குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஐப்பசி(துலை) 18 ம் திகதி வியாழக் கிழமை .

மரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி..!! சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலையுண்டு.

 

02.04.2049-02.05.2018-ஆசுதிரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி டேவிட் குடால். தற்போது இவருக்கு 104 வயது ஆகிறது. உடல் நலனை பாதிக்கும் வகையில் இவருக்கு நோய் எதுவும் ஏற்படவில்லை. நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறார்.

இருந்தும் அவர் உயிர்வாழ விரும்பவில்லை. மரணம் அடைய வேண்டும் என விரும்புகிறார். மரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்கிறார்.

இங்கு பசெல் என்ற இடத்தில் மரணத்தை வரவழைத்து தரும் நிறுவனம் உள்ளது. அங்கு தங்கி இருக்க அனுமதி பெற்றுள்ளார்.

‘நான் மகிழ்ச்சியாக இல்லை. இறக்க விரும்புகிறேன். மரணம் அடைவதை குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் இறப்பை தடுப்பது எனக்கு கவலை அளிக்கிறது. என்னைப் போன்ற வயதான ஒருவருக்கு மரணத்தை முடிவு செய்வதற்கான உரிமை உள்பட முழுக்குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ‘பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். முதுமை காரணமாக அவர் பணிபுரிய தகுதியற்றவர் என கூறி கடந்த 2016-ம் ஆண்டு 102-வது வயதில் அவரை பதவியில் இருந்து நீக்க நிர்வாகம் முற்பட்டது.

அதற்கு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து தனது முடிவில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகம் பின்வாங்கியது. இவர் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஆய்வுக் கட்டுரைகளை திருத்தி வருகிறார்.

தற்போது இவர் சுவிட்சர்லாந்து செல்வதற்கான செலவுகளுக்காக ‘எக்சிட் இன்டர்நே‌ஷனல்’ என்னும் அமைப்பு நிதி திரட்டி வருகிறது. அதன் மூலம் இதுவரை 17 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் சேர்ந்துள்ளது.

விஞ்ஞானி டேவிட் குடால் வருகிற 2019-ம் ஆண்டில் ஆசுதிரேலியாவில் விக்டோரியா நகரில் மரணம் அடைய விரும்புகிறார்.

ஆசுதிரேலியாவில் இறப்புக்கு உதவுதல் சட்டவிரோதமாகும். ஆனால் விக்டோரியா மாகாணத்தில் மட்டும் கடந்த ஆண்டில் தான் இதற்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.