குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 22 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பரங்கி மொழி அகன்றால் பகுத்தறிவு வளரும்! -பெரியாருக்கு ம.பொ.சி. பதிலடி!பெரியாரால் தான் தமிழகல்வி தொலை

ந்ததா ?  1960 இல் காமராசர் ஆட்சியின் போது அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் அவர்கள் உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தைக் கொண்டு வர விரும்பினார். அதற்குக் காமராசரும், பெரியாரும் முட்டுக்கட்டையாக இருந்தனர். பெரியார் வீட்டு மொழியும், தமிழ்நாட்டு மொழியும் ஆங்கிலமே இருக்க வேண்டும் என்று வாதாடினார். இந்நிலையில், தமிழகமெங்கும் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை ஆதரித்து ம.பொ.சி. எழுதியும் பேசியும் வந்தார். அப்போது பெரியார் ஆத்திரப்பட்டு ம.பொ.சி.க்கு கொடுத்த பட்டம்தான் "தாய்ப்பால் பைத்தியம்". இத் தலைப்பிட்டு பெரியார் 1.12. 1960இல் விடுதலை ஏட்டில் அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு ம.பொ.சி. பதிலடி தரும் வகையில்

25.12.1960 இல் 'செங்கோல்' இதழில் பரங்கி மொழி அகன்றால் பகுத்தறிவு வளரும்" என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதினார்.

ம.பொ.சி. நாகரீகச் சிந்தனை படைத்தவர்.

அவர் பேச்சிலும், எழுத்திலும் அநாகரீகம் தலை தூக்காது. அவர் நினைத்திருந்தால் பெரியாருக்குப் பதிலடி தரும் வகையில் , "புட்டிப்பால் பைத்தியம்" என்று தலைப்பு வைத்திருக்கலாம். அவ்வாறு ம.பொ.சி. செய்யவில்லை.

அக்கட்டுரையின் இறுதியில் ம.பொ.சி. கூறுகிறார்: "தமிழ் மொழியே தேவையில்லை, ஆங்கிலத்தை வீட்டு மொழியாகவும் செய்து கொள்ளலாம் என்று பெரியார் சொல்வாரானால், அவரே தமிழ்நாட்டின் சர்வாதிகாரியாக வந்து சட்டம் போட்டாலும் அது நடக்கப் போவதில்லை".

ம.பொ.சி. வெளிப்படுத்திய அந்த நம்பிக்கை தற்போது தகர்க்கப்பட்டு வருகிறது. பெரியார் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் அவரின் வாரிசு இயக்கங்கள் தமிழை அழிக்கும் வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தற்போது வீட்டிலும், தமிழ்நாட்டிலும் ஆங்கிலேமே கோலோச்சுகிறது. தமிழுக்குரிய இடத்தில் ஆங்கிலம் நீடிப்பது அவமானம் என்ற சிந்தனை திராவிட ஆட்சியாளர்கள் எவருக்கும் இல்லை என்பது வேதனைக்குரியது. ம.பொ.சி. அன்று பெரியாருக்கு எழுதிய கட்டுரையை கேள்வி- பதில் வடிவில் மாற்றி அமைத்துள்ளேன். தமிழர்கள் படித்து தெளிவு பெறல் நன்று. தமிழுக்கான நீதி கேட்கும் போரில் நீங்கள் யார் பக்கம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1.(ஒன்று)

பெரியார்:

ஆங்கிலம் பயின்று பட்டம் பெறாததால் தான் ம.பொ.சி.க்கு தாய்ப்பால் பைத்தியம் பிடித்திருக்கிறது.

ம.பொ.சி:

இந்தத் தாய்ப்பால் பைத்தியம் எனக்கு மட்டுமல்ல, ஆங்கில மொழியில் கவிபுனையும் ஆற்றல் பெற்ற கவி தாகூருக்கும் உண்டு. பரங்கி மொழியில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தியாருக்கும் உண்டு, அவர்களுக்கு மட்டுமா? ஆங்கிலயருக்குக் கூட உண்டு. இதனைப் பெரியார் அறியார் போலும்!

2..(இரண்டு)

பெரியார்:

தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது? இடைச்செருகல் இதுபெரியரின் கேள்வியென்றால்  அவர்தமிழ்மொழியில் வெறுப்பானவர்தான்.

