குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 22 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மலேசியாவில் தனித்தமிழ் இயக்கச் சரவெடியாய் விளங்கிய பெருமகனார் வெற்றிச்சீலர் மறைவுற்றார்.

24.06.2018-மலேசியாவில்“பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பேரா மாநில திணைக்களத்தின் மேனாள் கல்வி அதிகாரியாகவும் அருந்தொண்டாற்றிய 'ஆசிரியமணி" , "தனித்தமிழ் மழவர்' தமிழ்த்திரு குழ.செயசீலனார் எனும் வெற்றிநெறியர் 23.6.2018 இரவு 10.45 அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தூயதமிழ்ச்சொற்கள் பலவற்றை பள்ளிக்கூடங்களிலும் பாடத்திட்டத்திலும் வழக்கத்தில் கொணர பங்களிப்பு செய்த தூய்தமிழ் நெஞ்சர்.. எம் போன்றோரை உயர்கல்வி வரை படித்துயர்ந்து மொழித்தூய்மைக்குக் காவலராய் விளங்கிடல் வேண்டும் என காணும் பொழுதெல்லாம் விழைந்த வேணவா கொண்ட பேரன்பர். தாம் தலைமையாசிரியராய் பொறுப்பேற்றுப் பணியாற்றிய தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியர்க்கும் மாணவர்க்கும் தூய்தமிழ் உணர்வினை ஊட்டிய தனித்தமிழ்க் காவலர் ஐயா குழ. வெற்றிச்சீலனார் மறைவுற்றார் எனும் செய்தி நம் நெஞ்சைப் பெரிதும் உலுக்கியது. அன்னாரின் இழப்பு மலேசியத் தனித்தமிழ் உலகத்திற்குப் பேரிழப்பாகும். அப்பெருமகனாரை இழந்து துயருறும் அன்னாரின் குடும்பத்தார்க்கு எம் கழிபேரிரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

இரா. திருமாவளவன்

“பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பேரா மாநில திணைக்களத்தின் மேனாள் கல்வி அதிகாரியாகவும் அருந்தொண்டாற்றிய 'ஆசிரியமணி" , "தனித்தமிழ் மழவர்' தமிழ்த்திரு குழ.செயசீலனார் எனும் வெற்றிநெறியர் 23.6.2018 இரவு 10.45 அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இறுதி மரியாதையும் வழிபாடும் 25.6.2018 (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் கோலாகங்சார் செண்ட் பெட்ரிக் தேவாலயத்தில் நடைபெறுவதோடு பிற்பகல் 2.30 அளவில் ஈப்போ பெர்ச்சாம் மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம். நன்றி” > தமிழ்மாறன்

இலங்கை தமிழகம் என தமிழ் நிலங்கள் இருக்கின்றநாடாக இருந்தாலும் துாயதமிழ் என்ற நிலையை நானும்  உணர்ந்தது மலேசிய அன்பர்களால்தான். இன்றும்  தமிழ் என்று வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழத்துாண்டிது மலேசியத்தமிழுணர்வாளர்களின் வாழ்கை முறைகளும் எழுத்துகளும் உரையாடல்களும் தான்.  இலங்கையில் பல்கலைக்கழகம்வரை  தமிழ் கற்கவும் கற்பிக்கவும் வழி்கள் இருந்தாலும் தமிழின் உண்மையான வரலாறு துாயதமிழுக்கான உண்மை உணர்வுகள் செயற்பாடுகள் அரிதாகத்தான் கல்வியாளர்களிடையே  இருக்கின்றது.

ஐயா தமிழ்த்திரு குழ.செயசீலனார் அவர்களின் துாயதமிழ் உள்ளம் சுவிற்சர்லாந்துவரை  பரவியும் பெருகியும் உள்ளது  என்பதே பெரிய உண்மை. உலகத்தமிழரிடையே தமிழ் எழுச்சியை  ஏற்படுத்தி வாழ்ந்த  இரா வீரப்பனார் .செந்தமிழ்த்தொண்டர் மு.மணிவெள்ளையனார் ஊடாக அவை சுவிற்சர்லாந்திலும் ஒரு வீச்சை ஒரு பாய்ச்சலை துாயதமிழ் நடவடிக்கைகளில் ஏற்படுத்தியிருக்கிறது அந்த எழுச்சியில் ஐயாவின் மூச்சும் கலந்துள்ளதாகக்கருதி சுவிற்சரலாந்திலிருந்து ஈழத்தமிழர்கள் சார்பாக ஐயா குழ.செயசீலனார் அவர்களுக்கு தமிழ்கலந்து இறுதி மரியாதை எண்ணங்களைச் சிந்துகின்றேன். பொன்னம்பலம்.முருகவேள் பூநகரியான்.

