குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 15 ம் திகதி சனிக் கிழமை .

சுவிற்சர்லாந்து தலைநகர் சிவன்கோவிலில் திருவள்ளுவர் குருபூசை!

10.02.2049-23.02.2018-சுவிற்சர்லாந்து தலைநகர் சிவன்கோவிலில்  திருவள்ளுவர் குருபூசை!எதிர்வரும் 03.03.2018 -19.02.2049 தி.ஆ அன்று சுவிற்சர்லாந்து பேர்ண் சிவன்கோவிலில் மாலை 6.30 மணிக்கு திருவள்ளுவர் குருபூசை பேர்ண் வள்ளுவன் பாடசாலை சார்பாக இடம்பெறவுள்ளது. இந்த வழிபாட்டு நிகழ்வில் எல்லாத்தமிழ் மக்களும் பங்கெடுத்து தமிழின் உயர்வினை உணர்வோம். திருக்குறளை எதிர்காலத்தலைமுறையினரிடம் கையளிப்போம். திருக்குறள் நெறியான தமிழ்நெறிவாழ்வியலை தமிழர்கள் ஏற்று வாழவழிநடத்த முயல்வோம்.

இதன் அடிப்படையில் எல்லா மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெரியோர்களும் பாடசாலை வேறுபாடுகளன்றி  இணைந்து திருவள்ளுவர் குருபூசையாகிய   நன்னாளில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் எங்கள் குடும்பங்களில் நிலைநிறுத்திக்கொள்வோம்.

இத்தகவலை உங்களுடன் தொடர்புடைய எல்லோருக்கும் அறியப்படுத்துமாறு பேரன்புடன் பேர்ண்.வள்ளுவன் பாடசாலை சார்பாகவும் பெருமதிப்பிற்குரிய சிவன்கோவில் அர்ச்சகர்களும் தொண்டர்களும் பேர்ண் சிவன் கோவில் சார்பாகவும்  வேண்டிக் கொள்கின்றோம்.

கடவுள் வாழ்த்து பகுதியின் பத்து திருக்குறளும் திருவள்ளுவர் முன்னிலையில் எல்லாப்பாடசாலைகளின் மாணவர்களும் ஓதுவதற்கான ஏற்பாடுகளை மதிப்பிற்குரிய சசி ஐயா அவர்கள் செய்துள்ளார்கள். அதுதொடர்பான மேலதிகமான தகவல்களைப்பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவருடன் தொடர்புகொண்டுபெற்றுக் கொள்ளலாம்.

திருவள்ளுவர் குருபூசை வழிபாட்டில் இணைந்து கொள்ளவுள்ள தமிழ் அன்பர்களுக்கு அன்பாக ஒரு பண்பாட்டு வேண்டுகோளையும் விடுக்கின்றோம். வழிபாடுகள் நிகழ்த்தும் நேரத்தில் ஆண்கள் பெண்கள்   திருவள்ளுவருக்கு மலரிட்டு வழிபாடு செய்யப்படும். திருவள்ளுவர் திருவுருவத்தினை  ஏந்தி வலம் வருதல் அல்லது சிறிய தேரில் இழுத்து  உலா வரச்செய்தல் என்பன இடம்பெற இருப்பதால் ஆண்களும் பெண்களும் இவற்றை செய்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம் இதனால்  ஆண்கள்(மாணவர்களாயினும்) வேட்டியினையும் பெண்கள்கள் சேலை அரைத்தாவணி முழுப்பாவாடை சட்டைகளை வழிபாட்டு நேரத்திலாவது அணிந்துகொண்டு பங்கெடுத்தல் வரவேற்கத்தக்கதாக  இருக்கும். ஆண்கள் குளிர்காலம் என்பால்  முழுக்கால் சட்டை அணிந்திருந்தாலும் அதன்மேலாயினும் வேட்டி அணிதல் வரவேற்கத்தக்கதாக  இருக்கும் என்ற எமது நிலைப்பாட்டினையும் தங்களுக்கு அறியத்தருகின்றோம். தமிழர்களாகிய நாங்கள் இத்தகைய தமிழர் பண்பாட்டு நிலைகளில் எம் பொதுவான தோற்றப்பாடுகளுக்கான வெளிப்படுத்தல்களால்  தமிழரின் பண்பாட்டு அடிப்படைகளுக்கு ஏற்ற பொதுக்கொள்கைக்கு ஏற்புடையதாக  இருக்கும் இவற்றை எமது இளைய தலைமுறையினரும் கைக்கொள்ள எங்கள் காலத்தில் வழிசமைப்போம்.இலங்கையில் கூட பிற இனத்தவர்களின் நிகழ்வுகளில் அவர்களின் பண்பாட்டுடை ஒருமைபாட்டை நாம்பார்க்கின்றோம். தமிழர்களிடம் எல்லாம் இருந்தும் தமிழ்ப்பண்பாட்டு வழிபாட்டு நிகழ்வுகளில் தமிழ்சார்ந்த பண்பாட்டு நிகழ்வுகளில் கூட ஒருமைப்பாடான அடிப்படை உடைப்பண்பாடு கூட வழக்கப்படுத்தாமை பெரும் குறையாகும். எம்மை உலகத்தவர்கள் இந்தியர் என்று எண்ணுவதா சிங்களவர் என்று எண்ணுவதா இதனைப்போக்க தமிழர்என்ற அடையாளத்தை முன்னிறுத்த இதுவும் அடங்கியிருப்பதை  உணர்வோம்.

