குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஆவணி(மடங்கல்) 14 ம் திகதி செவ்வாய் கிழமை .

காதலர்நாளை பெற்றோர் நாளாக மாற்ற வேண்டும்.. அரசு உத்தரவு.தனித்துவம் கரையாது உலகமயமாக்கல் நிகழாது.

02.05.2018-18.04.2049-உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னாளில் காதலை போற்றும் வகையில் காதலர்கள் அன்பு பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள்.ஆனால் ராயசுதான் மாநிலத்தில் மட்டும் காதலர் நாள் கொண்டாட்டம் வேறு உருவம் பெறுகிறது. அதாவது அன்றைய நாளை பெற்றோர் நாளாக கொண்டாட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அது குறித்து கல்வித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அடுத்த ஆண்டு (2019) முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 14-ந் தேதி பெற்றோர் தினமாக கொண்டாட வேண்டும்.

அன்றைய நாள் தாய் மற்றும் தந்தைக்கு மாணவ, மாணவிகள் வழிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாசாரத்தில் இளம்பருவத்தினர்( ‘டீன் ஏஜ்’ பருவத்தினர்) தீவிரமாக உள்ளனர். இதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டது. அன்றைய நாள் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுவார்கள். அவர்களை மகளோ அல்லது மகனோ கவுரவிப்பார்கள்.

அன்றைய நாள் பெற்றோர்கள் பள்ளியில் நீண்ட நேரம் தங்கியிருக்கலாம். ஆசிரியர்களை சந்தித்து தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் நடத்தைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

ராயசுதான் மாநில கல்வி மந்திரி வாசுதியோ தேவ்னானி சமீபத்தில் இது குறித்து கலாசாரம் மற்றும் நல்லொழுக்கங்கள் மற்றும் பெற்றோரின் மீதான அன்பை குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளின் மனதில் பதிய வைக்க முடியும். இதன் மூலம் மாணவர்களும் பெற்றோரிடம் அன்பு செலுத்துவதையும், மரியாதை கொடுப்பதையும் கற்றுக் கொள்ள முடியும். சத்தீசுகர் மாநிலத்தில் இது ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.