குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

‘அரசியல் அறிதல்’ என்பது , எமது ஈழத் தமிழ் சூழலில் அரிதாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது.

02.06.2049-12.06.2018-ஒரு நாட்டில் சிவில் சமூக நிர்வாக கட்டமைப்பு எப்போது இராணுவ மயமாக்கப்படு கின்றதோ, அப்போதே அனைத்து சனநாயகங்களும், சிவில் உரிமைகளும், சுதந்திரங்களும் பறிபோகின் றன.தமிழ் பிரதேசங்களில் சிவில் நிர்வாகங்களை இராணுவம் பொறுப்பெடுக்கும் நிலையானது இதனையே சுட்டிக்காட்டுகின்றது.இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்றே சொல்லவேண்டும்.

இராணுவம் என்பது ஒரு அரசின் அடக்குமுறை கருவி.அரசின் கட்டளையை நிறைவேற்றுவதே அதன் பிரதான நோக்கம்.

இராணுவ சீருடை தரித்தவர்கள் மத்தியில், மனிதாபிமானிகள் இருக்கக்கூடும். தங்கள் கைகளில் அதிகாரம் கிடைக்கும்போது, அதனூடாக தங்களின் மனிதாபிமான செயற்பாட்டை காண்பிக்கவும் கூடும்.ஆனால் இவையெல்லாம் ஒரு இராணுவத்தை புனிதப்படுத்தி விட முடியாது.

ஏதும் அற்று ஏதிலிகளாக்கப்பட்டு, எதிர்கால வாழ்வற்று கொடுந் துயர்கொண்டு வாழும் எமது மக்களுக்கு, அந்த இராணுவ அதிகாரியின் மனிதாபிமானம் பெருங்கொடையாகவே அமைந்திருக்கும்.

அந்த மக்கள் அந்த இராணுவ அதிகாரியின் மனிதாபிமானம் கண்டு கண்ணீர் சிந்துவது இயற்கையானது.அதுவே மனித இயல்பு.

ஆனால், அரசியல் அறிதல் கொண்ட மனிதர்கள் இதனை கொண்டாட முடியாது .

இன்று முகப் புத்தக வெளியில் இதனை இராணுவத்தின் மனிதாபிமானமாக காட்ட முயல்வது, அரசியல் அறிவிலி தன்மையின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும்.

இவ்வாறான அரசியல் அறிதல் அற்ற இந்த நபர்களுக்காக, நாம் பரிதாபங் கொள்ள மட்டுமே முடியும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.