குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 22 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன? இசுலாம் ஏன் இந்து ஆனது ?முக்கால் மொட்டைக்குடும்பி

எப்படி  முக்கால் தொப்பி முழுமொட்டாக்கானது!   நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன? இசுலாம் ஏன் இந்து ஆனது ?01.06.2049-12.06.2018நேற்றையதினம் (12.06.2018) சனாதிபதி அவர்கள் புதிதாக ஐந்து பிரதி அமைச்சர்களையும் இரண்டு ராயாங்க அமைச்சர்களையும் நியமித்துள்ளார்.

இதன் பிரதான நோக்கமாக இருக்கக்கூடியது..

1. மகிந்த தரப்புக்கான ஆதரவு சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கியதேசியக்கட்சி இரண்டாம்தர உறுப்பினர்கள் மத்தியில் அதிகரித்துவருவதால் கட்சி உறுப்பினர்களுக்கு பதவிகளை சுழற்சிமுறையில் வழங்கி திருப்திப்படுத்தவேண்டிய நிலை. இதற்காகவே அமைச்சுக்களை குறைக்கிறோம் என்று சொல்லி ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசு தேவைக்கு அதிகமாக அமைச்சுக்களை அதிகரித்துவருகிறது.

2. பிரதேசவாரியாக கட்சியினுடைய பலத்தை அதிகரிப்பதற்கு அப்பிரதேசத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அதனூடாக எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் மற்றும் சனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற முயற்சித்தல்.

நடந்த தவறு..

பெருவாரியான பொறுப்புகளுடன் இதுவரை பிரதியமைச்சர் ஒருவர் இல்லாத அமைச்சுக்களின் பட்டியலின் ஒழுங்கில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வசமுள்ள "மீள் குடியேற்றம், புனர்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள்" அமைச்சும் தெரிவாகிறது. இந்த அமைச்சில் சுவாமிநாதனின் கீழ் செயற்பட ஒரு பிரதி அமைச்சரை, ஏற்கனவே புதிதாக அமைச்சுக்களை வழங்க திட்டமிட்ட ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் தெரிவுசெய்யவேண்டிய நிலை. வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள் குடியேற்றம் இவ் அமைச்சின் பாரிய பொறுப்புகள் ஆகையால் தமிழர் ஒருவரையோ அல்லது வடக்கை சேர்ந்த முசுலீம் ஒருவரையோ நியமிப்பது பொருத்தமாகிறது. அந்த நிலையில் பட்டியலில் அங்கயனும், காதர் மசுதானும் தெரிவுக்குரியவர்கள் ஆகிறார்கள். ஏற்கனவே தமிழரின் கீழ் உள்ள ஒரு அமைச்சில் இன்னொரு தமிழரை பிரதி அமைச்சராக நியமிப்பதால் அமைச்சின் சேவைப் பரவலாக்கம் குறையலாம், இவ் அமைச்சினூடாக வடக்கில் கணிசமான அளவுள்ள முசுலிம்களுக்கும் சென்றடையவேண்டிய "வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம்" தொடர்பான பணிகள் தவிர்க்கப்படலாம் என்கிற கணிப்பிலும் ஏற்கனவே தமிழர் வசமுள்ள அமைச்சில் இன்னொரு தமிழரை பிரதியமைச்சராக நியமிப்பதால் மேலதிக தமிழர் நலன் ஏதும் இருக்கப்போவதில்லை (அங்கயன் இப்படி எண்ணியிருக்கலாம்) என்ற கணிப்பிலும் அங்கயனுக்கு இந்த அமைச்சின் பிரதியமைச்சர் பதவி வழங்கப்படாமல் விவசாய அமைச்சின் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. (தமிழருக்கு புதிதாக இன்னொரு அமைச்சு). இப்போ காதர் மசுதான் சுவாமிநாதன் கீழுள்ள அமைச்சுகளுக்கு பிரதி அமைச்சர் ஆகிறார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி எனும் 75% பொறுப்புகளுக்கு பிரதி அமைச்சராகுவதற்கு பொருத்தமுடையவராக காதர் மசுதான் இருந்தாலும் அந்த அமைச்சின் 25% இருக்கும் "இந்துமத அலுவல்கள்" அமைச்சிற்கு துளியேனும் பொருத்தமுடையவராக இல்லை. இங்கே சனநாயகத்தின் பெரும்பான்மை எனும் பதம் விளையாட பெரும்பான்மை பொருத்தமுடையவராக இருப்பதால் பெரும்பான்மையால் நியமிக்கப் படுகிறார். இங்கே பெரும் பொருட்டாக கருதாக மைத்திரியின் 25% புறக்கணிப்பு இந்துக்களின் 100% கணிப்புக்குரிய பொருளாகிறது. ஊடகங்களும் மக்களும் மற்றைய மூன்று அமைச்சுக்களை மறந்து இந்துமத அலுவல்கள் பிரதி அமைச்சு ஒரு முசுலிம்கா? என வைரலாக்கின. இந்துக்களின் மனங்களை வெல்வதில் 25% புறக்கணிப்பால் தோற்றிருக்கிறார் மைத்திரி.

