குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, வைகாசி(விடை) 23 ம் திகதி புதன் கிழமை .

முடக்கு வாதத்தை குணப்படுத்த இவ்வளவும் போதும்…!

29.04.2049- 12.05.2018-முடக்கு வாதம் என்பது மூட்டி லுள்ள இணைப்புதிசுக்கள் மற்றும் சவ்வுகளின் மீது யூரிக் அமிலம் உப்பாக படிந்து அதனால் உண்டாகும் வீக்கத்தினால் ஏற்படுவது. முடக்கு வாதம் மிகுந்த வலியை உண்டாக்கும். இணைப்புகளில் வீக்கம், மற்றும் பாதிப்புகளை தரும்.

 

இந்த வலிகளை போக்கவும், யூரிக் அமில உப்புககளை கரைக்கவும் நாம் உண்ணும் உணவுகளை பயன்படுத்தலாம். இவை இயற்கையாகவே வலிகளையும், பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஆற்றலை பெற்றவை.

அவ்வாறு எத்தகைய உணவுகள் முடக்குவாதத்திற்கு பயன்படுத்தலாம் என படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொத்துமல்லி தழை :

கொத்துமல்லி தழையை நீரில் போட்டு அப்படியே குடிக்கவும் அல்லது கொத்துமல்லி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். இது யூரிக் அமிலத்தை குறைக்கச் செய்கிறது. இரைப்பை பாதிப்புகளையும் சரி செய்து , மூட்டு வலியை போக்கும் சிறந்த உணவாகும்.

வெந்தயம் :

முந்தைய இரவில் வெந்தயம் 1 தேக்கரண்டி  அளவு எடுத்து சிறிது நீரில் ஊற வையுங்கள். மறு நாள் காலையில் அந்த நீரை குடித்து வெந்தயத்தை மென்று சாப்பிடவும். வெந்தயம் உள் மற்றும் வெளி வீக்கத்தை குறைக்கும். பாதிக்கப்பட்ட இடங்கலில் வலி குறையும்.

பூண்டு :

பூண்டு முடக்கு வாதத்திற்கான மிகச் சிறந்த மருத்துவ உணவு. 2 பூண்டு பற்களை நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து நாளும் சாப்பிட்டு வாருங்கள். இது முடக்கு வாதத்தின் பாதிப்பை வேரிலிருந்து குணப்படுத்தும்

ஓமம் மற்றும் இஞ்சி :

ஓமம் அரை தேக்ரண்டி மற்றும் இஞ்சி ஒரு துண்டை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒரு குவளை (கப்) நீரில் போட்டு நன்ராக கொதிக்க வைக்கவும். இதனை வடிக்கட்டி காலை அரை குவளை (கப்) மற்றும் மாலை அரை குவளை (கப்) என்று குடிக்கவும். இவை வலி, வீக்கத்தை மட்டுமல்லாது, யூரிக் அமிலத்தின் சுரப்பையும் கட்டுப்படுத்தும்.

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெயை சாப்பிட எடுத்துக் கொள்ள வேண்டாம். அதனை லேசாக சூடுபடுத்தி உருவி தடவி அழுத்தம் செய்யுங்கள். இவை வலியையும் எரிச்சலையும் கட்டுப்படுத்தும்.

செர்ரி :

செர்ரி பழங்கள் முடக்கு வாதத்தை குனப்படுவதோடு மட்டுமல்லாமல் முகடக்கு வாதம் வராமலும் தடுக்கும் என சமீப ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. தினமும் அரை கப் அல்லது 10-12 செர்ரி பழங்கள் சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரைடிசு, முடக்கு வாதம் கீல் வாதம் ஆகிய்வை வராமல் தடுக்கலாம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.