குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஐப்பசி(துலை) 18 ம் திகதி வியாழக் கிழமை .

`ஆபத்துகள் அதிகம்; உடனடியாகத் தடுக்கவும்’ - பெரிய கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்.

கு. ராமகிருச்ணன் ம.அரவிந்த் 01.06.2049-11.06.2018-தஞ்சை பெரியக் கோயில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாது காப்பும் இன்றி பல வகைகளிலும் சீரழிந்து கொண்டி ருப்பதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு கள் எழுந்து ள்ளன. கோயில் கோபுரத்தை  இலச்சனை யாகக் கொண்ட தமிழக அரசுகள் என்னசெய்து கொண்டி ருக்கின்றன என்கின்றது  குமரிநாடு. இணையம்.

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த பழ.இராயேந்திரன், ‘உலகப் புகழ்பெற்ற கோயிலாகத் தஞ்சை பெரிய கோயில் போற்றப்படுகிறது. ஆனால், இக்கோயிலின் நிர்வாகம், இதன் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் கொஞ்சம்கூட  அக்கறை செலுத்துவதில்லை. இக்கோயிலில் உள்ள இடிதாங்கி பழுதாகிக் கிடக்கிறது. இதனால்தான் லேசான இடியைக்கூட எதிர்கொள்ள முடியாமல், இக்கோயிலின் இரண்டாவது நுழைவாயிலான கேரளாந்தகன் நுழைவாயில் கோபுரம் சேதமடைந்தது. இடிதாங்கி நல்ல நிலையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதனை செய்திருக்க வேண்டும். ஆங்காங்கே இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் இடிதாங்கி வைக்க முடியுமா என ஆய்வு செய்ய வேண்டும். சாதாரண இடிக்கே இந்த சேதம் ஏற்பட்டுள்ளதென்றால் பெரிய அளவிலான இடி ஏற்பட்டால் கோயில் கருவறையின் பிரதான கோபுரத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது.

கோயிலுக்குள் உள்ள கண்காணிப்புக் கேமராக்களும் ஒழுங்காகச் செயல்படவில்லை. ஏற்கெனவே இங்கிருந்து 60-க்கும் மேற்பட்ட சிலைகள் திருடப்பட்டுள்ளன. மீண்டும் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சமூக விரோதிகளால் கோயிலுக்கு வேறு ஆபத்துகள் நிகழக்கூடும். கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்க வேண்டும். தற்போது இக்கோயில் தஞ்சை அரண்மனை தேவசுதான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ்தான் அரண்மனை தேவசுதானம் உள்ளது. பெரிய கோயில் உண்டியலில் ஒவ்வொரு மாதமும் 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது. இதுமட்டுமல்லாமல் இக்கோயிலுக்குச் சொந்தமான கடைகள், விவசாய நிலங்கள் மூலமாகப் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இவற்றில் ஒரு சிறு பகுதிகூட, கோயிலின் பராமரிப்புக்கோ பாதுகாப்புக்கோ செலவிடப்படுவதில்லை. ஊழல் முறைகேடுகள் மலிந்துள்ளன. இங்கிருந்த யானைக்கு ஒழுங்காக உணவு கொடுக்காமல் பட்டினிப் போட்டு பொய் கணக்கு எழுதப்பட்டதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொல்கிறார்கள். அந்த யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தே போய்விட்டது” என்றார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தென்னன் மெய்ம்மன், ``கருவறையின் வெளிப்புறம் உள்ள தட்டு ஓடுகளைப் பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுத்து, புதிய தட்டு ஓடு பதிப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயல். இது கருவறை கோபுரத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். இதன் எடை ஒன்றரை இலட்சம் டன். கருங்கற்களால் இவை அடுக்கப்பட்டுள்ளன. கருவறை கோபுரத்தின் உறுதித்தன்மை என்பது, தரைத்தளத்தையும் சார்ந்துள்ளது. தரைத்தளத்துக்கு கீழே 350 அடி ஆழம் வரை மணல் மட்டுமே உள்ளது. இதன் மீது 6 அடி உயரத்துக்கு செங்கல் பொடி உள்ளது. இதற்கும் மேல் ஒன்றரை அடி உயரத்துக்கு சுண்ணாம்புக் கட்டு உள்ளது. இவை பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுக்கப்பட்டு நாளும் நூற்றுக்கணக்கான பார ஊர்திகளில் வெளியற்றப்படுகின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.