குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மட்டக்களப்பில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த ஆதாரம் வெளியானது.கவனிக்கப்படாது கிடக்கும் பண்டாரவன்னியன் வளாகம்

29.04.2049-12.05.2018-இலங்கையில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த மலையொன்று இன்றும் உள்ளது. குசலான் மலை என்று அதற்குப் பெயர்.இம்மலை தாந்தாமலை பிள்ளையார் கோவிலையும் (பிள்ளையார் கோவில் 10 ம் நுாற்றா ண்டின் பின்னே இணைந்திருக்கும் ஆதிதத்தமிழரிடம் விநாயகர் வழிபாடு இருந்ததில்லை. உகந்தமலை வள்ளி அம்மன் கோயிலையும் நினைவுபடுத்துகின்றது.

உகந்தமலையைப் போல குசலான்மலை சுமார் 250அடி உயரமுடைய தட்டையான அமைப்புடைய குன்றாகும். 200அடி நீளமும் 100அடி அகலமும் உடைய இக்குன்றில் சுனைகள் பத்துக்கும் மேற்பட்ட குகைகள் காணப்படுகின்றன. படிக்கற்கள் காணப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்!

அங்கு பத்துக்கும் மேற்பட்ட குகைகள் உள்ளன. அவற்றில் ஆதி தமிழர் வாழ்ந்த எச்சங்கள் காணப்படுகின்றன. அங்கு 07 ஆதிதமிழரின் தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் உள்ளதாக பிரபல தொல்லியலாளர் என்.கே.எசு.திருச்செல்வம் குறிப்பிடுகின்றார்.

புராதன கட்டடமொன்று காணப்பட்டதற்கான பழைய செங்கற்கள் அங்கு காணப்படுகின்றன. இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த புதையல்கள் திரவியங்கள் புதையல்மீட்புக்காரர்களால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திசன் பெருமகன் தேவகுத்தன் அபயன் நாகன் சுதசனன் குத்தன் சுதினன் சமனன் ககபதி போன்ற ஆதித் தமிழ்ப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இங்கு ஆதி தமிழர்கள் வணங்கிய குலதெய்வம் வாழ்ந்த குகைகளையும் ஒரு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சக பௌத்தர்களிடம் வழங்கியதாக பிராமி எழுத்துக்களில் கல்வெட்டுக்களில் பொறித்துள்ளனர்.

குசலான் எங்கே அமைந்துள்ளது?

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் பிராதனவீதியில் 14கிலோமீற்றர் தொலைவில் செங்கலடி எனுமிடமுள்ளது. அங்குள்ள பிரதான சந்தி கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்தது.

அந்தச்சந்தியிலிருந்து மேற்காக கறுத்தபாலமூடாக மகாஓயா செல்லும் வீதியில் 13 கி.மீற்றர் தொலைவில் கரடியனாறு எனும் பழந்தமிழ்க்கிராமம் உள்ளது. இக்கிராமத்திலின் வடமேற்குத்திசையில் 3கி.மீற்றர் தூரத்தில் குசலான்மலை அமைந்துள்ளது.

இம்மலை உச்சியில் பண்டைய காலத்து வேல் தாங்கிய சிறுகோயில் இருந்தது. இந்தக்குசலான் மலைக்கும் அருகிலுள்ள 7 சிறுகுன்றுகளுக்கும் மத்தியில்தான் கரடியனாறுக்குளம் இயற்கையாக அமைந்துள்ளது.

முந்தெனி ஆற்றால் இக் கரடியனாறுக்குளம் இயற்கையாக உருவாகியதென்பது தெரிந்த ஒன்றே.

1948இல் இக்குளத்தின் அருகில் அணைக்கட்டுக்கள் கட்டி நீர்த்தேக்கமாகியது.

குசலான் மலையில் வேல் நாக -வழிபாடு!

2000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த தமிழர்களின் வேல் வழிபாடும் நாக வழிபாடும் இருந்ததற்கான தடயங்கள் ஆதாரங்கள் நிறையவே உள்ளன. அங்கு நாகநாதருக்கு பூசைசெய்த இடங்களை இன்றும் காணலாம். மலையடியில் கொத்துப்பந்தல் அமைத்து பொங்கலிட்டு இவ்வழிபாட்டைச் செய்துள்ளனர். இன்றும் பாம்புப்புற்றைக்காணலாம்.

