குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 22 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பாளி சிங்கள தமிழ் நுால்களில் பூநகரிப்பிராந்தியத்திற்கு தொன்மையான வரலாற்றுப்பாரம்பரியம்

25.06.2018-இலங்கை பழைமைமிக்க வரலாறு கொண்டநாடு என்பது வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களால்ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முடிந்தமுடிவாகும், இதில் எவருக்கும் ஐயமில்லை. இன்று இலத்திரனியல்  உலகில் உலகின் எந்தமூலையில் ஒருசெய்தி வெளியிடப்பட்டாலும் முழுஉலகும் அறியும்படியான தொழில்நுட்ப அறிவியல் விண்ணைத் தொட்டுநிற்கின்றது.

அதனடிப்படையில்  குமரிக்கண்டத்தின் நிலம் கடற்கோள்கள் ஆழிப்பேரலைகளால் பலவாகப்பிரிந்ததும்  நீரில் மறைந்துபோனது என்பதும் பரவலான தகவலாக அறியப்பட்டு அறிஞர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட தமிழ் நுால்களின் பாடல்களில் குமரிக்கண்ட ஊர்கள் மலைகள் ஆறுகள்  என்பனகூட பாடப்பட்டுள்ளன. அந்த ஆதாரங்கள் மூலம்  குமரிக்கண்டத்திலும் பூநகரி என்ற நகரம் ஊர்  இருந்ததாக  பாண்டிச்சேரியைச்சேர்ந்த பேராசிரியர் திரு.க.கதிர்முத்தையன் அவர்கள் தன் ஆய்வுக்கட்டுரையில் ஆதாரங்களுடன் குறிப்பிடுகின்றார். நகரம் என்ற சொல்லே அங்குதான் உருவாகிற்று  என்று  நிறுவுகின்றார். அதைவிட நாம் அறிந்தமட்டில் பூநகரி மொட்டைக்கறுப்பன் அரிசி வடபகுதி மக்களால் விரும்பப்பட்ட அரிசியாகும் இன்றுவெளிநாடுகளில் கூட இப்பெயரில் அரிசி விற்கப்படுகின்றமையானது நடைமுறைக்காலத்திலும் பூநகரி பெருமையுடன் விளங்குகின்ற பகுதியாகும். இங்குவாழும் மக்கள் பூர்வீகமானவர்கள் தமிழ்ப்பண்பாட்டை மிகவும் விருபிப்பேணும் மக்கள்  கூட்டத்தினர் ஏழ்மையாக வாழ்ந்தாலும் விருந்தோம்பல் பண்பில் சிறந்தவர்கள். இத்தகைய மண்ணின் மைந்தனான திரு.பொன்னம்பலம் முருகவேள் அவர்கள் மலையகத்தில் கேவாகெட்ட இரகத்துங்கொட,றுாக்வுட் தமிழப்பாடசாலைகளில்  ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியதன்  பயனாக இலங்கையில் மிகவறிய மக்கள் மலையகத்தில் வாழ்கின்றார்கள் என்ற உண்மையை உணர்ந்தவராகவுள்ளார். 2014 ஆம் ஆண்டில் விடுமுறை கிடைக்காதபடியால் தனதுதுணைவியாரையும் பிள்ளைகளையும் இந்தப்பகுதிக்கு அனுப்பிவைத்து அந்தப்பாடசாலைகளை பார்வையிடவைத்ததோடு இரகத்துங்கொட பாடசாலைப்பிள்ளைகளுக்கு உபகரணங்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாக தனது மகன் மூலம் 25 000 ரூபா பணத்தினை அதிபர் அவர்களிடம் கையளித்திருந்தார். இது அவரின் பரந்தமனதைக்காட்டுகின்றது.   இத்தகைய திரு.பொ முருகவேள் அவர்கள் தான் பிறந்தமண்ணின் வரலாற்றை  மக்கள் அறியவேண்டும் என்ற  ஆவலுடன் பூநகரிபற்றி பலரும் எழுதிய கட்டுகைளையும் தானும் எழுதிய கட்டுரைகள் கவிதைகளையும்  தொகுத்து பூமியிலோர் புதையல் பூநகரி என்ற  நுாலினை எழுதி வெளியிடவுள்ளார். அந்தநுால் சிறப்பாகஅமைந்து பூநகரி வரலாற்றினை மீட்டு யாழ்ப்பாணத்திற்கு   கீழ்ப்பகுதியாகவுள் அந்த ஊரினை  விரைவாக அபிவிருத்தி செய்து யாழ்நகரின் நிலப்பிரச்சனை நீர்ப்பிரச்சனைகளில் இருந்து வடபகுதி மக்களை காப்பாற்ற  முடியும் என்று இலங்கைநாட்டின் பிரதமர் மதிப்பிற்குரிய திரு. இரணில் விக்கிரமசிங்க   அவர்கள் அண்மைக்கால யாழ்பாணப்பயணத்தின்போது கூறியது வெற்றிகரமாக  நிறைவேறவேண்டும் என்றும் இக்கணத்தி்ல் எண்ணுகின்றேன்.


