குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

“ மாடு சாணம் போட்டது போல் பேசிவிட்டு ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் “

27.04.2049-10.05.2018-தேசியத்தலைவரின் இருப்பு தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அந்த கருத்துக்களை பொதுவெளியில் பகிருவதற்கு பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. ஏனெனில் அந்த கருத்துக்கள் பல கோடி மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய பொருள் என்பதனால் பெரும்பாலும் அதைப்பற்றி பலரும் கதைப்பதில்லை. தந்தை செல்வா, தேசியத்தலைவர் பிரபாகரன் என்ற இரு தலைவர்களின் அரசியல் நீட்சியை செய்வதற்கு களத்தில் அப்படிப்பட்ட ஒரு தலைவர் இல்லை என்பதே எனது கருத்தாகும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தலைவர் உருவாகும் வரைக்கும் ஒரு இடைக்கால தலைவரை மக்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது மக்களையும் மண்ணையும் கொள்கையின்பால் நகர்த்திச் செல்வதற்கு ஒரு இடைக்கால தலைவரை விரைவில் மக்கள் இனங்காண வேண்டியது இன்றியமையாததாகும்.

அந்த முருகனுக்கே இவன் நிகரானவன் என்பது, “ இருந்தால் தலைவன், இல்லாவிட்டால் இறைவன் “ என்ற பலரின் சிந்தனையுடன் பொருந்திப்போனாலும், அதை விட மேலதிகமாக, 35 ஆண்டுகளாக தீர்க்க தரிசனமுள்ள தலைவர் என நம்பிய, இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்ற பலகோடி தமிழர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில், “ தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்குரிய ஒரு கட்டமைப்பை உருவாக்காமல் அவர் இந்த உலகத்தில் இருந்து, மக்களுக்கான தீர்ப்பை வழங்கும் அடுத்த உலகத்துக்கு செல்ல முடியாது என்பதே என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும் “

கிட்டு பூங்காவில் நடந்த மே நாள் நிகழ்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் ஒருவர் தலைவரின் இருப்பு தொடர்பாகவும், அரசியல் நீட்சி எப்படி அமையவேண்டும் என்றும் பேசிய பேச்சு அவரின் முதிர்ச்சியற்ற தன்மையினையும், எந்த தளத்தில் எப்படி பேசுவது என்ற நுணுக்கம் தெரியாமல் பேசியிருக்கிறார் என்பதுடன், தலைவரின் இருப்பு தொடர்பாக பேசுவதற்குரிய ஆட்களும் இவர்கள் இல்லை என்பதே எனது கருத்தாகும். மக்களுக்கான சரியான அரசியலை முன்னெடுக்க வேண்டுமே தவிர, தற்காலிகமாக மெளனிக்கப்பட்டுள்ள ஒரு உன்னத விடுதலைப்போராட்டத்தின் நன்மதிப்பினை தங்களின் அரசியலுக்கு பயன்படுத்தும் சாதாரண கூட்டமைப்பின் அடிவருடி அரசியலை போன்று நீங்களும் முன்னெடுக்கக் கூடாது என்பதே பல மக்களின் எதிர்பார்ப்பாகும். இன்னும் ஒரு படி மேலே போய் சிந்தித்தால் கொள்கைப்பற்றுள்ள கல்விமான்களையும், நுணுக்கம் தெரிந்தவர்களையும், புலமைவாதிகளையும் உள்ளீர்க்காமல் மக்களுக்கான சரியான அரசியலை கொண்டு செல்வது கடினம் என்ற உண்மையையும், இந்த சம்பவம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் அரசியலை மிக நுணுக்கமாக அவதானித்தவர்களுக்கு தெரியும், புலிகளின் அரசியலில் எல்லோருக்கும் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிலரும் எந்த வட்டத்துக்குள் இருந்து பேசவேண்டும் என்ற வரையறை இருந்திருக்கிறது. உயிரை துச்சமென நினைத்து போராடி போராட்டத்துக்கு வலிமை சேர்த்துக்கொண்டிருக்கும் பொழுது, ஓரிருவரின் வாயில் இருந்து வரும் தவறான வார்த்தைகள், பெற்றுக்கொண்டிருக்கும் வலிமையை சீர்குலைக்கக்கூடியது என்ற உண்மையை விடுதலைப்புலிகளின் தலைமை அறியாமல் இருக்கவில்லை. எப்படி தேசியத்தலைவர் என்ற நிலைக்கு அவர் சென்றார் என்பதற்கு அவரிடம் இருந்த எண்ணுக்கணக்கற்ற நல்ல சிந்தனைகளும் ஆளுமைகளுமே காரணமாகும். அவரால்பேசப்பட்ட பேச்சுக்கள் அனைத்தும் முறையாக செப்பனிடப்பட்டே பேசப்பட்டிருந்தது. அதனால் தான்  ஆண்டில் ஒரு தடவை பேசும் பேச்சை கேட்பதற்கு கோடிக்கணக்கானவர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.

