குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தன்னம்தனி வளர்க்கும் தற்குறி வழிநின்று வாழின் சுற்றம் சுமக்காது.

தகரத்தில் தட்டி ஒலிதான் எழுப்பலாம்

தங்கத்தை தட்டி முடி(கிரீடம்) செய்யலாம்.


சட்டம் தந்த பட்டத்தையும் தெருச்சண்டை

போட்டு தகரச்சத்தமாக்கலாம்.


உக்கிப்போக முடியாத நெகிழியாக

பயனற்றதை விக்கிக் கக்கி கவியெனலாம்.


பக்குவம் என்பது பருவமங்கைக்கு மட்டுமல்ல

கொண்டை வந்ததென எண்ணிக்கூவும் சேவலுக்கும் தான்.


கண்ணாடி முன்னால் நின்றபின் வெளியில் சென்றால்

நான் மனிதனாக நடப்பதை மறந்து விடக்கூடாது.


மனிதன் என்பதன் பொருள் தோற்றத்திலா

மனிதன் தன்னுள் கொண்டிருக்கும் மனதின் தகுதியிலா!


குமுகாயம் சாளரத்திரை விலக்கி விழியுயர்த்தி நோக்க!

முகத்திரையும் அகத்திரையும் சமன்செய்யும் சீராகவேணும்.


தீ தீமைகளை எரிக்கலாம் பயனாகும் மனத்தீ

நன்மைகளை எரிக்கலாமா அது தீய தீயாகும்.


அறிவுடையராயினும் பண்பிலராயின் பயனுடையரன்று

அறிவிலாரும் பண்புடையாராயின் பயனுடையர்.


சுற்றம் சூழல் பயன்பெறும் செயலின்றி தன்னம்தனி

வளர்க்கும் தற்குறி வழிநின்று வாழின் சுற்றம் சுமக்காது.


பூநகரி-பொன்னம்பலம் முருகவேள்.ஆசிரியர்-சுவிற்சர்லாந்து 29.042049-12.05.2018

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.