உரிமையை காவு வாங்கிய மலையாள இனவெறியர் பினராய் விசயனைக் கண்டித்து மாநிலங்களவையில் ஒரு வார்த்தை டி.கே.ரங்கராயன் பேசியதுண்டா?

மாநிலங்களவையில் பேச முடியாவிட்டாலும், தமது கட்சி மேடையிலாவது பினராய் விசயனுக்கு எதிராக ஒரு முக்கலோ, முனகலோ உண்டா?

இன்று வரை தமிழ் நாட்டிலிருந்து பல்வேறு பேருதவிகளை பெற்றுக் கொண்டு, துக்க வீட்டிலும் கூட தமிழ்நாட்டின் மேல் பழியைப் போடும் ஈனத்தனமான காரியத்தை மலையாள கம்யூனிசுட் கட்சி கைவிடவில்லை. இது தெரிந்தும் டி.கே.ரங்கராயன் ஒரு கோடி ரூபாயை தூக்கிக் கொடுக்க என்ன நெஞ்சழுத்தம் வேண்டும்!

தமிழர் நலன் காக்க "தமிழர் உரிமை மாநாடு" நடத்துவது ஒருபுறம்! தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கேரளாவோடு கொஞ்சிக் குலாவுவது மறுபுறம்! இப்படி இரட்டை வேடம் போடுவதை நிறுத்தும் வரை இந்திய மார்க்சிசுட் கம்யூனிசுட் கட்சியை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்;

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.