திருவள்ளுவர் குருபூசை காலத்திற்கு முன்பாக உங்கள் வீடுகளில் திருக்குறள் நுாலும் திருவள்ளுவர் படமும் இல்லாத தமிழ் அன்பர்கள்   உங்கள் உறவுகள் நட்புகளின் தொடர்புகளைப்பயன்படுத்தி வான் அஞ்சலில் ஆதல் பெற்றுக் கொள்ளுங்கள். தமிழர் வீடுகளில் திருக்குறள் நுாலும் திருவள்ளுவர்படமும் இருப்பதை வழமையாககொள்ளும் ஒரு முன்யோசனைதனை முன்வைக்கின்றோம். இதனால் முடிந்தளவில் இந்த திருவள்ளுவர் குருபூசை காலத்திலிருந்து உலகத்தமிழர்கள் இதனைக்கடைப்பிடித்தால் எங்கள் பிள்ளைகள் தமிழர்கள் என்று நாம் வாழ இவை அடிப்படையானவை என்ற ஒருநிலைப்பாட்டை உணர்வார்கள் என்பதை உலகத்தமிழர்கள் இக்காலத்தில் உணர்ந்து கொள்வோமாக.

திருவள்ளுவர் குருபூசைதனை செய்து கொள்வதற்காக சிவன் கோவிலிருந்து கோரிக்கை வந்தபோது எல்லா நிலையிலிருந்தும் பலமுறை எண்ணிப்பார்த்து புதிய தலைமுறை யினர் இளையவர்கள் திருவள்ளுவரை அறிந்து போற்றி திருக்குறள் நுாலினை இயன்றளவு கற்று அதன் கருத்துகளை தமது மனதிலிருத்தி வாழ்வதற்கு இருக்கும் நடைமுறையில் இதனைச் செய்யலாம் என்ற நிறைவான விருப்பமுடன் இதனை  ஈராண்டுகளாக சிவன்கோவிலில் திருவள்ளுவர் குருபூசையில் மாணவர்களை இணைத்துவருகி்றோம். இந்த ஆண்டு எல்லா தமிழ் அன்பர்களும் இயன்றளவு பங்குபற்றி தமிழியத்திற்கும் தமிழிற்கும் பலம் சேர்ப்போம் என்று  உறுதி எடுப்போமாக.

கேரளமாநிலத்தில் மட்டும் திருவள்ளுவருக்கு 42 கோவில்கள் அமைத்து திருக்குறள் ஓதி வழிபட்டு வருகின்றார்கள். தமிழுக்கும் சைவசமயத்திற்கும் தொணடாற்றிய நாயன்மார்கள் 63 பேருக்கும்  குருபூசை செய்யும் தமிழர்கள் அவர்களைக்கடவுள் ஆக்வும் இல்லை அவர்களை வைத்து சமயங்களும் உருவாக்கவில்லை. திருவள்ளுவரை கடவுள் ஆக்கி சமயம் மார்க்கம் உருவாக்காமல் தமிழர் நெறியினை தமிழிய எண்ணங்களை முன்னெடுபதில் எந்ததவறுமில்லை என்பது திண்ணம்.

திருவள்ளுவர் ஒரு சிறந்த நடுநிலையாளர்  எந்தக்கடவுளின் பெயரையும் எந்தமொழியின் பெயரையும் எந்தமதத்தின் பெயரையும் எந்த வேந்தனின் பெயரையும் குறிப்பிடாமலும் ஓர் அரசையோ ஒரு வேந்தனையோ  ஒரு கடவுளையோ ஒரு மதத்தையோ  உயர்ர்த்தியோ தாழ்த்தியோ திருக்குறளை  ஆக்காது  உலகின் பொதுமறையாக பொதுமையாக நடுநிலையாக நின்று உலகிற்கும் எல்லா உயிர்களுக்கும் நன்மையானவற்றை சிறப்பாகச் சொல்லியதால் நீண்டகாலம் திருக்குறள் அரங்கேற்றப்படாமல் இருந்தததைக் குறிப்பிடலாம். இந்த உயர்ந்த அறிஞரை எல்ல அரசுகளும் எல்ல மதங்களும் ஏன் உலகமே பொதுவானவராக அவரை ஏற்று அவரின் நற்கருத்துகளை தமது வாழ்வியலில் பயன்படுத்தி உயர்ந்துவாழ்வதுதான்  சிறப்பான கொள்கையாகும். அவர் தமிழில் திருக்குறளை எழுதியிருப்பதால் தமிழர்நாம் பெருமையுடன் பெருந்தன்மையாக உரிமைபாராட்டலுடன் நின்றுவிடுதல் உயர்ந்த பண்பாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.