குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 22 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழ்நாடும் தமிழ் தேசியமும்! இந்த மாநிலத்தின் பெயர் என்ன? தமிழ்நாடு இங்குள்ள மொழி என்ன? -விசுவா

தமிழ்நாடும் தமிழ் தேசியமும்!


இந்த மாநிலத்தின் பெயர் என்ன?


தமிழ்நாடு


இங்குள்ள மொழி என்ன?


தமிழ்


இங்கு ஆட்சி மொழி என்ன?


தமிழ்


இங்கு ஏன் தமிழ் முக்கியத்துவம் பெறுகிறது?


தமிழோட தாய்வீடு இது. எந்த மொழிக்காரராக இருந்தாலும் தமிழை வைத்து வாழ முடியும்.


இங்கு அரசியல் கட்சிகளின் முதன்மைப் படுத்தும் கொள்கை என்ன?


தமிழ் வளர்ப்பது, தமிழ் அன்னையைக் காப்பது.


தமிழுக்கு என்று ஒரு தனி அமைச்சகம் எங்கே உள்ளது?


வேறெங்கே தமிழ்நாட்டில்தான்.


செம்மொழி ஆய்வு மையம் எங்குள்ளது?


இதிலென்ன சந்தேகம். தமிழ்நாட்டில்தான்.


உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் எங்கிருக்கிறது?


என்ன கேள்வி...இங்கதான்.


வெளிநாடுகள்ள இருந்துக்கிட்டு தமிழருக்கு எதிராக கம்பு சுத்தறவன், ஊடுகட்டறவன் எல்லாம் என்ன மொழில சுத்தறான், சொந்த நாடுன்னு எதைச் சொல்றான்?


தமிழ்நாடு, இந்தியான்னுதான்.


சரி...சந்திரபாபு நாயுடு கட்சிப் பேரு என்ன?


தெலுகு தேசம்.


கன்னடிக ரக்‌சண ன்னா என்ன?


கன்னடிகா பாதுகாப்பு...


அப்போ தமிழ்நாட்டோட தேசியம் என்னவா இருக்கும், இருக்கனும்?!


ம்...ம்...அது வந்து தமிழ் தேசம், தேசியம்.


ம்...அப்போ அவனவன் மாநிலத்துல அவன் மொழி கொண்ட தேசியத்தை அவன் மாநிலத்துல வேற ஒரு தேசியமா, அந்நியமா, பிரிவினையா பார்க்கறது இல்ல?!


அதெப்படி பார்க்க முடியும். பார்த்தா காது மேலையே அடிப்பானுங்களே!


ம்..அப்போ தமிழ்நாட்டுல மட்டும் என்ன ம...த்துக்கு தமிழ், தமிழர் நலன் சார்ந்ததைப் பத்திப் பேசறவங்களை தமிழ் ஆதரவு அமைப்பு, தமிழ் தீவிரவாதிகள்னு சொல்ற...


அது வந்து...எல்லா மொழி பேசறவங்களும் இருக்காங்களே...


சரி ஆந்திரா, கர்நாடகா, மகாராச்ட்ரா, அசுசாம்ல எல்லாம் வேற மொழிக்காரங்க இல்லையா?


இருக்காங்களே.


அப்புறம் ஏன் இங்க தமிழ்நாடுன்னு பேர வச்சுட்டு தமிழ்னு சொன்னா வேற்றுக்கிரக வாசி போல பார்க்கனும்?!


தனி நாடு கேட்டாங்கதானே?!


யார் கேட்டது?


அண்ணா.


கடைசிவரை அதை கேட்டாரா?


இல்லையே, மாநில சுயாட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் தர்றோம், மீறினால் திமுகவை தடை செஞ்சுடுவோம்னு சொன்னதும் அதை கைவிட்டதா சொல்லிட்டாரே.


ம்...அப்புறம் வேறு சனநாயக கட்சியோ, மக்களோ யாராவது கேட்டாங்களா?


இல்ல...


அப்புறம் என்ன ம....த்துக்கு அதையே புடிச்சுக்கிட்டு அலையனும்!


......


தமிழ்னு சொன்னா பிரிவினைவாதம்னா நீங்க முசுலிம் பயங்கரவாதம்னு பொத்தாம்பொதுவா குற்றம் சாட்டி ஒரு சமூகத்தையே பிரிச்சுப் பேசறது என்ன வாதம்?

.....


இந்த மாநிலத்தோட பேர் என்ன?


தமிழ்நாடு.


இந்த மாநில அரசியலோட பேர் என்ன? அடிப்படை என்ன?


தமிழ், தமிழரரசியல், தமிழ் தேச அரசியல்.


ம்...அது.


-விசுவா விசுவநாத்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.