குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மலேசிய இந்தியக்காங்கிரசு 9 இடங்களில் நின்று 8 இடங்களில் தோல்வி!

29.04.2049-12.05.2018-மகாத்தீர் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குத் தலைமை தாங்கியதால்தான் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. அவருக்கு ப்பின்என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.விழப்படைந்துவிட்ட மலேசியத்தமிழர் கள்.

MIC- மலேசிய இந்தியர் காங்கிரசு. 1946ம் ஆண்டு மலேசியாவில் வாழ்கின்ற இந்தியரின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி. பின் கூட்டணி அமைத்து தேசியக் கூட்டணியில் 3வது பெரிய கட்சியாக நேற்று வரை இருந்தது. இந்தியர் என பொதுவாகப் பெயரிடப்பட்டாலும் மலேசிய வாழ் இந்தியர்களில் 90% தமிழர்களே. மஇக வை தோட்டத் தொழிலாளர் நலனுக்காக வழி நடத்திய காலம் படிப்படியாக மாறி துன் சாமிவேலு காலத்திலேயே, அதாவது கடந்த 30 ஆண்டுகளாக, சிறிது சிறிதாக சாதிக் கொள்கையை வளர்க்கும் கட்சியாக மாறி அண்மைய காலத்தில் உச்சிக்கே சென்று விட்டது. தமிழரின் ஒற்றுமையை சிதைப்பதே சாதி தானே..!

மலேசியத் தமிழர்களின் சாதி அடிப்படையை காணும் போது மூன்று பெரும் தமிழ்ச்சாதி அதிக மக்கள் தொகை எண்ணிக்கையில் எனலாம். பறையர்கள், வன்னியர்கள் முக்குலத்தோர் ஆகிய இந்த மூன்று சாதிகளோடு ஏனைய கவுண்டர், முதலியார், செட்டியார், பிராமணர் ஆகியோரும் மலேசிய தமிழ் சமூக அமைப்பில் இடம்பெறுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக முக்குலத்தோர் சாதி தலைமையில் முழுமையாக மஇக இருந்தது. ஏனைய சாதி சேர்ந்த தலைமைப் பண்புள்ளவர்களை நெருங்க விடாத நிலை ..இறுக்கமாக இருந்தது.

மஇக வின் சுயநலப்போக்கு, சாதி வேறுபாடு, அராயகச் செய்கைகள், ஊழல், பொருளாதார மோசடி... இவற்றையெல்லாம் எதிர்த்து தமிழ்த் தலைவர்கள் சிலர் இன்று எதிரணியில் தோன்றியுள்ளார்கள். இவர்கள் சாதிகளற்ற, எல்லா மலேசிய இந்தியருக்குமான பிரதிநிதிகளாக வளர்ந்திருக்கின்றனர். இவர்களே எதிர்காலம்.


சாதிப்பிரிவினையற்ற, மலேசியத் தமிழ் மக்கள் நலனை மட்டுமே முன்னெடுக்கும் இந்தப் புதிய தலைவர்களை வாழ்த்துகிறேன்.


இன்றைய மலேசியத் தமிழ்ச்சமூகத்தில் பெரும்பாண்மையினர் சாதியற்ற சமூகமாகவே வாழ்கின்றனர். அதையே விரும்புகின்றனர். ஏனைய மலாய், சீன பெரும்பாண்மை மக்களுடன் வாழும் போது சமூகத்திற்குள் ஒற்றுமை என்பது ஒன்று தான் நாம் நமது நலனை மலேசியச் சூழலில் பாதுகாத்துக்கொள்ள உதவும் என்பதை இந்தத் தேர்தல் உறுதி செய்துள்ளது.


மஇகா போட்டியிட்ட 9 இடங்களில் 8ல் தோற்றுள்ளது. தலைவரும் தோற்றுள்ளார். இது மஇகாவிற்கு அதன் வரலாற்றில் பெருத்த அவமானம் ஆனால் தமிழர் ஒற்றுமைக்கும் நலனுக்கும் இது மிக அவசியம். மஇக தலைமை இந்தப் பாடத்தைக் கற்று தன்னை சீர்செய்து கொள்ளும் என நம்புவோம்!!

-சுபா

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.