அன்று கரடியனாற்றில் விவசாயம்செய்துவந்த தமிழ்மக்கள் வேல் வழிபாட்டையும் நாகவழிபாட்டையும் தொடர்ந்து செய்துவந்தனர்.

அங்கு மலையில் தற்போதுள்ள ஆலயம் 4 சிறு மண்டபங்களைக்கொண்டு காணப்படுகின்றது. இருபக்கங்களிலும் 4தூண்கள் வீதம் 8தூண்கள் காணப்படுகின்றன. கருவறையில் முருகப்பெருமான் வைக்கப்பட்டுள்ளார்.

கூடவே விநாயகரும் கற்சிலையாக வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் முருகனின் 3 வேலாயுதங்களும் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொராண்டும் ஆடி மாதத்தில் முருகப்பெருமானுக்கு திருவிழா எடுக்கப்படுகின்றது. ஆதித்தமிழன் வாழ்ந்த கரடியனாற்றில் இன்றும் தமிழன் வாழ்ந்து வருவது சிறப்பம்சமே.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராயா

கவனிப்பார் அற்று கிடக்கும் பண்டாரவன்னியன் வளாகம்!


மாவீரர் பண்டார வன்னியன் வளாகம் தற்போது கவனிப்பாற் அற்று காணப்படுகின்றது வன்னிப்பெருநிலப்பரப்பில் ஆங்காங்கே பண்டாரவன்னியனுக்கு சிலை வைப்பவர்கள் வரலாற்றின் நினைவு சின்னத்தை பராமரித்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


வன்னிப்பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன் நினைவாக பிரித்தானிய ஆட்சிக்காரர்களால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடு பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது.


இது ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் இன்றும் பராமரிக்கப்பட்டு வரவேண்டிய இடம் இந்த வளாகத்தில் ஒரு பொதுநோக்கு மண்டபம் கட்டப்படடுள்ளது கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் வீசிய காற்றினால் அருகில் உள்ள பாரிய மரம் ஒன்று முறிந்து மண்டபத்தின் மேல் வீழ்ந்துள்ள நிலையில் காணப்படுகின்றது.


பண்டாரவன்னியன் அறங்காவலர் என்ற அமைப்பும் இதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது குறித்த வளாகத்தில் சிறுவர்பூங்க ஒன்றும் காணப்படுகின்றது இன்னிலையில் முறிந்து வீழ்ந்த மரத்தினை அகற்றி கட்டத்தினை சீர்செய்ய முடியாத நிலை தொடர்சியாக காணப்படுகின்றமை வீதியால் சென்றுவரும் மக்கள் அவதானித்து தெரியப்படுத்தியுள்ளார்கள்.


இதனை சீர்செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல் இதனை தொடர்ச்சியாக பராமரித்து பேணி பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.கவனிப்பார் அற்று கிடக்கும் பண்டாரவன்னியன் வளாகம்!


மாவீரர் பண்டார வன்னியன் வளாகம் தற்போது கவனிப்பாற் அற்று காணப்படுகின்றது வன்னிப்பெருநிலப்பரப்பில் ஆங்காங்கே பண்டாரவன்னியனுக்கு சிவைப்பவர்கள் வரலாற்றின் நினைவு சின்னத்தை பராமரித்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


வன்னிப்பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன் நினைவாக பிரித்தானிய ஆட்சிக்காரர்களால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடு பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது.


இது ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் இன்றும் பராமரிக்கப்பட்டு வரவேண்டிய இடம் இந்த வளாகத்தில் ஒரு பொதுநோக்கு மண்டபம் கட்டப்படடுள்ளது கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் வீசிய காற்றினால் அருகில் உள்ள பாரிய மரம் ஒன்று முறிந்து மண்டபத்தின் மேல் வீழ்ந்துள்ள நிலையில் காணப்படுகின்றது.


பண்டாரவன்னியன் அறங்காவலர் என்ற அமைப்பும் இதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது குறித்த வளாகத்தில் சிறுவர்பூங்க ஒன்றும் காணப்படுகின்றது இன்னிலையில் முறிந்து வீழ்ந்த மரத்தினை அகற்றி கட்டத்தினை சீர்செய்ய முடியாத நிலை தொடர்சியாக காணப்படுகின்றமை வீதியால் சென்றுவரும் மக்கள் அவதானித்து தெரியப்படுத்தியுள்ளார்கள்.


இதனை சீர்செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல் இதனை தொடர்ச்சியாக பராமரித்து பேணி பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.