ம.பொ.சி:

தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்" என்பது தான். இது "பரங்கி மொழிப் பைத்தியம்" அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே! அறியார் போலும்.

3.(மூன்று)

பெரியார்:

மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிக்கப் பயன்படுவது என்பது தவிர வேறு எதற்குப் பயன்படுவது? இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? இதற்கு ஆக தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டு மொழி என்பதும், முன்னோர் மொழி என்பதும், மொழிப்பற்று என்பதும் எதற்காக? எனக்குப் புரியவில்லை?  ஆக  ஆக  பெரியாரால் தான் தமிழகல்வி தொலைந்ததா ?

ம.பொ.சி:

இதனை வாதத்திற்காக ஒப்புக் கொள்வதானால், 'ஆங்கில மொழியில் தான் அறிவு இருக்கிறது,' 'விஞ்ஞானம் ஒளி விடுகிறது' என்று சொல்வதெல்லாம் மூடத்தனம் தானே? ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிப்பதற்கு அதிகமாக மொழியில் ஒன்றும் இல்லை என்றால், நமது வீட்டு மொழியான தமிழிலேயே உயர்தரக் கல்வி கற்பித்து, அந்த இடத்தில் ஆங்கிலத்தைக் கைவிடலாமே? இதனைப் பெரியார் ஏற்பாரா?


4.(நான்கு)

பெரியார்:

நம் நாட்டை விட்டு நாம் வேறு எந்த நாட்டுக்குப் போனாலும் நம் தாய்மொழி நமக்குப் பயன்படாதே!

ம.பொ.சி:

இது உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டாருக்கும் உள்ள பொதுப் பிரச்சினை. தமிழ்நாட்டாருக்கு மட்டுமுள்ள தனிப் பிரச்னையல்லவே! ஆங்கில மொழி மட்டும் அயல் நாடுகள் அனைத்திலும் வழங்கும் உலக மொழியா? இல்லையே!  இது கூடத்தெரியாதவரா பெயார்  ஆனார் .

உலக நாடுகளின் சனத்தொகை 290 கோடியாக இருக்க (1960 கணக்குப்படி) அதில் 26 கோடி பேர் தானே ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்? அந்த ஆங்கிலேயர் கூட, சீனாவுக்குப் போனால் அந்த நாட்டு மக்களோடு தங்கள் ஆங்கில மொழியின் மூலம் பேசிப் பழக முடியாதே!

தமிழன் ஆங்கில நாடுகளுக்குச் செல்வதற்காகவேனும் ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை பரங்கி மொழி பயில வேண்டுமென்றால், அப்புறம் சீனாவுக்கு செல்வதற்காகச் சீன மொழியையும், ருஷ்யாவுக்குச் செல்வதற்காக ருஷ்ய மொழியையும் ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை பயில வேண்டாமா?

ஆம், உலகம் என்பது ஆங்கில மொழிக்குரிய 26 கோடி மக்களைக் கொண்ட ஐந்து நாடுகள் மட்டுமல்லவே! அதற்கப்பால் தானே மிகப் பெரிய உலகம் இருக்கிறது

5.(ஐந்து)

பெரியார்:

தாய்ப்பாலைக் குடிக்க வேண்டும் தாய்ப் பாலுக்கு வகை செய்ய வேண்டும் (அதாவது சமஸ்கிருதம் கட்டாயமாக வேண்டும்) என்று வரட்டுக் கத்தல் கத்துகிற எந்தப் பார்ப்பனாவது புட்டிப்பால் (இங்கிலீஷ்) வேண்டாம் என்று தள்ளுகிறானா? சொல்லுகிறானா?

