குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்துக்களின் போரில் ஆதிக்கம் செலுத்தும் யாழ் இந்துக் கல்லூரி... இந்துக்களின் போர் என அழைக்கப்படும்

24.02.2049-10.03.018-இந்துக்களின் போர் என அழைக்கப்படும் கொழும்பு (பம்பலபிட்டி) இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான ஆணு்டுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி (BIG MATCH) இன்று (9) 9ஆவது தடவையாக யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

கடந்த ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற இரண்டு அணிகளுக்குமிடையிலான ஆண்டுச் சமர் (8ஆவது) சமநிலை முடிவை எட்டியிருந்ததை அடுத்து, இம்முறை வெற்றி எதிர்பார்ப்புக்களுடன் இரண்டு அணிகளும் களமிறங்கியிருந்தன.

இரண்டு நாட்கள் இடம்பெறும் (9,10) போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் தலைவர் சரண் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது அணிக்காக தெரிவு செய்து கொண்டார்.

இதன்படி, பிரவீன் குமார் மற்றும் கெனிஷன் ஆகியோருடன் கொழும்பு இந்துக் கல்லூரி தமது முதல் இன்னிங்சு துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்தது. ஆரம்ப வீரர்களில் ஒருவரான பிரவீன் குமாரின் விக்கெட்டினை 8 ஓட்டங்களுடன் ஆடுகளத்துக்குச் சொந்தக்காரர்களான யாழ் இந்துக் கல்லூரி அணியினர் சந்துருவின் ஓவரில் கைப்பற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கெனிசனையும் சந்துரு 17 ஓட்டங்களுடன் ஓய்வறை அனுப்பினார்.

தொடர்ந்து கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்ட இன்னிங்சை களத்தில் நின்ற தினேச் மற்றும், புதிய துடுப்பாட்ட வீரராக வந்திருந்த சேவாக் ஆகியோர் முன்னெடுத்துச் சென்றனர்

இரண்டு வீரர்களினதும் சிறந்த ஆட்டத்தினால் கொழும்பு பாடசாலைக்கு மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 65 ஓட்டங்கள் கிடைத்திருந்தது. தொடர்ந்து,சேவாக் 24 ஓட்டங்களுடன் கொழும்பு இந்துக் கல்லூரியின் மூன்றாம் விக்கெட்டாக மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

எனினும், தினேச் பெற்றுக் கொண்ட அரைச்சதம் மூலம் கொழும்பு இந்துக் கல்லூரி வலுப் பெற்றுக் கொண்டது. தினேசின் விக்கெட்டை அடுத்து சடுதியான முறையில் துடுப்பாட்ட வீரர்களை இழந்த கொழும்பு இந்துக் கல்லூரி அணியினர் 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தினேச் 65 பந்துகளில் 3 சிக்சுர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களினை குவித்திருந்தார். இதேவேளை, யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பந்துவீச்சில் சிவலுனன் வெறும் 49 ஓட்டங்களை விட்டுத் தந்து 5 விக்கெட்டுக்களையும், கோபிராம் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சு துடுப்பாட்டத்தினை யாழ் இந்துக் கல்லூரி ஆரம்பித்திருந்தது. யாழ் இந்துக் கல்லூரி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான யி. சந்தோச் 32 ஓட்டங்களுடன் அணிக்கு பெறுமதி சேர்ந்திருந்தார்.

சந்தோசிக்கு கைகொடுத்த ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உ. மிலுசன் அரைச்சதம் கடக்க கொழும்பு இந்துக் கல்லூரியின் முதல் இன்னிங்சு மொத்த ஓட்டங்களை இலகுவாக யாழ்ப்பாண வீரர்கள் தாண்டினர்.

மிலுசனின் விக்கெட் கொழும்பு இந்துக்கல்லூரி வீரர் கெனிசனின் பந்துவீச்சில் பறிபோயிருந்தது. ஆட்டமிழக்கும் போது மிலுசன் 120 பந்துகளுக்கு 10 பெளண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கலாக 71 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து வந்த வீரர்களில், வை. விருசனும் அரைச்சசதம் ஒன்றுடன் உதவ போட்டியின் முதல் நாள் முடிவில் யாழ். இந்துக் கல்லூரியானது முதல் இன்னிங்சுக்காக 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை குவித்து வலுப்பெற்றிருந்தது.

