குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 14 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பிரதேச சபைத்தேர்தல் வேட்பாளர்களின் கொள்கைவிளக்கமளித்தலும் மக்களாதரவு திரட்டலும் நிறைவு.

26.01.2049- 08.02.2018-இலங்கையின் பிரதேச சபைகளுக்கான தேர்தல் 10.02.2018 காரிக்கிழமை நடைபெறவிரு க்கிறது. இதற்காக 2 மாதகாலம் வேட்பாளர்கள் தமது நிலைக்கொள்கைகளை விபரிக்கவும் மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளன அவற்றில் தம்மால் எவ்வாறுதீர்க்க முடியும் தீர்க்கமுடியாதவற்றை எப்படித்ததீர்ப்பது என்பவற்றை பட்டியலிட்ட எந்த வேட்பாளர்களையும் காணமுடியவில்லை.

பிரதான மான கட்சிகள் கூட இதனைச்செய்யாது வசைபாடும் மரபினையே கடைப்பிடித்தது. இது ஓர் வளர்ந்த இனக்கூட்டத்திற்கான சரியான தேர்தல் பிரச்சார வேலைகளாக இருக்க முடியாது.


ஒரு வட்டாரத்தில் எத்தனை ஊர்கள் உள்ளன அந்தஅந்த ஊர்களில் எத்தனை மக்கள் தொகையினர் உள்ளனர் அவர்கள் எந்தவகையான  வருமானங்களைப் பெறுகின்றனர் வருமானங்கள் பெறமுடியாதவர்கள் வீடுகள் தொழில்கள் கல்விகற்பதற்கான  போதிய வசதிகள் போக்குவரத்து வசதிகள் சுகாதார வசதிகள் பொதுக்கழிவறைகள் நுால் நிலையங்கள் வீதிகள்  தொழிகள் குளங்கள் அணைகள் கால்நடை வளர்ப்புக்கான உதவிகள் குடிநீர் வசதிகள் சுடுகாடுவரையான அனைத்தும் இவற்றை எப்படி நிறைவு காண்பது அழகான வசதியான கிராமங்களை  மக்களின் வாழ்க்கை வசதிகளை எப்படி எப்படி வளப்படுத்துவது என்பவற்றை பட்டியல் இட்டு அவற்றை கிராமமக்களுக்கு எப்படிப்பெறுவது என்ற யோசனைகளை முன்வைத்தல் தான் உள்ஊர் தேர்தல் பிரச்சார வேலைகளாக  இருக்கமுடியும். இவையா நடந்தன???


துரோகி என்ற செலவில்லாத பட்டங்களை கட்சிகள் ஆகிய பல்கலைக்கழகங்கள் வழங்கின  வேலிச்சண்டைப்புதினம்பார்க்கும் பார்வையாளர்கள்  கைதட்டி விசிலடித்து ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். பிரதேச சபைக்கு தொடர்பில்லாத அரசியல் அதிகாரங்கள் உரிமைகள் தாராளமாகப் பேசப்பட்டன  நடப்பது பாராளமன்றத்தேர்தலா  மாகாணசபைத்தேர்தலா என வாயைப்பிளக்குமளவிற்கு அனல்பறந்தன.


சில கட்சிகள் சில கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களை நடக்கவிடாமல் சதிநடவடிக்கைகள் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.இருந்தாலும் தமது கட்சியின் கூட்டங்களை நடத்துவது கட்சிகளின் செயற்பாட்டாளர்களின் தலைமைகளின் திறன்களைப்பொறுத்தது.


கிழக்குமாகாணத்தில் தேசியக்கூட்டமைப்பில் வாய்ப்புகிடைக்காமல் சுயேட்சையாக  களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. இது இலங்கை இந்திய அரசியலில் இருந்துவரும் தவறான நடைமுறைகள் முறைகேடுகள் என்று இதனைக்கூறுவார்கள்.


பல இடங்களில் புதியகட்சிகள் புதிய கூட்டணிகள் கூட்டங்களை  நடத்தவில்லை  மக்களிடம் செல்ல வில்லை. இதனைப்பார்க்கும் போது இலங்கையில் எதிர்க்கட்சியில்லாத பாராளுமன்ற ஆட்சி போன்று எதிர்தரப்பு இல்லாதது சரியான போட்டியில்லாது பழையகட்சிகள் அப்படியே வெல்லாம் இதுதான்வழமையாக நடைபெறும் தமிழர்தரப்பு தேர்தல்களாகும்.


