குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 14 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தேர்தல் களம் - பட்டறிவு அறிவும் முதுமையும் இளமையும் முற்றிலும் வேறானவை.

25.01.2049-25.02.2018-தேர்தல் பற்றி ஒன்றுமே கதைக்காமல் இருப்பதே மேல் என்றுதான் இருந்தேன். ஆனால் புலம்பெயர்ந்து இருந்தாலும் தமிழர் வாழ்வியல் மற்றும் மக்களின் அபிலாசைககள் என்றும் எம்மைச்சுற்றி வலம்வந்துகொண்டே இருக்கும். இது எந்த ஒருகட்சியையும் தாக்கியோ ஆதரித்தோ எழுதவில்லை. நாங்கள் அன்றாட வாழ்க்கையில் கண்ட கடந்து வந்த அனுபவங்களின் வெளிப்பாடே.

மனதில் பதிந்த அண்ணன் புதுவையின் சில வரிகள் - எண்பதுகளில் இருந்து ஒரே செய்திதான். அதே கவிதை இப்பவும் பொருந்துகிறது என்றால் நாம் எங்கே செல்கிறோம்.


பூவரசம் வெளியும் புளினிக் குஞ்சுகளும் புத்தக மனம்பதிந்த வரிகள்


வாக்கு கேட்பவர் வாசலில் வந்தனர்

வந்து நின்றொரு கும்பிடு போட்டனர்

தாக்கு தாக்கென சிங்கள மக்களை

தாக்கியே மேடையில் சன்னதம் ஆடினர்


தம்பிமாரையம் பதவியில் ஏத்தினர்

தாறுமாறென வண்டியில் ஓடினர்

......

......


நாக்கினால் ஒரு நாடகமாடினர்

நல்ல தமிழிலே மேடையில் பேசினார்

தூக்கு மேடையே துச்சமென்றொதினர்

துள்ளி எழுந்தனர் பேசினர் போயினர்


எனது அவதானிப்புகளும் எனது அறிவுக்கு எட்டிய சில அறிவுரைகளும்

(1) முதலாவதாக சகல கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியே மேடை பேச்சை அலங்கரிக்கின்றனர். அதை விடுத்து தங்கள் பலத்தினை தங்கள் கொள்கையினை பேசி மக்கள் மனதை ஈர்க்க முன்வரவேண்டும்.

(2) புலி என்றால் பேதி போகுமளவிற்கு பலமாக இருந்த காலத்தில் கிடைக்காத தமிழீழமோ அல்லது எமது விடுதைலையோ அல்லது அரசியல் தீர்வையோ இனி சிங்கள தேசம் இணங்கும் , இணங்க வைப்போம் என்று பொய்யாக மக்களை நம்ப வைத்தது காலங்களை கழிக்காமல் , மக்களுக்கு எதாவது பயன் பெறக்கூடிய வகையில் பெறக்கூடியவற்றை பெற்று மக்களின் அன்றாட வாழ்வியலை மேம்படுத்துவதே சிறந்தது. (சர்வதேச தலையீடு அழுத்தங்கள் இல்லாமல் இலங்கை அரசு சமயக்குரவரில் ஒருவர் சொல்லி எமக்கு தீர்வினை தரும் என்பது பகற்கனவே)

(3) கால மாற்றங்களுக்கு ஏற்ப , சமுதாய சந்ததி மாற்றங்களுக்கு ஏற்ப , உலக மாற்றங்களுக்கு ஏற்ப எம்மை மாற்றிக்கொள்ளாமையே எமது பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்று. பழைய பல்லவி பாடிக்கொண்டிருந்தால் நாம் இப்படியே தான் இன்னும் பல வருடங்கள் இருக்கவேண்டும். அந்தக்காலத்தில் நயின்றி (90) என்று அன்பாக அழைக்கப்படடவர்கள் தலைமை தங்கினார்கள். சரி நயின்றி போக சரிவருமென்றால் இப்ப சிஸ்ட்டி (60) நயின்றி ஆகிறது போர்ட்டி (40) சிஸ்ட்டி (60) ஆகிறது. இளம் இரத்தம் கலக்க வேண்டுமென்று மேடையில் பேசினால் போதாது. அவர்களையும் உள்வாங்கி அவர்களை, அவர்களை சிந்தனைகளையும் தட்டிக்கொடுக்க வென்றும். மாறாக சில வயது முதிர்ந்த அனுபவசாலிகளும் இளையோரை கிண்டலடிப்பது மவேதனையை தருகிறது. அனுபவம் என்பதும் அறிவென்பது முதுமையால் வருகின்றவை என்பது முற்றுமுழுதான மடத்தனம்.

