குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

காதல் செய்வதுதான் அறம்!! (நெய்தற்கலி : 09)

19..05.2049-02.06.2018-தலைவனும் தலைவியும் உடன்போக்கு நிகழ்த்துகின்றனர். அவர்களைத் தேடிக்கொண்டு சென்ற வளர்ப்புத்தாய், வழியில் எதிர்ப்படும் அந்தணரிடம் அவர்களைப் பற்றிக் கேட்கிறாள்.  என் மகளும் இன்னொருத்தி மகனும் பிறர் அறியாமல் காதலிற்கூடி இவ்வழியே செல்வதை நீர் கண்டீரா??

காணாமல் இல்லை; கண்டேன். எனினும் அதுதான் அறம் என்று கருதி நான் என் வழியிலேயே வந்துவிட்டேன். அந்த அழகனோடு செல்வதற்கு அரிய வழியில் செல்லும் அப்பெண்ணின் தாயாராக நீங்கள் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

சந்தனம் தண்மையானது. மணம் மிகுந்தது. பூசிக்கொள்வதற்கு இனிமையானது. எனினும் அதனைப் பூசிக்கொள்பவர்களைத் தவிர, அது பிறந்த மலைக்கு அதனால் என்ன பயன்?

மாலையாகக் கோர்த்து அணிந்து கொள்பவர்களுக்குத்தான் முத்து இனிமையானதே தவிர, அது பிறந்த கடலுக்கு அதனால் என்ன பயன்?

யாழிசையை மீட்டுவதால் அதனை வாசிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்தான் இன்பம். அவ்விசையால் யாழுக்கு என்ன பயன்??

இவற்றை எண்ணிப்பாருங்கள். உமது மகளும் உங்களுடைய வீட்டிலேயே தங்கியிருப்பதால் யாது பயன்? தனக்குச் சிறந்த உறவாகிய கணவனுக்குப் பணிவிடை செய்வதற்குச் செல்கின்றாள். இல்லற நெறியிலிருந்து மாறாமல் இருப்பவர்களுக்கு சரியான வழியும் அதுதான். அதனால், மிக்க கற்பினையுடைய அவளுக்காக நீங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம்.!


எறித்தரு கதிர்த்தாங்கி ஏந்திய குடைநீழல்

உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்

நெறிப்படச் சுவல்அசைஇ வேறுஓரா நெஞ்சகத்துக்

குறிப்புஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்!

வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,

தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;

அன்னார் இருவரை காணிரோ?- பெரும!

காணேம் அல்லேம், கண்டனம், கடத்து இடை;

ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,

மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?

நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,

நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?

தேரும்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,

யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?

சூழும்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

என ஆங்கு,

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;

அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ!-

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.