பூநகரியில் மீண்டும் தென்னைவளம் நெல்வளம் வாழைவளம் கடல்வளம் பயிசர்ச்செய்கைவளம் நிறைந்த  இடமாக மாறவும் மிகவும் தொன்மைகளைக்கூறிநிற்கும் வரலாற்றைக்கொண்ட இந்தப்பூநகரிபற்றி  பத்தொன்பதாம் (!9) நுாற்றாண்டில் பழைய இலங்கை என்ற  நுாலை எழுதிய பொறியியலாளரான பாக்கர் அவர்கள் கி.மு. எல்லாளனின் சாதனையாக இன்றும் விளங்கிக்கொண்டிருக்கும் பெலிவாவி (வுவுனிக்குளம்) என்றும் அதன் நீர்கடலில்  சேரப்பாயும் ஆறு பூநகரியின் தென்பகுதியிலுள்ள  பாலியாறு  என்றும் குறிப்பிடுகின்றார். இவரின் கருத்தை ஏற்ற சமகாலத்தவரான லுாயிசு(ஸ்) கூறுகையில் இங்கு கிடைத்தகல்வெட்டுகள் நாணயங்கள் கட்டிட அழிபாடுகள் என்பவற்றுடன் இலங்கையில் உள்ள இடப்பெயர்களை  ஆராய்ந்த போது ஏனைய இடங்களை விடவும் பூநகரியில்தான் துாயதமிழில் பல இடப்பெயர்கள் இருந்ததாக  சிறப்பாகச் சுட்டிக்காட்டியிருந்தார். இதைவிடவும் இரண்டாம்நுாற்றாண்டின் அறிஞர் தொலமி அவர்கள் தனது நுாலில் பூநகரியை புதுக்கி என்றும் பூநகரியில் உள்ள கல்முனையை தலைக்கோரி என்றும் குறிப்பிடுகின்றார். பூநகரி பற்றி பாளி சிங்கள தமிழ் நுால்களில் பூநகரிப்பிராந்தியத்திற்கு தொன்மையான வரலாற்றுப்பாரம்பரியம்  இருந்து வந்துள்ள மையுடன் இலங்கையின் மனிதப்பரம்பலின் தொட்டில் என்பதை பூநகரியின் ஆய்வில்கிடைத்த சான்றுப்பொருள்களும் பூநகரிபற்றிய நுால்களின் ஆதாரங்களும் சான்றுபகிர்கின்றன.

மகாவம்சத்தில் இலங்கைவரலாற்றில்  அனுராதபுரத்திற்கு தெற்கே நாகதீபம் -நாகதீப என்ற அரசு இருந்தது என்றும் மணிமேகலையில் நாகநாடு என்றும் கூறுகின்றது. வல்லிபுரத்தில் கிடைத்த பொற்சாதனத்தில் நாகதீபத்தின்  தலைநகராக பூநகரி விளங்கியுள்ளது என்கின்றது. இத்தகைய பூநகரியின் ஏரிகளிலும்  காடுகளிலும் அரசபூங்காக்களிலும் இருந்து அரன்மனைத்தேவைக்கான பூக்களும் இறைவழிபாட்டிற்கான பூக்களும் கதிர்காம் முதல் தமிழகம்வரை அனுப்பப்ட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. பூநகரி என்ற அரச பெருநிலத்தின் பெயர் மூன்றுசொற்களின் புணரச்சியால் ஏற்பட்டதாகும் என்று பழையநுால்கள் கூறுகின்றன. பூ+நகர்+ஏரி=பூநகரி என்றானது. இங்கே பல ஏரிகள் இருப்தை இப்போதும் காணலாம். இத்தகைய பூநகரி பற்றிய நுால் சிறப்பிற்குரியது என்று மகிழ்ந்து வாழ்த்துகின்றேன்.

வணக்கம்.