தேர்தல் நாளில் மதுபானக்கடைகள் மூடிவிட அரசு முடிவுசெய்துள்ளது. நல்லதுதான் உள்ஊர்களில் மதுபானக்கடைகள் என்றில்லை. கறுப்புச்சந்தையில் கறுப்பு வணிகர்களால் சாராய விற்பனைகள் நடைபெறுவதுவழமை இதை எவர் மூடமுடியும்.

காவோலைக்கடைகளும்  முளைக்கும். காவோலைக்கடையென்றால் விழுந்த பனையோலைக்குக்கீழ் சாராயப்போத்தல் பை இருக்கும் இருவர்பேசிக்கொண்டு செல்வதுபோல் சென்று பனைநிழலில்  இருந்து பேசுவது போல் இருக்கும் சற்று நேரத்தில் உசாராகப்பேசுவார்கள் அப்போதுதான் புரியும் காவோலைச்சாராயக்கடை நடக்கென்று உணரலாம் எனவே இவற்றையெல்லாம் தடுப்பதென்றால் பச்சசை  மட்டை அடித்தண்டனைக்காலம் தான் சரி மற்றும்படி இப்படியான இசக்குப்பிசக்குகளை எவரும் ஒன்றும் செய்யமுடியாது.

இதைவிட தமிழ் நாட்டு தேர்தல் மாதிரி பணப்பட்டா விளையாட்டு செய்யவும் சில கட்சிகள் தயாராக  இருப்பதாக தகவல்கள். இவை வதந்தியா அல்லது உண்மையா எனக் கூறுமுடியாது உள்ளது. உள்ஊர் தேர்தல் என்பதால் பெரிய விறுவிறுப்பை காணமுடியவில்லை என்பதே தற்போது செய்திகளாகவுள்ளது.

கட்சிகளில் வேட்பாளர்களில் சலிப்பான மனநிலையில் மக்கள் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன இதனால் உசாராகச் செயற்பட்ட கட்சிகள்  நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.

நகரமையங்களின் தேர்தல் முடிவுகள் வேறாகவும் கிராமங்களின் முடிவுகள் மாறுபட்டதாக இருக்கும் ஏனென்றால் முதலாம் கட்டதலைவர்களின் தாக்கம் நகரங்களில் இருக்கும் கிராமங்களில் மக்கள் பழக்கப்பட்ட கட்சியை  ஆதரிப்பவர்களாகவே  இருக்கின்றார்கள் இதனை மாற்றும் திறனாளர்கள் கிராமங்களில் செயற்பட்டதாகவும் தகவல்கள் இல்லை.


எதோ இன்றுடன் அவை எல்லாம் நிறைவு. மக்கள் உண்மைகள் எதனைப்பற்றியும் எண்ணாது  உணர்ச்சியிலும் தனிநபர் சுயநலத்திற்கும் ஆட்பட்டு வாக்களிக்க காத்திருக்கின்றனர். பலர் தேர்தலன்று செலவில்லாத மது அருந்தக்கா த்துக்கிடக்கின்றனர். வேலைக்காக காத்திருப்போர் இந்தக்கட்சியை  ஆதரித்தால் வேலைகிடைக்கும் அந்தக்கட்சியை ஆதரித்தால் வேலை கிடைக்கும் என்ற நிலையில் உள்ளார்கள்.


எதோ திரட்சியான வாக்கு எந்தக்கட்சிக்கு செல்கின்றதோ அந்தக்கட்சியே பிரதேச சபைகைளை கைப்பற்றும் என்ப துநியதி. அந்தநியதியின் முடிவு காரிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து வெளியாகும் என தேர்தல்  திணைக்களம் அறிவித்துள்ளது அதனை அறியக்காத்திருப்போம். மக்கள்  சுறுசுறுப்பாக வாக்களிக்கவேண்டும் இது நல்ல சனநாயகவழிகளுக்கு அடிப்படையாகும்.


பூநகரி பொன்னம்பலம்.முருகவேள் ஆசிரியர். சுவிற்சர்லாந்து 07.02.2018

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.