குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .

படித்ததில் கலங்கியது.துணைவியை இழந்பின் துயருடன் இறுத்திக்காலத்தல் கணவர்மார்கள்!13.05.2049-27.05.18

கணவன் இறந்த பின் பெண்கள்

எப்படியோ தான் பெற்ற மக்களை

அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.

ஆனால் மனைவி போன பின் கணவன்

படும் துயர் இருக்கிறதே அப்பப்பா!!!!!


தானாகவே குளம்பி ( காப்பி) கூட போடத்

தெரியாத கணவன், தண்ணீரைக்

கூடத் தானே மொண்டு குடிக்காத

கணவன் மனைவியின் மறைவுக்குப்

பின் ஏனென்று கேட்க ஆளில்லால்

போகிறான்.


ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத்

தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ

சமைலறையில் ஆளும் போது அங்கே

இந்த ஆணால் தன்னிச்சையாக

நுழைய முடியாது.


வேண்டுவனவற்றை தானே சமைத்துக்

கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ

கூசுகிறார்கள்.


என்ன கொடுத்தார்களோ எப்போது

கொடுத்தார்களோ கொடுத்ததை

கொடுத்த போது சாப்பிட்டுக்

கொள்ளணும்.


ரெண்டாவது குளம்பி ( காப்பி)  கூட கேட்க

முடியாது.


தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட

சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்

பேசக் கூட ஆளிருக்காது.


இதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு

வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.

துளியும் அதிகப்படியில்லை.


என் கணவர் காலை எட்டரை மணிப் போல

சும்மாசமையலறையில் (கிச்சனில்) வந்து எதானும் பேச

ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.

குளம்பி ( காப்பி)  குடித்தால் காலை உணவின் அளவு

அவருக்குக் குறைவதால் கொடுக்க

யோசிப்பார்கள்.


இப்போதெல்லாம் காலையில் என்

கணவர் கேட்காமலேயே ரெண்டாவது

குளம்பி ( காப்பி)  கொடுத்துடுவேன்.


எனக்குப் பின் அவருக்கு யார்

கொடுப்பாங்க?


இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப

பாரமாகிடுது.


மனைவி இல்லாத கணவன் உயிரற்ற

உடல் போலே!!


சகோதரிகளே!!

யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!

உங்கள் கணவர் உங்களுக்குப் பின்

வாயில்லாப் பூச்சிதான்!


முடிந்தவரை கணவனிடம்

அனுசரணையாக இருங்கள்!!


ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.