(4) கட்சிகள் , தலைவர்களை அடையாளம் காணும்போது , அவர்களின் முன்னைய வாக்குறுதிகளில் ஒரு வீதமாவது செய்தார்களா என்று பாருங்கள். வெறுமனே பொய்ப்பிரச்சார வானவேடிக்கை வரிகளை நம்பி வாக்களிக்க வேண்டாம் என்பது எனது கருத்து. கேட்டு கேட்டு புளிச்ச கதைகள் , ஒரே பொய்யை வரியை மாற்றி ஆளை மாற்றி சொல்லுகிறார்கள். யாராவது சகல கட்சிகளின் காணொளிகளை பதிவு செய்து வைத்தது மீண்டும் ஓரிரு மாதங்களுக்கு பின்னர் அவர்களுக்கே போட்டு காட்டுங்கள்.

(5) யாராவது தேர்தலில் வெல்லவேண்டுமானால் முதலில் மக்களை மனதை வெல்லுங்கள். மக்களுக்குள் இறங்குங்கள். அவர்களுக்காக வாழுங்கள். உங்களை அற்பணியுங்கள். வெற்றி உங்களுக்கே. முப்பது வருட போராட்டத்தில் செல்விழுந்து மாங்கொப்பு முறிந்து விழுந்து அதன் கீறல்கள் கூட இல்லாதவர்கள் , கந்தக மணம் நுகராத இரு துளைகளை கொண்டவர்கள் , பங்கருக்குள் ஒருமுறை தன்னும் இறங்காதவர்கள் எமது மக்களின் அபிலாசைகளை புரிந்து அவர்களுக்காக வேலைசெய்வார்கள் அல்லது அரசியல் சுதந்திரம் பெற்று கொடுப்பார்கள் என்றால் அவர்களை நம்பி இன்னொரு தசாப்தத்தினை தொலைத்து விட்டு மீண்டும் நடுத்தெருவுக்கு வாருங்கள். இதுவே எமது விதி. காலத்தின் சதி என்று கண்மூடிக்கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.

எந்த கட்சியில் இருந்தாவது நல்ல மக்கள் தொண்டனை , நல்ல வைராக்கியம் கொண்ட தலைவனை , நினைத்ததை முடிப்பவனை , அரசியல் பேரம் போகாமல் பதவியை துறக்க துணிந்தவனை மக்களுக்காக உழைக்க கூடிய ஒருவனை தெரிவு செய்து வாக்களியுங்கள். அதே மாதிரி இது அனைத்தையும் கொண்ட கட்சியையும் ஆதரியுங்கள் வாக்களியுங்கள். ஏனோ தானோ என்று சும்மா பொய் பழைய ஞாபகத்தில் புள்ளடி போட்டுவிட்டு வராதீர்கள். சிந்தித்து வாக்களியுங்கள். இளையோர் முதியோர் , படித்தவன் படிக்காதவன், அறிவாளி அனுபவசாலி என்று ஏமாறாதீர்கள். வயது வேறுபாட்டினை கட்சியிலோ போட்டியாளரிடமோ காட்டாதீர்கள் , வயதிற்கான மரியாதையை உங்கள் வீட்டு பெரியவர்களிடம் தொடங்குங்கள். அவர்களை முதியோர் இல்லங்களில் விடாமல் வீட்டில் வைத்து பராமரியுங்கள். இதுவே வயதிற்கு நீங்கள் காட்டும் மரியாதையை. இதனை தேர்தலில் காட்டிடாதீர்கள்.

நன்றி.

கு.பார்த்தீபன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.