குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஐப்பசி(துலை) 18 ம் திகதி வியாழக் கிழமை .

வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியது நாசா!

24.04.2018-07.05.2049-நாசா சற்றுமுன் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக ஏவியது. இன்சைட் என்று அழைக்கப்படும் அந்த விண்வெளிக்கலம் பிரித்தானிய நேரப்படி 12.05 மணிக்கு கலிபோர் னியாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

அதை அட்லசு V-401 என்னும் ராக்கெட் சுமந்து செல்கிறது. செவ்வாய்க்கிரகம் ஆராய்வதற்கு கடினமான ஒரு கிரகமாகும்.

மெல்லிய அதன் பரப்பினால் விண்கலங்களை இறக்குவது கடிமான ஒன்றாகவே உள்ளது.

மேலும் அங்குள்ள அதிக வெப்ப நிலையும் ஆய்வுகள் செய்வதற்கு கடினமான சூழலை ஏற்படுத்துகிறது.

இதுவரை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலங்களில் 40 சதவிகிதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த மிசன் வெற்றி பெற்றால் செவ்வாய்க்கிரகத்தின் உள்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் தோராயமாக ஒரே காலகட்டத்தில் உருவான பூமியும் செவ்வாயும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்பதைக் குறித்தும் அறியலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இம்முறை சீசுமிக் அலைகளை செவ்வாய்க்கிரகத்தின் அடுக்குகளுக்குள் (வெளி அடுக்கு, மத்திய அடுக்கு மற்றும் உள் அடுக்கு) அனுப்புவதன் மூலம் அவை எவ்வளவு ஆழத்தில் உள்ளன மற்றும் அவை எதனால் ஆக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம், அதாவது சாதாரண வார்த்தைகளில் சொல்லப்போனால் செவ்வாய்க்கிரகத்தை எக்ஸ் ரே எடுப்பது போல் என்று கூறலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.