குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 15 ம் திகதி சனிக் கிழமை .

வன்முறையற்ற தேர்தல்: மகிழ்ச்சியில் சனாதிபதி!!

27.01.2049-10.02.2018-நாட்டில் புதிய தேர்தல் முறையை அமுல்படுத்தியதை எண்ணி தான் மகிழ்ச்சியடை வதாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பொலன்னறுவையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் இன்று ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகின்றமையானது மகிழ்ச்சியளிப்பதாகவும் சனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்னர் தொகுதிவாரியான தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு, விகிதாசார முறையிலான கலப்பு முறையிலான தேர்தல் இம்முறை நடைபெறுவதாக தெரிவித்த சனாதிபதி

இதன்மூலம் வன்முறைகள் குறைக்கப்பட்டு, மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த உள்ளூராட்சி சபை தேர்தலானது சுதந்திரமாகவும், மகிழ்ச்சியுடனும், அச்சமின்றி, யாருடைய தலையீடுமின்றி வாக்களிப்பதற்கு மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் சனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர், அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்த சனாதிபதி

மக்களின் மும்முரமான வாக்களிப்பின் மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நம்பிக்கை மட்டும் தானே!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.