குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 14 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூநகரி மற்றும் வெருகல் பிரதேச சபைகளில் மாத்திரம் த.தே. கூ தனியாட்சி ஏனைய இடங்களில்..!

28-29.01.2049.11-12.02.2018-நேற்றய தேர்தல்  நிறைவு டன் த.தே.கூ  மாபெரும் வெற்றியாக சார்பு நிலை  ஊடகங்களால்  காண்பிக்கப்ட்டது  சபைகளை  தனித்தமைக்கக்கூடியளவில்  பூநகரியிலும்  வெருகலும் தான் தனித்தவெற்றியைப்பெற்றுள்ளது.கிழக்கில் முசுலீம்கட்சிகளுக்கு மாகாணசபைகளை விட்டுக் கொடுத்த த.தே.கூ அமைப்பு  வடக்கில் தமிழக்க ட்சிகளுக்கு பிரதேச சபைகளை  விட்டுக் கொடுக்குமா! தமிழர்களின் கட்சிகளின் ஒற்றுமையை  தமிழரசு க்கட்சிதான் காப்பாற்றவேண்டும்.அதிக  இடங்களில் கூட்டாட்சி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றது.

தந்திரமாக வெளியேற்றிய  தமிழ்காங்கிரசை இணைக்க விருப்புதெரிவித்துள்ளது. இதுவும்   தமிழ்ப் பேரவையை உடைக்கும்  தந்திரம் தான்.அத்துடன் தமிழர்வி டுதழலைக்கூட்டணியும் இணையக்கூடாது  என்ற தந்திரமும் தான். அத்துடன் வேறு கட்சிகள் தனித்து திறமையான சபைகளை  நடத்தி விடக்கூடாது என்ற  கபடம் தான். கிழக்கில்  முசுலீம்கட்சிகளுகு்குமாகாண சபைகளை விட்டுக் கொடுத்த த.தே.கூ  வடக்கில் தமிழக்கட்சிகளுக்கு பிரதேச சபைகளை  விட்டுக் கொடுக்குமா! தேர்தலுக்கு முன்னரே  தனித்துஆட்சிகள் அமையாத கூடுதலான சபைகளே தெரிவாகும் என்று குமரிநாடு. இணையம் சுட்டிக்காட்டியிருந்தது.

 

பூநகரி மற்றும் வெருகல் பிரதேச சபைகளில் மாத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஊர்காவற்றுறையில் ஈபிடிபியும் தனித்து ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ளன.

புதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 35 உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

எனினும், 40 உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதாக இன்று மாலை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

திருகோணமலையில்- 02, யாழ்ப்பாணத்தில்- 13, கிளிநொச்சியில் – 03, மன்னாரில் – 02, வவுனியாவில்- 03,  முல்லைத்தீவில் -04, மட்டக்களப்பில்  -05, அம்பாறையில் -03 என மொத்தம் 35 சபைகளை கூட்டமைப்பு இதுவரை வெற்றி கொண்டுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளில் ஈபிடிபியும், இரண்டு சபைகளில் தமிழ் காங்கிரசும் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளன.

எனினும், பூநகரி மற்றும் வெருகல் பிரதேச சபைகளில் மாத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஊர்காவற்றுறையில் ஈபிடிபியும் தனித்து ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 11 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள போதிலும், பெரும்பான்மை இன்றி சமபலநிலையே காணப்படுகிறது.

வட்டார ரீதியாக அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதிலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், போதிய விகிதாசார ஒதுக்கீட்டு ஆசனங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாநகர சபைகள், மன்னார், வவுனியா, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, திருகோணமலை உள்ளிட்ட நகரசபைகள் மற்றும் ஏனைய பிரதேச சபைகளில், எந்தக் கட்சியும் தனித்து ஆட்சிமைக்கக் கூடிய அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 33 சபைகளிலும், தமிழ் காங்கிரசு 2 சபைகளிலும், ஈபிடிபி 1 சபையிலும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளன.

பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு உள்ளக பேச்சுக்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

புதிய தேர்தல் முறை சிறிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களுக்கு சாதகமானதாக இருந்தமையினால், ஆசனங்களைப் பெற்ற அத்தகைய தரப்புகளின் ஆதரவை பிரதான கட்சிகள் நாடத் தொடங்கியுள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.