குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூநகரி இரணைதீவு. சாதகமான தீர்வு விரைவில் கிடைக்கும் – சி.வி

03.05.2049-16.05.2018-பூநகரி இரணைதீவு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே இறுதி முடிவை எடுக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேசுவரன் தெரிவித்தார்.பூநகரி இரணைதீவுக்கு இன்று விடயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்...

“போர் முடிவடைந்த பின்னர் அவ்விடத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். ஆனால் வடக்கு மாகாணத்தில் பெருமளவான காணிகளை படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பூநகரிஇரணைதீவையும் பாதுகாப்பு காரணங்களுக்காக விடுவிக்க முடியாது என படையினர் கூறியுள்ளனர்.

ஆனால் இங்கு 3 ஏக்கர் அளவிலான காணியில் மாத்திரமே இராணுவத்தினர் உள்ளனர். மிகுதி காணிகள் வெறுமையாகவே உள்ளன. எனவே அக்காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கலாம்.

எனினும், இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சரிடமே உள்ளது. அவர்கள் இவ்விடயம் தொடர்பாக அரசியல் ரீதியான முடிவுகளையே எடுப்பார்கள்.

எம்மிடமுள்ள அதிகாரங்களை கொண்டு இவற்றை விடுவிக்க முடியாது. எனவே நாம் காணி தொடர்பான ஆவணங்களை தயார் செய்து பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.

இது குறித்து அமைச்சர் சுவாமிநாதனிடம் பேசியுள்ளோம். இந்நிலையில், இப்பிரச்சினைக்கு விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் அதிகாரத்தில் செய்யக்கூடியதை முதலமைச்சராலும் செய்யமுடியாதுள்ளது. அதிகாரப்பரவலாக்கல் என்று பேசிக்கொண்டு இருந்தவற்றையும் பறித்துவிட்ட நிலைதான். இரணதீவு மீள்குடியேற்றம் நல்ல எடுத்துக்காட்டு  எப்போதும்  பூநகரி முகமூடியை  உடைத்தே  வந்திருக்கிறது 1996 இல் பாதை திறப்பு 500 மீற்றர் பின்தள்ள முடியாது  இரண்டாம்கட்டப்போர் தொடங்கியது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.