அரைச்சதம் ஒன்றினை தாண்டிய நிலையில் (50*) விருசனும்,ஆர். கயனநாத் 33 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

கொழும்பு இந்துக் கல்லுரியின் இன்றைய பந்துவீச்சு சார்பாக கெனிசன் இரண்டு விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்சு) – 165 (45.4) – தினேஷ் 66, சேவாக் 24, சிவலுனன் 49/5, கோபிராம் 17/3, சந்துரு 38/2

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 212/4 (42) – உ. மிலுசன் 71, வை. விருசன் 50*

இந்துக்களின் போர் என அழைக்கப்படும் கொழும்பு (பம்பலபிட்டி) இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான ஆணு்டுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி (BIG MATCH) இன்று (9) 9ஆவது தடவையாக யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

கடந்த ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற இரண்டு அணிகளுக்குமிடையிலான ஆண்டுச் சமர் (8ஆவது) சமநிலை முடிவை எட்டியிருந்ததை அடுத்து, இம்முறை வெற்றி எதிர்பார்ப்புக்களுடன் இரண்டு அணிகளும் களமிறங்கியிருந்தன.

இரண்டு நாட்கள் இடம்பெறும் (9,10) போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் தலைவர் சரண் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது அணிக்காக தெரிவு செய்து கொண்டார்.

இதன்படி, பிரவீன் குமார் மற்றும் கெனிஷன் ஆகியோருடன் கொழும்பு இந்துக் கல்லூரி தமது முதல் இன்னிங்சு துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்தது. ஆரம்ப வீரர்களில் ஒருவரான பிரவீன் குமாரின் விக்கெட்டினை 8 ஓட்டங்களுடன் ஆடுகளத்துக்குச் சொந்தக்காரர்களான யாழ் இந்துக் கல்லூரி அணியினர் சந்துருவின் ஓவரில் கைப்பற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கெனிசனையும் சந்துரு 17 ஓட்டங்களுடன் ஓய்வறை அனுப்பினார்.

தொடர்ந்து கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்ட இன்னிங்சை களத்தில் நின்ற தினேச் மற்றும், புதிய துடுப்பாட்ட வீரராக வந்திருந்த சேவாக் ஆகியோர் முன்னெடுத்துச் சென்றனர்.

இரண்டு வீரர்களினதும் சிறந்த ஆட்டத்தினால் கொழும்பு பாடசாலைக்கு மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 65 ஓட்டங்கள் கிடைத்திருந்தது. தொடர்ந்து,சேவாக் 24 ஓட்டங்களுடன் கொழும்பு இந்துக் கல்லூரியின் மூன்றாம் விக்கெட்டாக மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

எனினும், தினேச் பெற்றுக் கொண்ட அரைச்சதம் மூலம் கொழும்பு இந்துக் கல்லூரி வலுப் பெற்றுக் கொண்டது. தினேசின் விக்கெட்டை அடுத்து சடுதியான முறையில் துடுப்பாட்ட வீரர்களை இழந்த கொழும்பு இந்துக் கல்லூரி அணியினர் 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தினேச் 65 பந்துகளில் 3 சிக்சுர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களினை குவித்திருந்தார். இதேவேளை, யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பந்துவீச்சில் சிவலுனன் வெறும் 49 ஓட்டங்களை விட்டுத் தந்து 5 விக்கெட்டுக்களையும், கோபிராம் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சு துடுப்பாட்டத்தினை யாழ் இந்துக் கல்லூரி ஆரம்பித்திருந்தது. யாழ் இந்துக் கல்லூரி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான யி. சந்தோச் 32 ஓட்டங்களுடன் அணிக்கு பெறுமதி சேர்ந்திருந்தார்.

சந்தோசிக்கு கைகொடுத்த ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உ. மிலுசன் அரைச்சதம் கடக்க கொழும்பு இந்துக் கல்லூரியின் முதல் இன்னிங்சு மொத்த ஓட்டங்களை இலகுவாக யாழ்ப்பாண வீரர்கள் தாண்டினர்.

மிலுசனின் விக்கெட் கொழும்பு இந்துக்கல்லூரி வீரர் கெனிசனின் பந்துவீச்சில் பறிபோயிருந்தது. ஆட்டமிழக்கும் போது மிலுசன் 120 பந்துகளுக்கு 10 பெளண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கலாக 71 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து வந்த வீரர்களில், வை. விருசனும் அரைச்சசதம் ஒன்றுடன் உதவ போட்டியின் முதல் நாள் முடிவில் யாழ். இந்துக் கல்லூரியானது முதல் இன்னிங்சுக்காக 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை குவித்து வலுப்பெற்றிருந்தது.

அரைச்சதம் ஒன்றினை தாண்டிய நிலையில் (50*) விருசனும்,ஆர். கயனநாத் 33 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

கொழும்பு இந்துக் கல்லுரியின் இன்றைய பந்துவீச்சு சார்பாக கெனிசன் இரண்டு விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்சு) – 165 (45.4) – தினேஷ் 66, சேவாக் 24, சிவலுனன் 49/5, கோபிராம் 17/3, சந்துரு 38/2

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 212/4 (42) – உ. மிலுசன் 71, வை. விருசன் 50*

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.