குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .

"மக்கள் போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியையே தரும்!"கட்சிகளின் சுயநலங்களும் அதிகார வெறியர்களின்

போராட்டங்களும்  தோல்வியடைதல் இயல்பே! 14.05.2049-  28.05.2018மக்கள் போராட்டத்திற்கும், உயிர் விதைத்த மக்கள் போராளிகளின் தியாகத்திற்கும் வரலாற்றில் மீண்டும் ஒரு வெற்றி!தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதானந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, மாவட்ட ஆட்சியர் நந்தூரி முன்னிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டமை போராடிய மக்களின் வெற்றியே!

ஆனால் இந்த வெற்றியை மகிழ்வாக கொண்டாட முடிகிறதா?

இத்தோடு நடந்த இனப்படுகொலையை மறந்து மகிழலாமா?

நடந்த படுகொலைகள் விசாரிக்கப்பட வேண்டும்! இறந்த தமிழ் உறவுகளுக்கு நீதி வேண்டும்!

ஆலையை மூட அரசாணை பிறப்பித்தால் போதுமா?

இனி உயர் நீதி மன்றத்தில் வழக்கு போட்டு நிறுவனம் மீண்டும் ஆலையை திறக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

வாழ போராடிய அப்பாவி மக்கள் அநியாயமாக படுகொலையானார்களே அவர்கள் உயிரை மீட்டு தரமுடியுமா? படுகொலையான மக்களுக்கு நீதி வேண்டும்.

அதே போல் அறவழியில் போராடிய பல தமிழ் கட்சி தோழமைகளையும் சிறைக் கொட்டடியில் அநீதியான முறையில் கைது செய்து அடைத்தார்களே?

இதற்கு நீதி வேண்டும்! அத்தனை தமிழ் உணர்வாளர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்!

இனியாவது மக்களை நிம்மதியாக வாழ விட வேண்டும்!

அல்லும் பகலுமாக 100 நாட்களுக்கும் மேலாக போராடிய தூத்துக்குடி மக்களுக்கும் அவர்கள் மீதான படுகொலை தாக்குதலை கண்டித்து போராடிய தமிழக, தமிழீழ, உலக தமிழ் உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

போராட்டம் ஓய விரும்பினாலும் அநீதிகள் உள்ளவரையில் போராட்டங்கள் ஓய்வதில்லை.

தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் போராடி தமது உரிமைகளை வென்றெடுக்க இதே போல் ஒன்றுபட்ட தமிழினமாக பிரிவினைகள் களைந்து போராட வேண்டும்.

இன்று இந்திய வல்லரசை தமிழ் மக்கள் ஒன்றாக நின்று எதிர்த்ததால் தான் அரசு தனது வன்முறையை கைவிட்டு மக்கள் கோரிக்கையை தீர்த்து வைக்க முன்வந்திருக்கின்றது.

இது மகிழ வேண்டிய நேரமேயன்றி ஓய்ந்து போக வேண்டிய நேரம் அல்ல.

தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்! தமிழருக்கான நீதி வேண்டும் போராட்டங்கள் தொடரட்டும்!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.