நடக்கப் போவது..

இப்போது இதற்கு ஆரம்பித்திருக்கும் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரையான எதிர்ப்பு நிச்சயம் மைத்திரிக்கு தலையிடியை கொடுக்கும். ஆதலால் காதர் மசுதான் "இந்துமத விவகார" அமைச்சிலிருந்து தூக்கப்படப்போவது உறுதி. ஆனால் இது எப்படி நிகழக்கூடும் என்பதே விடயம்..

பின்வரும் ஏதேனும் ஒரு முறையில் இந்த சென்சிட்டிவான விடயம் கையாளப்படலாம்.

வழி 1:

சுவாமிநாதனின் அமைச்சின் கீழேயே பிரதியமைச்சராக காதர் மசுதான் இருப்பார்.ஆனால் "இந்து மத அலுவல்கள்"அமைச்சில் தலையிடமாட்டார்.

இது சொல்வதற்கு சாத்தியம் போல் இருந்தாலும் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரம் என்பன வெவ்வேறு அமைச்சு பெயராக இருந்தாலும் ஒரே அமைச்சரின் கீழ் வருகிறது. ஆதலால் பாதீடு மற்றும் நிர்வாகத்தலையீடுகள் ஒன்றுக்குள் ஒன்று இருக்கும். அதே நேரம் வர்த்தமானியில் இம்முறைக்கு இடமிருப்பதாக தெரியவில்லை. ஆதலால் இது சாத்தியமில்லை

வழி 2:

மேற்சொன்ன வழி 1 சாத்தியமில்லை என்பதால் காதர் மஸ்தான் வேறொரு அமைச்சுக்கு மாற்றப்படுவார். அப்படி மாற்றப்படும் போது சுவாமிநாதனின் கீழ் வேறொரு பிரதி அமைச்சர் நியமிக்கப்படுவாரா என்றால் இல்லை என்பதே எனது பதில். காரணம் இந்த அமைச்சில் மீள ஒரு வேற்று மதத்தாரை நியமித்து கடினப்படப்போவதில்லை அப்படியாயின் தமிழ் இந்துவான அங்கயனை நியமிப்பாரா என்றால் ஒரு தமிழ் அமைச்சரின் கீழ் இன்னொரு தமிழ் பிரதி அமைச்சர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படியே நியமித்தாலும் நட்டம் தமிழருக்கே. ஏற்கனவே தமிழர் வசமுள்ள அமைச்சிற்கு இன்னொரு தமிழரை நியமிப்பதால் தமிழருக்கு மேலதிக பலன் ஏதும் இல்லை. அத்துடன் அங்கயன் விவசாய அமைச்சின் பிரதியமைச்சராகியுள்ளதால் தமிழரின் நிர்வாகத்திற்கு மற்றுமொரு அமைச்சு கிடைத்திருக்கிறது. இதனால் அங்கயன் நிறைய நன்மைகளை தமிழ் விவசாயிகளுக்கு செய்யக்கூடிய வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்த அமைச்சை இனி இழந்தால் நட்டம் தமிழர்க்கே!


அவ்வாறாயின் அங்கயன் சுவாமிநாதன் கீழ் நியமிக்கப்படாவிட்டால் புதிய பிரதி அமைச்சர் சுவாமிநாதனின் கீழ் நியமிக்கப்படுவாரா என்றால்.. சனாதிபதியின் நோக்கம் அமைச்சில் மேலதிகமாக ஒருவரை நியமித்து வேலைகளை துரிதமாக்குவது என்பதை விட கட்சி சார்ந்தோரை திருப்பதி படுத்துவது என்பதே.