மலேசிய ஆசான் சற்குணன் எனும் நற்குணன் அவர்களின்   இரங்கல் செய்தி!


*தமிழ்த்தொண்டர், நற்றமிழ் அறிஞர், பேரா மாநிலக் கல்வித் திணைக்கள மேனாள் சிறப்பதிகாரி ஐயா குழ.செயசீலனார் மறைவு*


⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫


நல்லாசிரியராக இருந்து பின்னர் தலைமையாசிரியராகப் பணியாற்றி தமிழ்க்கல்விப் பணிக்குப் பெருமையும் பீடும் சேர்த்த நல்லாசான் இவர்.


பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்தில் நன்னெறிப் பாடச் சிறப்பதிகாரியாகவும் நல்ல தமிழை முழங்கும் அரிமாவாகவும் வலம்ம் வந்தவர்.


'குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை' எனும் நன்னூல் பாடலை ஒவ்வொரு கூட்டத்திலும் விளக்கிச் சொல்லி நல்லாசிரியர் பண்புநலன்களை வலியுறுத்தி தமிழாசிரியர்களை ஆற்றுப்படுத்தியவர்.


மிடுக்கான தோற்றத்தோடும் எடுப்பான நல்லதமிழ்ப் பேச்சாலும் முனைப்பான செயல்களாலும் ஆசிரியர் சமூகத்திற்கு முன்னுவமியாகத் (Role Model) திகழ்ந்தவர்.


எந்நேரமும் புன்னகை தவழும் முகத்தோடும் உண்மை, நேர்மை ஆகிய உயர் பண்புகளோடும் வலம் வந்தவர்.


முதன் முறையாக அறிவியல் கலைச்சொல் கையேட்டை உருவாக்கி பேரா மாநிலத்தில் தமிழைச் செழிக்கச் செய்தவர்.


பேசினாலும் எழுதினாலும் முழுக்க முழுக்க நல்ல தமிழையே பயன்படுத்த வேண்டும் எனும் கொள்கையில் உறுதிகொண்டவர். தனித்தமிழின் மீது ஆழ்ந்த அன்பும் நம்பிக்கையும் உடையவர்.


இளம் ஆசிரியர்களுக்கு தன்முனைப்பூட்டும் வழிகாட்டியாக இருந்து நல்லாசிரியர்கள் பலரை உருவாக்கியவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் முதலான தனித்தமிழ் அறிஞர்களை ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.


தமிழே மூச்சாக தமிழ் வளர்ச்சியே சிந்தனையாக வாழ்ந்த நல்லதமிழ் உணர்வாளர் மறைந்தார் எனும் துயரச் செய்தி உளத்தையும் உணர்வுகளையும் மிகவும் வாட்டுகிறது; வருத்துகின்றது.


தமிழுக்கே தம் வாழ்வை ஒப்புக்கொடுத்த ஐயா குழ.செயசீலனாரின் அருமை ஊழியங்களைக் கைகூப்பி தொழுகின்றேன்; தலைதாழ்த்தி வணக்கஞ் செய்கின்றேன்.


அன்னாரின் மறைவு தமிழ்க்கல்விச் சமூகத்திற்கும் தமிழ்ப் பற்றாளர்களுக்கும் பேரிழப்பு என்றால் மிகையன்று.


அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்திருக்கும் அவரின் அன்புத் துணைவியார் ஐயை.திருமதி தேவிஸ் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எமது கண்ணீர் இரங்கலைத் தெரிவிக்கின்றேன்


அன்னாரின் ஆதன் இறைமைத் திருவடி நிழலில் இளைப்பாற நெஞ்சாற இறைஞ்சுகின்றேன்.


 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.