குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஐப்பசி(துலை) 18 ம் திகதி வியாழக் கிழமை .

மனிதன் பூமியை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது!

17.05.2049-31.05.2018-வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020இலும், செவ்வாய்க்கு 2025இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும்.ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என மறைந்த உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரும் பிரபல விஞ்ஞானியுமான சுடீபன் காக்கிங் தெரிவித்துள்ளார்.

 

உலகத்தை தனது கண் அசைவினில் ஆட்டிப்படைத்த ஸ்டீபன் ஹாக்கிங், தான் இறப்பதற்கு முன்னைய காலப்பகுதிகளில் பல ஆய்வுகளை நடத்தி இவ்வுலகிற்கு தீர்க்கத்தரிசன கருத்துக்கள் பலவற்றை முன்வைத்துச் சென்றுள்ளார்.

எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று அவர் வலியுறுத்திச் சென்றுள்ளார்.

பூமியைவிட்டு மனிதன் வேற்றுக்கிரகத்திற்கு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் மனித இனத்தின் எதிர்காலம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ள தீர்க்கத்தரிசனங்கள் என நோக்கும்போது,

இந்த விவகாரம் எதிரெதிர் நாடுகளை ஒன்றிணைத்து, எதிர்வரும் பெரும் பிரச்சனையை ஒன்றிணைந்து கையாள வழிவகை செய்யும் என்று நம்புவதாகக் கூறினார்.

மனித இனம் பூமியில் அதிக காலம் வாழ முடியாது. ஏனென்றால், பூமி, ஆசுட்ராய்டு என்று அழைக்கப்படும் பெரிய விண் பாறைகளால் மோதப்படவும், நம் சூரியனாலேயே விழுங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பூமி முழுவதும் அழிந்துவிடும். எனவே தொலைதூர கிரகங்களுக்கு செல்வதே மனித இனத்தின் அழிவைத் தடுக்க ஒரே வழி என்று வலியுறுத்தியுள்ளார்.

விண்வெளி சம்பந்தப்பட்ட படிப்புகளான ஆசுட்ரோபிசிக்சு மற்றும் காசுமோலயி உள்ளிட்ட படிப்புகளை இளம்தலைமுறையினர் ஆர்வமுடன் கற்க வேண்டும்.

மனித இனத்தின் இந்த தொலைதூரப் பயணமானது தவிர்க்க முடியாதது. ஏனெனில் பூமியில் பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்கள் குறைந்து வருவது பூமியை அச்சுறுத்துவதாக உள்ளது.

நாம் பூமியை விட்டு கட்டாயம் செல்லவேண்டும். வேறொரு சூரியனைக் கொண்ட கிரகத்தைக் கண்டறிந்து, அங்கு சென்று வாழவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால், யாருமே போகாத கிரகத்தில் நாம் சென்று வாழ வேண்டும்.

அதற்கான ஆயத்தப் பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். இன்னும் 30 ஆண்டுகளில் பூமியிலிருந்து வெளியேற ஏதுவாக, லூனார் பேசு என்று கூறப்படும் விண்வெளி காலனிகளை விஞ்ஞானிகள் அமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிச் சென்றுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.