ம.பொ.சி:

நான் மட்டுமென்ன, ஆங்கிலமே படிக்கக் கூடாதென்றா கூறுகிறேன்? இல்லையே! உயர் நிலைப் பள்ளி தொடங்கி கல்லூரிப் படிப்பு முடியும் வரை ஆங்கில மொழியைக் கட்டாயப் பாடமாக்குவதையும் வரவேற்கிறேன் என்பதைப் பெரியார் மறந்தார் போலும்! பாலுக்குச் சர்க்கரை போல, தமிழன் வாழ்வுக்கு ஆங்கிலம் பயன்படுவதை நான் வரவேற்கிறேன் என்பதை இப்போதேனும் பெரியார் தெரிந்து கொள்ள வேண்டும்


6.(ஆறு)


பெரியார்:

நண்பர் சிவஞானம் கூறும் தமிழ்த்தாய் உண்ட உணவெல்லாம் சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய பஞ்சகாவியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பாரதம், இராமாயணம், பாகவதம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் முதலிய இவைகள் தானே. இவைகளில் தயை இருக்கலாம் அழகிருக்கலாம். பக்தி இருக்கலாம். முன்னேற்றத்துக்கான அறிவு இருக்கிறதா?


ம.பொ.சி:

கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் அறிவு பெற்று வந்ததெல்லாம் இந்த இலக்கியக் கருவூலங்கள் மூலம் தான் என்பது என் கருத்து. இந்த இலக்கியங்கள் தோன்ற வில்லையானால் உலகில் நம்மை மதிப்பாரில்லை. ஆனால், முழு நாத்திகரான ஈ.வெ.ரா. இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அது எப்படி இருப்பினும் தமிழில் நவீன விஞ்ஞான அறிவை வளர்க்கும் நூல்கள் இல்லை என்பதை நான் மறுக்க வில்லை. அதற்குக் காரணம் தமிழின் திறமையின்மையல்ல. ஆங்கில மொழியின் ஆதிக்கம் இதற்கு காரணம். அத்தகைய நூல்கள் தோன்ற வேண்டும் என்பதற்காகத் தான் கல்லூரிகளில் தமிழைப் போதனா மொழியாக்க வேண்டும் என்று போராடி வருகிறேன்.

அதற்கெனவே தனி இயக்கம் கொண்டு நடத்தியும் வருகிறேன்.

பாட்டும், தொகையும், பஞ்ச காவியங்களும், இதிகாச புராணங்களுமே போதும் என்று நான் சொல்ல வில்லை. அப்படிச் சொல்வதனால் பல்கலைக் கழகம் லேண்டாம். விஞ்ஞானப் படிப்பே தேவை இல்லை என்றல்லவா நான் சொல்ல வேண்டும். அப்படி நான் சொல்ல வில்லையே,

தமிழில் விஞ்ஞான நூற்கள் தேவை. தமிழர் விஞ்ஞானம் பயில வேண்டியதும் அவசியம் என்று நான் எண்ணுவதால் தான் உயர்தரக் கல்வி தமிழின் மூலமே போதிக்கப்பட வேண்டும் என்று போராடுகின்றேன்.

7.(ஏழு)

பெரியார் :

தமிழின் மூலம் மூடநம்பிக்கை தானே வளர்க்கப்பட்டது?

ம.பொ.சி:

ஆங்கில மொழியும், ஆங்கிலம் பயின்ற தமிழர்களும் கூட இந்த குற்றச்சாட்டுகளுக்கு விலக்கல்லவே. தமிழே பயிலாத தமிழிலுள்ள புராண இதிகாசங்களைத் தன் கரத்தாலும் தீண்டியறியாத டாக்டர் ஏ.எல்.முதலியார், ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவை ஏற்றுக்கொண்டவரா? நெற்றியில் நாமமிட்டு நாராயணனைப் பயனை செய்பவராயிற்றே!

ஆங்கிலம் பயின்று பி.ஏ. பி.எல். பட்டம் பெற்ற டாக்டர் பி.டி.ராசன் பக்தி மதத்திற்குப் புறம்பானவரா? ஐயப்பன் சிலையைத் தலையில் சுமந்து கொண்டு அவனி முழுதும் பவனி வருபவராயிற்றே!

ஆங்கில மொழி பயின்று பட்டம் பெறாத ஈ.வெ.ரா.வைப் போல சீர்திருத்தப் புரட்சியாளர் ஆங்கில மொழி பயின்றவர்களிலே ஒருவரைக் கூட நான் கண்டதில்லையே.

ஆகவே பரங்கிமொழிப் படிப்பிற்கும், பகுத்தறிவு இயக்கத்திற்கும் கொஞ்சங் கூட சம்பந்தமில்லை என்பதை ஈ.வெ.ரா. உணர வேண்டும்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.