குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

எகிப்து காசா பிரமீட்டில் எழுதப்பட்டு இருக்கும் “கந்தன்”

20.05.2049-03.06.2018-எகிப்து பிரமிட்டில் கந்தன் என்னும் சொல் அக்கால தமிழ் நாட்டு பகுதியில் பாவிக்கப்பட்ட தமிழி எழுத்துகளால் எழுதப்பட்டு இருக்கிறது.(கி.மு ஆறாயிரம் ஆண்டு கால பகுதியில் பயன்படுத்திய எழுத்துகள் என்று சொல்லபடுகின்றது).மொழி ஆய்வாளர் மதிவாணன் இதனை உறுதி செய்துள்ளார்.

காசா பிரமீட் - கந்தன்

எகிப்தியர்களின் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் தமிழர்களின் தொன்ம அடையாளங்கள் ஏராளம் உள்ளதாக கடல் சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, உலகம் முழுவதும் பரவியது தமிழர்களின் கடல் கடந்த வணிகம். இதில், உலகின் மேற்கு பகுதியை இணைக்க மையப்பகுதியில் இருக்கும் எகிப்து நாட்டின் வணிகம் மிக முக்கியமானது. ஏனெனில், உலகின் மையப்பகுதியில் இருக்கும் நாட்டில் கடல் வணிகம் செய்யும் திறன் பெற்றவர்கள், உலகம் முழுவதும் வணிகம் செய்யும் திறன் பெற்றவர்காளாக இருக்க முடியும். அந்த வகையில், உலக கடல் பயணத்தின் போது ஒரு குறிப்பிட்ட திசையை துல்லியமாக அறியும் வகையில் 1,024 திசை அறியும் திறன், இடி, மின்னல் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் திறன், சுனாமி, கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பிக்கும் திறன் பெற்றவர்களில் கைத்தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில், தமிழர்கள் அனைத்து திறன்களையும் பெற்று கடல் வணிகத்தில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர்கள்.

காசா பிரமிட்

எகிப்தில் ஆயிரக்கணக்கான பிரமிட்டுகள் உள்ளன.அவற்றுக்கெல்லாம் முக்கிய பிரமிட் காசா பிரமிட் தான்.இந்த பிரமிட்டில் தான் மேலே நாம் குறிப்பிட்டது போல “கந்தன்”  என்று முருகனை குறிக்கும் சொல் தமிழி எழுத்தில் எழுதப்பட்டு உள்ளது.

கந்தன் காசா பிரமிட்

எகிப்து நாட்டில் கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் தமிழி எழுத்துக்கள்

சரி தமிழகமும் எகிப்தும் தொடர்பற்ற நிலப்பரப்புகளே என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

இங்கு தான் ஆதாரங்கள் பல கேள்வ்விகளை எமக்கு முன் வைக்கின்றன.

கடல் வணிகத்தில் அன்றே தமிழர்கள் தலை சிறந்து விளங்கினர்.

கண்டப்பிளவுக்கு முன்னர் இருந்த கண்டங்கள்

பிரமிட் கட்டுமானங்களில் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்னும் சந்தேகங்கள் .

எது எப்படியோ ஒன்று மட்டும் நிச்சயம் மனித குல ஆரம்பத்தில் இருந்து தமிழ் ஒரு ஆளுகையை கொண்டு இருந்து இருகின்றது.

அதுபோல வேறு கடவுள்கள் எமக்கு திணிக்கப்பட  முதல் கந்தன் என்னும் கடவுளும் அச்சொல்லும் எம்மிடையே முக்கியமான ஒன்றாக ஊறிப் போய் இருக்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.