இங்கே கட்சியை நடத்துபவர்கள் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை, மாடு போடுவது போலவோ அல்லது ஆடு போடுவது போலவோ பேசலாம். ஆனால் தமிழ் தேசியத்திற்கான அரசியலை முன்னெடுப்பவர்கள் எந்த விடயத்தை, எந்த இடத்தல், எப்படி பேச வேண்டும் என கற்றுக்கொண்டவர்களையே பேச அனுமதிக்க வேண்டும். அதற்காக பேசமுடியாதவர்கள் அரசியல் செய்யக்கூடாது என்று சொல்ல வரவில்லை, அரசியல் செய்யுங்கள் ஆனால் நீங்கள் பேச முடியாது, பேசக்கூடாது. இந்த விடயத்தை அரசியல் தலைமைகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மிகுந்த கரிசனையுடன் இதனை கருத்தில் எடுத்து செயற்படுத்த முன்வர வேண்டும். மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் போது மக்களுக்கு விளங்கும் மொழியிலேயே அரசியலை முன்னெடுக்க வேண்டும். மக்களுக்கு விளங்காத மொழியிலோ அல்லது மக்கள் விரும்பாத மொழியிலோ கருத்துக்களை திணிக்க முற்படக்கூடாது. அதற்காக மக்கள் பிழையான விடயத்தை விரும்புகிறார்கள் எனின் அதனையே கொள்கையாக கொண்டு செல்ல வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை.

இதற்கிடையில் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியனுக்கும் சிங்களவனுக்கும் அடிவருடிகளாக இருந்த, இன்றும் இருக்கின்ற, தமிழ் தலைவர்கள் என்று தங்களையே சொல்லிக்கொள்கின்ற சிலரின் அடிவருடிகள், யயோ, யயோ, யயோ, கயேந்திரகுமாரின் கட்சியில் உள்ள ஒருவர் இப்படி சொல்லிவிட்டார் என்று கூக்குரலிட தொடங்கியிருக்கிறார்கள். எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் இதுவே அடிப்போம், இடிப்போம் என்று தமிழே எழுதத்தெரியாத சில நாய்கள் தமிழ் தேசியம் பேசத்தொடங் கியுள்ளன. அவர்களுக்காக நான் சொல்லக்கூடியது, “இறைவா இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் “. கடந்த 30 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடந்த வேளையில் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் ஒழித்திருந்து விட்டு, இப்பொழுது புலிகள் இல்லை, நாங்கள் எங்கள் இந்தியத்தினதும் சிங்களத்தினதும் அடிவருடிகளாக இருந்த, இருக்கின்ற எங்களின் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதற்கு பாடுபடுவோம் என கிளம்பி இருக்கும் கூட்டமே உங்களுக்கு “யயோ கேடு” மணலில் கூட ஆனா எழுதாமல் பள்ளிக்கூடம் போகும் கூட்டமல்ல இப்போதிருக்கும் பரம்பரை, கண்ணியில், மென்பொருளில் ஆனா எழுதி பழகுகிறார்கள். நடப்பில் பிழையானது உருவாகினாலும், சரியாக உருவாகுவது முனைப்போடுதான் உருவாகிக்கொண்டிருக்கிறது.

நிற்க,ஒற்றுமை, பழையதை மறப்போம், என்ற கதைகளை கூறி, ஏமாற்றுவோம் என நினைக்கும் கூட்டமே, எங்களின் தலை முறை ஏமாறலாம், ஆனால் உங்களின் அடுத்த தலை முறையிடம், அடுத்த சரியான தலை முறை ஏமாறாது, ஏனெனில் வராலாற்றை சரியாக சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

.....பிரா. பத்மராய்....

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.