குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

தமிழ்க்கலை சிலையாகின்றது தமிழ்க்குரல் ஒலியிழந்தது தமிழ் எழுத்து அழியா நிலைபெறுகின்றது!

08.08.2018-24.07 .தி.ஆ 2049 -கலைஞர் பலதாய்வாழ்ந்தார் தமிழாய் திருக்குறளாய் சிலப்பதிகாரமாய் முரசொலிமடலாய் சிறுகதையாய் பாயும்புலி பண்டாரவன்னியனாய் குறளோவியமாய் மனோகராவாய் வீரபாண்டிய கட்டப்பொம்மனாய் திரையுலகின் கதையாய் வரிகளாய் கவியாய் கவிஞர்களின் தலைவனாய் அடுக்கு தமிழாய் அழகுதமிழாய் தமிழில் ஒலித்த நல்குரல் என்பதே என்றும் குன்றிலிருக்கும்  புகழாகும்.

 

அரசியலில் அண்ணாவின் தம்பியாய் சமூகநீதியில்  பெரியாரின் மாணவனாய் தலமையில் நிகரில்லா முன்னுதாரணமாய் ஐந்துமுறை முதலமைச்சராய் பதின்மூன்று ஆண்டுகள் எதிர்க்கட்சித்தலைவராய் தொடராய் இருந்தார். கட்சியை முரசொலியால் கட்டிக்காத்தார் எழுத்தால்  எழுச்சிகளை ஏற்படுத்தினார். அணையாத தீகளை மூட்டினார் பெண்கள் நலிந்தோர்களுக்கான நலத்திட்டங்கள் இடஒதுக்கீடுகள் பெண்ணுருமைகளின் நாதமாய் ஏழைகளின் தோழனாய் பயிர்செய்கையாளரின் தாயாய் தந்தையாய் உழவர் அங்காடியாய் உதயசூரியனாய் என்றும் மறையாமல் இருந்தார்

தொண்ணுாற்றைந்துவரை வாழ்ந்தார் எழுபத்தைந்து வரை அரசியல் பொதுவாழ்வில் திரையுலகில் கலையுலகி்ல் எழுத்துலகில் நீண்டகாலத்திற்குரியவனாய் முத்தமிழாய் பேச்சுத்தமிழாய் எழுத்துதமிழாய் இலக்கியமாய் இருந்தவனே நீண்டகாலமாய் நோயுற்றிருந்து நீண்டகாலம் திராவிடமுன்னேற்றக்கழகம் என்றகட்சியை ஆண்டவர் ஐந்துமுறை முதல்வராய் தமிழகத்தை ஆண்டார் கலைஞர் என தமிழுலகின் மூத்த தலைவனாய் ஆளுமைமிக்க தலைவனாய் நல்ல தலைவர்களை இனம்காணும் வல்லவனாய் வாய்பாய் எனும் முதுமனிதனை நாட்டின் பிரதமராக்கினார்.சோனியாவை அணுகி தமிழை செம்மொழியாக்கினாய் பெரியநுால்நிலையம் சமைத்தாய் 133 அடியில் ஐயன் வள்ளுவனுக்கு சிலையமைத்தாய் வள்ளுவர்கோட்டம் கண்டாய் செம்மொழியாய்வு மன்றம் அமைத்தாய் தைப்பொங்கலை தமிழாண்டாய் திருவள்ளுவராண்டாய் அறிவித்தாய் தமிழ் அட்சகர் சட்டம் இயற்றினாய் இலங்கையிலிருந்து இந்தியப்படைகளை திருப்பி யழைக்க காரணகத்தாவாய் இருந்தாய்.

தஞ்சைக்கோவிலிற்கு  ஆயிரமாம் ஆண்டு விழா எடுத்தாய் மாமல்லபுரக்கலைஞர்களின் மனதில் இடம்பிடித்தாய் உளி எனும் திரைப்படம் தந்தாய் கலையாய் கலைஞனாய் வாழ்ந்தாய் மை வற்றாத எழுத்தாணியாய் என்றும் உலகில் நிலைத்தாய் தலைவா கலைஞா!

ஈழத்தமிழன்  பூநகரியான் பொ.முருகவேள்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.