ஆக காதர் மசுதான் இந்த அமைச்சில் இருந்து தூக்கப்பட்டால் சுவாமிநாதனின் கீழ் புதிய பிரதியமைச்சர் நியமிக்கப்படாமல் இருக்க 80% வாய்ப்புகளும் அங்கயனை அப்பொறுப்பிட்கு நியமிக்க 20% வாய்ப்புகளும் இருக்கிறது.


வழி 3:

அமைச்சர் மனோ கணேசன் கேட்டுக்கொள்வது போல 'சுவாமிநாதனிடம் இருக்கும் இந்துமத விவகார அமைச்சை வேறொரு அமைச்சுடன் இணைத்துவிடவும். சுவாமிநாதன் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகியவற்றின் அமைச்சராகவும் அவற்றுக்கான பிரதி அமைச்சராக காதர் மசுதான் இருக்கட்டும்' எனும் வழி சாத்தியமா என்றால்...

முதலில் சுவாமிநாதனிடமிருந்து இந்து விவகார அமைச்சை பிரித்து எடுத்தால் அதற்கென புதிதாக அமைச்சரவை மதிப்ள்ள அமைச்சரை நியமிப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை. (ஆளும் இல்லை.) அவ்வாறெனின் அவ் அமைச்சினை வேறொரு தமிழரின் அமைச்சுடன் சேர்க்கக்கூடும். அப்படிப்பட்ட அமைச்சரவை மதிப்புள்ள அமைச்சர்களாக இருப்பவர்கள் மனோகணேசன் மற்றும் திகாம்பரம். இதில் திகாம்பரம் அவர்கள் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக மலையகம் சார்ந்த அபிவிருத்தியில் மையப்பட்டு இருப்பதால் அவருக்கு வழங்கப்படாது. மனோ கணேசனின் அமைச்சுடன் இணைக்கப்படுமா என்றால் அவருக்கு இப்போதுதான் கூடுதல் பொறுப்புகள் இணைக்கப்பட்டது. அதைவிட பெரிய சிக்கல் அங்கே ஏற்கனவே ஒரு முசுலீம் பிரதி அமைச்சர் இருக்கிறார். ஆக சுவாமிநாதனிடமிருந்து இந்து மத அலுவல்கள் அமைச்சு பிரிக்கப்பட்டால் அதை வழங்குவதற்கு பொருத்தமான அமைச்சரவை மதிப்புள்ள அமைச்சர் இல்லை. அதையும் மீறி பிரிக்கப்படுமானால் மகேசுவரனுக்கு வழங்கப்பட்ட்து போல் ஒரு ராயாங்க அமைச்சு இந்து மத அலுவல்களுக்காக வழங்கப்பட்டு அதற்கு விசயகலா நியமிக்கப்படலாம்


வழி 4:

வழி 3 ற்கு நேர்மாறாக சுவாமிநாதனிடம் இந்து மத அலுவல்கள் அமைச்சை மட்டும் கொடுத்து மீதி மூன்று முக்கிய அமைச்சையும் வேறொருவருக்கு கொடுக்கலாம். அப்படி வழங்கப் படுவது நிச்சயம் இன்னொரு தமிழருக்காக இருக்கப் போவதில்லை. இது மட்டும் நிகழ்ந்தால் அதன் மிகப்பெரிய நஷ்டத்தை தமிழர்கள் எதிர்நோக்குவர்.


இந்த வழிகளில் வழி 1 சாத்தியமில்லை என்று புரிந்திருக்கும். வழி 2 இற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் தமிழர்க்கு மேலதிக நன்மை இல்லை. பாதிப்பதற்கு வாய்ப்புண்டு. வழி 3 இன் படி ராயாங்க அமைச்சர் பதவி வழங்கப்படலாம். இதனால் இந்துமத விவகாரம் அமைச்சரவைமதிப்பை இழக்கும். வழி 4 நிகழ்ந்தாலும் நஷ்டமாகவே அமையும்.


இத்தனைக்கும் மேலாக இந்த விடயத்தில் என்ன முடிவை எம் தலைவர்கள் பெற்றுத்தரப் போகிறார்கள்? மைத்திரி என்ன முடிவை வழங்கப்போகிறார் என அறிய ஆவல்.


-சொபிசன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.